வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 233

ஊரடங்கு உத்தரவு  பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 233

ஊரடங்கு உத்தரவு  பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி வரலாற்று புதினங்கள் தொடர்ந்து எழுதி மனம் பேதலித்துப் போனவர். தன்னை சோழப்பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அவருடன் இருவரும் உரையாடி இரவைக் கழிக்கிறார்கள். அப்போது ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாக சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாக பதிலளித்தால் அவன் தலை தப்பும். 

வீரபரகேசரி: நல்ல பதில் அளித்தாய் தம்பி. ஆனால் இந்த millstone around the neck என்பதில் மில் ஸ்டோன் என்றால் தமிழில் என்ன தெரியுமா? 
கணேஷ்: அரவைக்கல் மன்னா.  
வீரபரகேசரி: மிக நல்லது. அடுத்து ஒரு மிக எளிய கேள்வி கேட்கிறேன். மந்திரியாரே ... 
மந்திரி: மன்னர் மன்னா! 
வீரபரகேசரி: நேற்று ஒரு வழக்கைப் பற்றி குறிப்பிட்டீர்களே... அந்த நாட்டு வெடிகுண்டு... 
மந்திரி: ஆமாம் மன்னா 
வீரபரகேசரி: அதை தெளிவாக எடுத்துக் கூறும்  மந்திரி: Yesterday two miscreants on a bike hurled a country-made bomb at a passing car near a police station in Anna Salai. நமது படையினர் அவர்களைக் கைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தான் இனிமேல் விசாரிக்க வேண்டாம், கழுத்தை வெட்டி விடுங்கள் என உங்கள் ஆணை வந்தது மன்னா. 
வீரபரகேசரி: ஆம்... அது எனது கொள்கை } குற்றவாளிகள் தாமாக குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும், விசாரணைக்குப் பிறகு ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டு அவர்களின் தலையை யானையை வைத்து மிதிப்போம். விசாரணைக்கு முன்பே ஒப்புக் கொண்டால் they will be hung to death. 

கணேஷ்: ஒப்புக் கொள்ளாவிட்டால்? 
வீரபரகேசரி: தலையை வெட்டி விடுவோம். சரி உன் மூன்றாவது கேள்வி இப்போது ஆரம்பிக்கிறது: hurl a bomb என்பதற்கும் throw a bomb என்பதற்கும் என்ன வித்தியாசம்?
கணேஷ்: ரெண்டுமே எறிவது தானே? 
வீரபரகேசரி: மரண தண்டனை ஒன்று தான் } அதற்காக வெட்டிக் கொல்வதும் சுட்டுக் கொல்வதும் ஒன்றா?
கணேஷ்: ஐயோ மாட்டிக் கிட்டேனே... 
புரொபஸர்: தெரிந்த பதிலைச் சொல்லு. 
கணேஷ்: ம்ம்ம்ம்.... hurl என்றால் மூர்க்கமாக கோபமாக வீசுவது. throw என்றால் சும்மா வீசுவது. சரிங்களா? 
வீரபரகேசரி: இல்லை தப்பு, ஆனால் கிட்டத்தட்ட சரி. 
கணேஷ்: மன்னியுங்கள் வேந்தே... 
வீரபரகேசரி: மன்னிக்கிறதெல்லாம் இருக்கட்டும். Hurl என்றால் வேகமாய் ஆற்றலுடன் வீசுவது. To throw something 
forcefully. அதே போலத் தான் மூர்க்கமாய் ஒரு வசையை சொல்வதையும் hurl என்பார்கள். கேள்விப்பட்டிருக்கியா? 
கணேஷ்: ஆமா... ஆனால் மன்னா எனக்கு ஒரு சந்தேகம் - ற்ட்ழ்ர்ஜ் என்பதுக்கு இந்த பொருள் எல்லாம் வராதா? 
வீரபரகேசரி: ஏன் வராது? Throw என்றாலும் ஒரு பொருளை ஆற்றலுடன் ஒரு திசை நோக்கி வீசுவது எனத் தான் பொருள். ஆனால் குண்டு வீசுவதைப் பொறுத்த மட்டில் பொருத்தமான சொல்லாக hurl தான் இருக்கிறது.  
ஜூலி: You also throw up when you have a tummy upset - அதாவது வாந்தி எடுக்கிறது. And if someone throws up on you you can throw a punch at them. 
வீரபரகேசரி: Yes, to throw a punch என்றால் ஒரு குத்து விடுவது எனப் பொருள்.  
ஜூலி: அதே போல you throw a glance. அதாவது ஒரு பார்வையை வீசுவது. You get up from bed in a hurry, throw on your tracksuit and go for a short run before you return for a
healthy breakfast.  

வீரபரகேசரி: ஆமாம், அவசரமாக ஆடையை அணிவதையும் throw on a dress என்று சொல்லலாம். அவசரமாக ஆடை கழற்றுவதற்கு என்ன தெரியுமா?
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com