பார்வையற்றவர்களின் கண்... இந்த கண்ணாடி!

உலகை மனிதர்களுக்கு காட்டுபவை கண்கள்தாம். மனிதனின் உடலில் முக்கியமான உறுப்பு கண் என்பதால்தான், "தானத்தில் சிறந்தது கண்தானம்' என்கிறார்கள்.
பார்வையற்றவர்களின் கண்... இந்த கண்ணாடி!

உலகை மனிதர்களுக்கு காட்டுபவை கண்கள்தாம். மனிதனின் உடலில் முக்கியமான உறுப்பு கண் என்பதால்தான், "தானத்தில் சிறந்தது கண்தானம்' என்கிறார்கள்.
 பார்வையற்றவர்கள் வெளியே செல்லும்போது சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். ஆகையால், கூகுள் நிறுவனம் பார்வையற்றவர்களுக்கு என செயற்கை நுண்ணறிவு பொருந்திய ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கியுள்ளது. "என்விஷன் கிளாஸஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கண்ணாடிகளைப் பார்வையற்றவர்கள் அணிந்து கொண்டு நடந்தால்போதும், அவர்கள் காணும் பொருள்களின் விளக்கத்தை உடனடியாக ஒலி வடிவின் மூலம் ஸ்மார்ட் கண்ணாடிகள் தெரிவிக்கும்.
 கற்பனை வடிவில் அவர்கள் முன் உள்ள பொருள்களைத் தெரிந்து கொள்ளலாம். பொருள்கள் மட்டுமின்றி, ஹோட்டல்களில் எழுதப்பட்டிருக்கும் சாப்பாட்டு வகைகள், நண்பர்களைக் கண்டுபிடிப்பது என பல்வேறு வகையிலான ஒலிகள் மூலம் இடத்தைக் கண்டுபிடிப்பது போன்றவற்றுக்கும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி உதவுகிறது. 60-க்கும் மேற்பட்ட மொழிகளை வாசிக்கும் திறன் இந்த கண்ணாடிக்கு உள்ளது என்பது சிறப்பாகும்.

பார்வையற்றவர்களுக்குகாக சந்தையில் பல்வேறு வகையிலான கண்ணாடிகள் இருக்கும்போது, கூகுளின் இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் செயல்பாடு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இந்த கண்ணாடிகளைப் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன் விலை சுமார் ரூ. 1.25 லட்சமாகும். அதிக விலையின் காரணமாக இந்தத் தொழில்நுட்பம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எட்டாக்கனியாக மாறிவிடும். ஆகையால், சந்தையில் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் விலையைக் குறைக்க கூகுள் நிறுவனம் முயற்சி மேற்கொண்டால் மட்டுமே இது அனைவருக்குமானதாக இருக்கும்.
 - அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com