வேலை...வேலை...வேலை...(24/03/2020)

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை, நார்தெர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை  
வேலை...வேலை...வேலை...(24/03/2020)

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை
பணி: Assistant Engineer  
காலியிடங்கள்: 78
சம்பளம்: மாதம் ரூ. 37,700 - ரூ.1,19,500
பணி: Environmental Scientist  
காலியிடங்கள்: 70 
சம்பளம்: மாதம் ரூ.37,700 - ரூ 1,19,500 
பணி: Assistant (Junior Assistant) 
காலியிடங்கள்: 38 
பணி: பஹ்ல்ண்ள்ற்
காலியிடங்கள்: 56 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000 
தகுதி: பொறியியல் துறையில் சிவில், வேதியியல், சுற்றுச்சூழல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வேதியியல், உயிரியியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தொடர்பான 6 மாத படிப்பை முடித்தவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுப் பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, விதைகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2020

நார்தெர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 
பணி: Dragline Operator (Traninee) - 09
பணி: Dozer Operator (Trainee) - 48
பணி: Grader Operator (Trainee) - 11
பணி: Dumper Operator (Trainee) - 167
பணி: Shovel Operator (Trainee) - 28 
பணி:  Pay Loader Operator (Trainee) - 06
பணி:  Crane Operator (Trainee) - 21
பணி:  Drill Operator (Trainee) - 17   
தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பிட்டர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 
பணி:  Accountant/ Cost Accountant - 41 
தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
பணி: Overseer Grade-C  - 35 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: AminGrade-D - 10
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Amanat, Surveyorship சான்றிதழ் படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:  Junior Chemist T&S Grade-D - 07
தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.03.2020 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nclcil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.03.2020

புதுச்சேரி சமூக நலத்துறையில் வேலை
பணி: வெல்பர் ஆபிஸர்
காலியிடங்கள்: 48
தகுதி: சமூகவியல், சமூகப் பணி, உளவியல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 
விண்ணப்பிக்கும்முறை : https:/socwelfare.py.gov.in & https://www.py.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
The Director,
Directorate of Social Welfare,
Saradhambal nagar,
Ellaipillaichavady,
Puducherry - 605 005.
மேலும் விவரங்கள் அறிய: https://www.py.gov.in/citizens/recruitments/SOCIAL07022020NOT.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 31.3.2020

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை
மொத்த காலியிடங்கள்: 64
பணி: Assistant - 20 (Assistant In Cooperative Institutions In Cuddalore District (Other Than Cuddalore District Central Cooperative Bank)
பணி: Assistant - 44 
தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.14,000 - ரூ.47,500 
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.cuddrb.in/  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.cuddrb.in/doc_pdf/Notification_2.pdf எனும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2020 
தொகுப்பு: இரா.வெங்கடேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com