கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் கருவி!

2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சீனாவில் கரோனா வைரஸின் தாக்கம் தொடங்கிவிட்டது. தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் கருவி!

2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சீனாவில் கரோனா வைரஸின் தாக்கம் தொடங்கிவிட்டது. தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது. தொற்று வைரஸ் என்பதாலும், இதற்கு தடுப்பு மருந்துகள் இல்லை என்பதாலும் மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது. எனினும், கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவுவது, கைகளை முகத்துக்கு அருகே கொண்டு செல்லாமல் இருப்பது போன்ற செயல்களால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்கலாம் என்று மருத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 ஆனால், உடல் அசைவில் இருந்தாலே முகப் பகுதிக்கு கைகள் செல்வதைத் தடுப்பது கடினமான காரியமாகும். கைகளைக் கட்டாமல் இது சாத்தியமில்லை என்றே கூறலாம். இந்தப் பிரச்னைக்கு அமெரிக்காவின் "ஸ்லைட்லி ரோபட்' என்ற நிறுவனம் "இம்முடச்' என்ற கையில் அணியும் பட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதை அணிந்து கொண்டு நமது கைகளை கண், வாய், மூக்கு பகுதிகளுக்கு கொண்டு சென்றால் உடனடியாக எச்சரிக்கை அதிர்வை அளிக்கும். இந்தப் பட்டையை ஸ்மார்ட் போன் செயலியுடன் இணைத்துவிட்டால் ஒரு நாள் முழுவதும் சராசரியாக எத்தனை முறை நாம் கைகளை முகத்தின் அருகே கொண்டு சென்றோம் என்ற விவரங்களையும் பார்த்துக் கொள்ளலாம்.
 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தலை முடியை இழுத்து கொள்ளாமல் இருப்பதற்காக தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டையை, சற்று மாறுதல் செய்து கரோனாவுக்குப் பயன்படுத்தி உள்ளதாகவும், இதை குறைந்த விலையே விற்க உள்ளதாகவும் "ஸ்லைட்லி ரோபட்' நிறுவனர் மேத்திவ் தெரிவித்துள்ளார். கைகளை மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசியையும் பொதுஇடங்களில் வைத்து விட்டு முகத்தின் அருகே கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டியதும் தற்போதைய நிலையில் அவசியமே.
 அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com