கணினியில் எழுதுதல்!

உண்மையில் கணினியின் சிறப்பே, அது தடையில்லாது பொங்கி வரும் உணர்வுநிலைக்கு ஊக்கம் தருகிறது என்பதுதான்;
கணினியில் எழுதுதல்!

உண்மையில் கணினியின் சிறப்பே, அது தடையில்லாது பொங்கி வரும் உணர்வுநிலைக்கு ஊக்கம் தருகிறது என்பதுதான்; மனத்தில் என்னென்ன வருகிறதோ அனைத்தையும் அதே மனவேகத்தோடு நீங்கள் கணினியில் அப்படியே இறக்கிக் கொள்ள முடியும். உங்களுக்குத் தெரியும், அதற்குப் பிறகு அவற்றை எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கேற்ப திருத்திக் கொள்ளலாம்.
வேறுபடுத்தி அமைத்துக் கொள்ளலாம்; ஆனால் கணினியைப் பயன்படுத்திக் கொள்வதில் உள்ள தர்ம சங்கடம் என்னவென்றால், மாற்றி எழுத உள்ள எளிய வாய்ப்பினால் வந்து சேரும்சிக்கல்தான்; அதாவது ஒரு பிரதியைத் திருத்தித் திருத்தி எழுதுவதால் ஏற்படும் வேறுபட்ட பல பிரதிகள் உருவாகிவிடுவதுதான் பிரச்னை.

நீங்கள் எண்ணிக்கையில் அடங்கா அளவிற்குத் திருத்தம் போடுவதற்குத் (தேவை இருக்கிறதோ இல்லையோ) தூண்டப்படுவீர்கள்; கணினியில் எழுதுவீர்கள்; படி எடுப்பீர்கள்; அதை வாசிப்பீர்கள்; திருத்தம் போடுவீர்கள்; போட்ட திருத்தத்தை மறுபடியும் கணினியில் ஏற்றுவீர்கள்; பிறகு அதையும் படி எடுப்பீர்கள்; இப்படியாக வந்து சேர்ந்த வேறுவேறான நகல் பிரதிகள் ஏராளம் நான் வைத்திருக்கிறேன்.

இந்த மாதிரி திருத்தம் போடும் வெறியினால் வேறு வேறு நகல்களை உருவாக்குவதன் மூலம், உங்கள் எழுத்தை மறு உருவாக்கம் செய்து கொள்ளலாம் என்று எண்ணுவது பெருந்தவறாகும். கணினி யுகத்தில் திருத்தம் போடும்போது நீங்கள் மேற்கொள்ளும் "இதுதான்' என்ற தேர்வு, எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியது.

கணினியில் திருத்தம் என்ற பெயரில் மாற்றங்களைச் செய்து கொண்டே இருப்பீர்கள். ஆனால் அடிக்கடி என்ன நிகழ்கிறதென்றால் இறுதியில் தொடக்கத்தில் எழுதிய முதல் பிரதிக்கே திரும்பப் போய் நிற்பீர்கள்.

உம்பர்ட்டோ ஈகோ எழுதிய "நான் எப்படி எழுதுகிறேன்'

(தமிழில்: க.பஞ்சாங்கம்) என்ற நூலில் இருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com