வேலை... வேலை... வேலை...

31.01.2020 தேதியின்படி திட்ட பொறியாளர் பணிக்கு 37 வயதுக்குள்ளும், திட்ட மேலாளர் பணிக்கு 50 வயதிற்குள்ளும்  இருக்க வேண்டும். 
வேலை... வேலை... வேலை...

கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 

மொத்த காலியிடங்கள்: 132
பணி: Project Manager  - 10
பணி: Project Engineer - 122
வயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி திட்ட பொறியாளர் பணிக்கு 37 வயதுக்குள்ளும், திட்ட மேலாளர் பணிக்கு 50 வயதிற்குள்ளும்  இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் எம்இ, எம்.டெக்,. பி.எச்டி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
விண்ணப்பிக்கும் முறை: https://cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://cdac.in/index.aspx?id=ca_noida_recruit_Feb2020 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.03.2020


எல்லை பாதுகாப்புப் படையில் வேலை 

மொத்த காலியிடங்கள்: 317
பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: SI (Master)  - 05
பணி: Engine Driver - 09 
வயது வரம்பு: 22 வயது முதல்  28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Workshop - 03 
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400
பணி: HC (Master)  - 56 
பணி: HC (Engine Driver)  - 68
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100 
பணி: HC (Workshop)  - 16
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100 
பணி: CT (Crew)  - 160
சம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100
வயது வரம்பு: 20 வயது முதல்  25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் சர்டிபிகேட் வைத்திருப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிகல், ஆட்டோமொபைல், மரைன் போன்ற துறைகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் தொடர்புடைய  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான  தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு,   உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய :
www.bsf.gov.in அல்லது http://bsf.nic.in/doc/recruitment/r0118.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2020 

தமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலை

மொத்த காலியிடங்கள்: 600
பணி: Assistant Engineer (AE) 

துறைவாரியான காலியிடங்கள்: 

1. மின்னியல் (Electrical) - 400

2. இயந்திரவியல் (Mechanical) - 125

3. கட்டடவியல் (Civil) - 75 

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களும், ஆள்குறைப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட அரசுத் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக எஸ்சி, எஸ்டி, விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள்  35 வயதுக்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவினர்
32 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.  
சம்பளம்: மாதம் ரூ.39,800 - 1,26,500 
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்:  ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவினர் ரூ.1000, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.  
விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
எழுத்துத் தேர்வு, கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியன குறித்து www.tangedco.gov.in எனும் வெளியிடப்படும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2020 


நேஷனல் அலுமினியம் கம்பெனியில்  வேலை

பணியிடம்: புவனேஸ்வர்
பணி: மேலாண்மை (நிதி) - 08
சம்பளம்: மாதம் ரூ.40,000-ரூ.1,40,000
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி:  உதவி மேலாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.70,000 - ரூ.2,00,000
தகுதி: வணிகத் துறையில் இளங்கலைப் பட்டம் மற்றும்    சிஏ  முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு:    44 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து,  சுய கையொப்பமிட்ட தேவையான சான்றிதழ்களின் நகலுடன்  கீழ்க்காணும் முகவரிக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி:  Recruitment Cell, HRD Department, National Aluminium Company Limited, NALCO Bhawan, P/1, Nayapalli, Bhubaneswar — 751013, Odisha. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://nalcoindia.com/wp-content/uploads/2020/02/Recruitment-of-Management-Trainee-Asst.-Manager-For-Finance-Discipline.pdf சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2020
அஞ்சல் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி: 25.3.2020

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை 

பணி: ஆய்வக உதவியாளர்  - 01 
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி:  வேளாண்மை/ தாவரவியல்/ உயிரி அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். முன் பணி அனுபவம் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில்  தளர்வு அளிக்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR - IARI, Regional Station, Wellington 643 231. 

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ண்ஹழ்ண்.ழ்ங்ள்.ண்ய் என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து, மார்ச் 18 -ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கும் போது தர வேண்டும்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/BRNSTech_Wellington_25022020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.03.2020 காலை 10.00 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com