வாங்க இங்கிலீஷ் பேசலாம் 234 - ஆர்.அபிலாஷ்

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 234 - ஆர்.அபிலாஷ்

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி வரலாற்றுப் புதினங்கள் தொடர்ந்து எழுதி மனம் பேதலித்துப் போனவர்.
தன்னை சோழப் பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடன் இருவரும் உரையாடி இரவைக் கழிக்கிறார்கள். அப்போது ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாக சொல்கிறார். அதில் ஒன்பதுக்குச் சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். ஒவ்வொரு கேள்வியாக கேட்டு வரும் போது throw எனும் சொல்லை ஒட்டின சொற்றொடர்களை விவாதிக்கிறார்கள். அப்போது ஒரு கேள்வி எழுகிறது: ஒருவர் வேகமாய் ஆடையை அணிவதை throw on a dress என சொல்லலாம்; ஆனால் அதே போல ஒருவர் வேகமாய் ஆடையைக் கழற்றுவதற்கு என்ன சொற்றொடர் உள்ளது? இந்த கேள்விக்கு கணேஷ் பதில் சொல்வானா? அவனது தலை தப்புமா?
கணேஷ்: ம்...ம்...ம்... தமிழில் என்றால் ஆடையை உரிந்து போட்டு விட்டு கிளம்பினான் என சொல்வோம். 
வீரபரகேசரி: நிறையக் கதைகள் படிக்கிறாய் போல?
கணேஷ்: ஆமாம் மன்னா, நான் படிக்கிற நாவல்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பெண் வந்து ஆடையை உரிந்து விட்டு ... சரி அதெல்லாம் எதுக்கு? டேய் கணேஷ் Focus focus ... உரிவதற்கு மொழியாக்கம் என்ன? என்ன என்ன? நான் உதவியை நாடலாமா? 
வீரபரகேசரி: ஓ... தாராளமா. ஆனால் நீ அதற்கு ஈடாக பின்னர் ஒரு சிரமமான கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். பரவாயில்லையா? 
கணேஷ்: பரவாயில்லை வேந்தே.
வீரபரகேசரி: சரி... எர் Go ahead!
கணேஷ்: ஜூலி, நீ சொல்லேன். 
ஜூலி: டங்ங்ப்
கணேஷ்: அடப்பாவி... இதுவா? இது ஏன் என் நினைவுக்கு வரல? 
புரொபஸர்: மொழிபெயர்ப்பு மூலமா சொற்களை நினைவு வச்சுக்கிறது மூக்கை தலையைச் சுற்றி தொடுறது போல. சீக்கிரம் மறந்திடும். 
கணேஷ்: பிறகு? 
புரொபஸர்: நேரடியாகவே நினைவு வச்சுக்கிறது மேல். ஒவ்வொரு சந்தர்ப்பமா அதற்கு ஏற்ற ஒரு சொற்றொடர் சார்ந்து கற்பனை பண்ணி அப்படியே பொருத்திப் பேசறது நினைவில் வச்சுக்க உதவும். ஒவ்வொரு சொல்லும் ஒரு மனித முகம் போல. என்னுடைய முகத்தை நீ இன்னொருத்தரோட முகத்தோட தொடர்புபடுத்தி நினைவு வச்சுக்கிறது சிரமம் இல்லையா? அதை விட என்னோடு உனக்குள்ள அனுபவங்களை உணர்வுரீதியா என்னோட முகத்தோட பொருத்தி யோசிச்சா சட்டுன்னு என் முகம் பதிஞ்சிரும். அதே டெக்னிக்கை தான் சொற்களை நினைவு வச்சுக்கிறதுக்கும் பயன்படுத்தணும். 
கணேஷ்: நன்றி சார். (வீரபரகேசரியை நோக்கி): மன்னா, சொல்லட்டுமா? Peel off. She peeled off her T-shirt after she returned from gym. 
வீரபரகேசரி: நீ சொன்ன பதில் ஒருவிதத்தில் சரி தான். அதாவது நீ குறிப்பிடுகிற சந்தர்பத்துக்கு இது ஏற்றது. ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இது ஏற்ற பதில் இல்லை. 
கணேஷ்: இல்லை மன்னா. சரி தானே? 
(புரொபஸரிடம்) சார், என்ன இப்படி சொல்லுறார்? 
புரொபஸர்: ஆமாடா... அவர் சொல்றது சரி தான். 
கணேஷ்: புரியல சார்.
புரொபஸர்: ஒரு டைட்டான ஆடையை நீ வேகமாகக் கழற்றும் போது அதை உள்ளிலிருந்து வெளியே, inside out, கழற்றுவாய். டி-ஷர்ட்டை பெரும்பாலும் அப்படித் தான் கழற்றுவோம். கையுறையைக் கூட. இந்த சந்தர்ப்பத்துக்கான சொற்றொடர் இது. ஆனால் அவர் கேட்டது சும்மாவே வேகமாய் ஆடையைக் கழற்றுவதற்கு என்ன சொற்றொடர் என்று? 
கணேஷ்: ஓ ... சார் இது எப்படி? Slough off. He sloughed off his overcoat. 
புரொபஸர்: Not bad. ஆனால் இதுவும் கச்சிதமான பதில் அல்ல. Slough off என்றால் தேவையற்றதை உதிர்ப்பது. ஆகையால் அந்த பாணியில் ஒருவர் வெளியே இருந்து உள்ளே வந்ததும் ஒரு குறிப்பிட்ட ஆடை தேவையில்லை எனக் கருதி கழற்றினால் அது sloughing off. நான் உனக்கு ஒரு clue தருகிறேன். 
வீரபரகேசரி: விதிமுறைகளின் படி நீ ஸ்ரீப்ன்ங் கொடுக்க முடியாது. ஆனால் கொடுக்கலாம், ஒரே நிபந்தனை: அடுத்த கேள்வியை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரெண்டு பேர் தலையையும் சீவி விடுவேன். 
புரொபஸர்: சரி, Challenge accepted.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com