மகிழ்ச்சி

ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் வெளித்தோற்றத்திற்குதான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலானோரின் உள் மனது மகிழ்வுடன் இல்லை. அதுவே உண்மை!
மகிழ்ச்சி

ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் வெளித்தோற்றத்திற்குதான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலானோரின் உள் மனது மகிழ்வுடன் இல்லை. அதுவே உண்மை!
 தொலைக்காட்சி பார்ப்பது, வெளியில் எந்நேரமும் சுற்றித் திரிவது, அரட்டை அடிப்பது போன்ற வேண்டாத வேலைகளைத் தவிர்த்துவிட்டு, பயனுள்ள காரியங்களில் உங்களின் உழைப்பை, நேரத்தைச் செலவிட்டால் உண்மையான மகிழ்ச்சி உள்ளத்தில், உங்கள் இல்லத்தில் குடியேறும்.
 திட்டமிட்ட செயல்களில் ஈடுபட வேண்டும். "காலம் பொன் போன்றது' அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சோம்பலைத் தூர விரட்டிட வேண்டும். தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.
 இவ்வாறெல்லாம் இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியுடன் எப்போதும் இருப்பீர்கள் என்பது நிச்சயம்.
 நட்பில் கவனம் தேவை. எல்லா இடங்களிலும், எல்லா சந்தர்ப்பத்திலும் நாம் பலரையும் சந்திக்கிறோம். பேச நேர்கிறது. சில வேளைகளில் அவர்களுடனான சந்திப்பு தொடரவும் செய்கிறது. அதுவே நல்ல நட்பாகி விடுமா?
 அன்பானவர்களும் அறிவாளிகளும் பிறருக்குத் தீமை செய்ய நினைக்காதவர்களுமே நட்பு கொள்ளத் தகுதியானவர்கள். அவர்களைப் போன்றோரிடம் நட்பு பாராட்டினால்,
 எப்போதும் மகிழ்ச்சியே உண்டாகும்.
 மற்றவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது, நல்ல மதிப்பினைப் பெற்றுத் தரும். அன்பாகப் பேசுவது, ஆதரவாக இருப்பது போன்ற விஷயங்கள் உங்கள் உள்ளத்தில் என்றைக்குமே மகிழ்ச்சியை நிரப்பி வைக்கக் கூடியவை.
 கவலை, அச்சம், சந்தேகம் இவை, கொண்டவர்களையே அழிக்கும் வல்லமை கொண்டவை. வாழ்க்கையில் நீங்கள் இவற்றைத் துளியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
 மயிலாடுதுறை இளையபாரதி எழுதிய "எண்ணங்களே வாழ்க்கை'
 என்ற நூலிலிருந்து...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com