Enable Javscript for better performance
இணைய வெளியினிலே...- Dinamani

சுடச்சுட

  

  இணைய வெளியினிலே...

  Published on : 14th March 2020 09:42 PM  |   அ+அ அ-   |    |  

  im4


  முக நூலிலிருந்து....

  நேற்றைய ஆடம்பரம்
  இன்றைய அத்தியாவசியம்!

  நேசமிகு ராஜகுமாரன்

   

  யாரைப் பிரிந்த பின் உன்னால் எப்போதும் போல் இயல்பாக இருக்க முடியவில்லையோ...
  அவர்கள்தான் உன் இதயம் என்று புரிந்து கொள்.

  திருப்பதி ராஜா


  கற்பிக்கப்பட்ட வரலாறுகள் எல்லாவற்றையும்...
  மாற்றி அமைக்கின்றன பயணங்கள்.

  உமாநாத் செல்வன்

   

  சந்தோஷத்தில் அதிகம் எகிறிக் குதிப்பவனே சிறுதுயரிலும் துவண்டு விழுகிறான்.
  துய்த்தலில் நிதானம் கடைப்பிடிப்பவனோபெருந்துயரிலும் சுடராய் எழுகிறான்.
  உணர்வுகளில் சமச்சீர்த்தன்மை உடலையும் பேணுகிறது. 
  நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை விரட்டுகிறது.
  சந்தோஷமோ, துக்கமோ அஞ்சு நிமிஷம் மனசுக்கு வெளியிலேயே காக்க வைப்போம். 
  அதன் சூடு ஆறிய பிறகு உள்ளே அனுப்புவோம்.

  பெ. கருணாகரன்


  கூழானாலும் குளித்துக் குடி...
  கூழாக்கவும் குளிக்கவும் தண்ணீர் கொடு

  வானரசன் கோமதி

   

  சுட்டுரையிலிருந்து...

  தொட்டால் உடையக் கூடும்
  தொடாமல் ரசித்துக் 
  கொண்டிருக்கிறேன்...
  இன்னும் கொஞ்சம் நீளட்டும்
  அந்த நீர்க்குமிழியின் ஆயுள்...

  யாது

   

  தடிமனாக தங்கச் சங்கிலி அணிந்திருக்கும் நபர் தம் சட்டையின் மேல் பட்டனைத்  திறந்து வைத்திருப்பது ஒரு விளம்பரத்திற்காகவே! 

  கோழியின் கிறுக்கல் 

   

  உணர்ச்சிகளுக்கு அடிமையான மனிதன்...
  பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான்.
  ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.

  சோலை ராஜா


  உளிகளை அங்கீகரிப்பதில் கவனமாயிருங்கள்...
  அத்தனை உளிகளும் சிற்பம் செதுக்குவதில்லை.
  விமர்சனத்தையும் உலகம் உளியென்றேயழைக்கிறது!

  பனித்துளி


  வலைதளத்திலிருந்து...

  மங்குனி அமைச்சர்க்கு இன்டர்வியூ. கூட நானும் போயிருந்தேன்... பைல் புல்லா சர்டிபிகேட்ஸ்... (ஸ்போர்ட்ஸ் கோட்டானு நெனச்சிக்காதீங்க...  எல்லாம் கோட்டு அடிச்சி... கோட்டு அடிச்சி  பாஸ் பண்ணினது )
  இன்டர்வியூ முடிச்சி வெளியே வந்த  மங்குனிகிட்ட...
  "" மங்கு... என்ன ஆச்சு? ''
  "" மார்க்கெல்லாம் ரொம்ப கம்மியா  இருக்குனு சொன்னாரு''
  ""அது தெரிஞ்சது தானே... அதை விடு  நீ ஒரு பிரபல பிளாக்கர்னு சொன்னியா?  இல்லியா?''
  "" சொன்னேன்.. பன்னிக்குட்டி ராம்சாமி,  கோகுலத்தில் சூரியன் வெங்கட் எல்லாம்  என் ப்ரெண்டுனு சொன்னேன்''
  "" அப்புறம் ? ''
  ""அதை கேட்டதும் அவர் முகத்துல ஒரு  பிரகாசம் 
  தெரிஞ்சது ''
  ""சரி.. நெக்ஸ்ட்  ''
  "" ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் எல்லாம் போடுவேன்,   ரெண்டு க்ரூப்புக்கு அட்மினா இருக்கேனு  சொன்னேன்''
  ""சூப்பரு... இதுக்கு என்ன சொன்னாரு?''
  ""அந்த 3வது சிஸ்டம்ல போயி உக்காருங்கனு  சொன்னாரு!''
  ""வாவ்... ட்ரீட் எப்ப மங்குனி?''
  ""அட முழுசா கேளுயா?''
  ""சொல்லு''
  ""வந்ததுக்கு அதுல அரைமணி நேரம்  ஆழ்ர்ஜ்ள்ண்ய்ஞ் பண்ணிட்டு ஓடிப் போயிடுனு  சொல்லிட்டான்யா''
  "" ஙே...!!! '' 
  https://gokulathilsuriyan.blogspot.com/

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai