சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் - 98

உலகத் தலைவர்களுக்கு என நாம் தனியாக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். இது போன்ற ஒரு சூழல் ஏற்படும்போது பல்வேறு துறைகளின் உதவியுடன் இவற்றை எவ்வாறு எதிர்நோக்க வேண்டும் என்பதற்காகவே இந்த
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் - 98


உலகத் தலைவர்களுக்கு என நாம் தனியாக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். இது போன்ற ஒரு சூழல் ஏற்படும்போது பல்வேறு துறைகளின் உதவியுடன் இவற்றை எவ்வாறு எதிர்நோக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது கூட வேண்டும். உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த கூட்டங்களில் இதுபோன்ற பேரிடர் ஏற்படும் சமயங்களில் அவற்றை எதிர்கொண்ட அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அவற்றிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோன்ற பேரிடர் உருவாகும் காலங்களில் நாம் என்னவெல்லாம் மேற்கொள்ளவேண்டும் என்பதனை ஒரு கட்டாயக் கல்வியாக உருவாக்க வேண்டும். ஏற்கெனவே பேரிடர் பாதுகாப்பு மையம் என பல்வேறு நாடுகளில் இயங்கி வந்தாலும், மனிதகுல நலத்துக்காக இவர்கள் அடிக்கடி தங்களுடைய அனுபவங்களை மற்றும் சிறந்த நடைமுறைகளை (Best practices) உலக நாடுகள் தங்களுக்கு இடையே தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்: கரோனா கொடிய நோய் எவ்வாறு உருவானது என பல விளக்கங்கள் தரப்பட்டாலும், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இடையே ஒரு colloborative work இல்லை. குறிப்பாக, இந்தக் கொடிய நோயை எதிர்த்து இத்துறையில் உலக அளவில் உள்ள எல்லா மனித வளங்களையும், ஒவ்வொரு நாடும் தமது நாடு கடந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் இக்கொடிய நோயின் பாதிப்புகள் எவ்வாறு மாறுபட்டிருக்கின்றன என்பதனை உணர்ந்து, உலகத்தில் உள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றத் தவறிவிட்டனர்.

ஆங்காங்கே ஒரு சில கூட்டமைப்புகள் இருந்தாலும், ஒட்டு மொத்த மனித குலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு சிறந்த கூட்டுப் பணி (Teamwork) ஏற்படவில்லை என்பது மிக வருந்தத் தக்கதாகும். ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்நோய் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கினாலும், இது சார்ந்த துறையினரின் கூட்டு முயற்சி குறைவாகவே உள்ளது என்பதை இக்கொடிய நோய் நமக்கு உணர்த்தியுள்ளது. இங்கும் குறிப்பாக பயாலஜிக்கல் சயின்ஸ் துறை மட்டுமல்லாமல், பிற துறைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய காலத்தின் கட்டாயம் எல்லா நாடுகளுக்கும் உள்ளது.

உதாரணமாக, நமக்கு அதிக அளவில் வென்டிலேட்டர் தேவைப்படுகிறது என்றால் நாம் பொறியாளர்களை இணைத்து மிக விரைவில் எண்ணற்ற மக்களுக்கு உதவக்கூடிய அளவில் உடனடியாக உருவாக்க முயற்சிகள் செய்ய வேண்டும். இதேபோன்று மருத்துவப் பணியாளர்களின் உயிரைப் பாதுகாக்க பல்வேறு துறையினருடன் இணைந்து அதற்குரிய பணிகளைச் செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இங்கே மிக முக்கியமாக Interdisciplinary and trans}disciplinary ஆராய்ச்சி என்பது இன்றியமையாத ஒன்றாகும். உலகின் சிறந்த பல ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களும் மற்ற நாடுகளில் உள்ள சிறந்த ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து மிகக் குறுகிய காலத்தில் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இது போன்ற ஒரு சூழல் இந்த நூற்றாண்டில் நிகழவில்லை என்றால், காலத்தின் தேவைக்கான கண்டுபிடிப்புகள் நிகழாமல் போய்விடும். இங்கும் கூட்டு முயற்சி மிக மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களுக்கு இக்கொடிய நோய்க்கான தீர்வுகளைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கான போட்டிகளை ஆராய்ச்சி நிறுவனங்கள் இணையம் வழியாக அறிவிக்க வேண்டும். இது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனுடைய எண்ணற்ற முடங்கிக் கிடக்கும் மனிதவளங்களைப் பயன்படுத்த உதவும்; மேலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கத் தேவையான காலத்தின் அளவையும் குறைக்கும். திறனுள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்புகளையும் இது வழங்கும்.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களது அறிவாற்றலின் துணைகொண்டு இக்கொடிய நோய் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்; அவற்றை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதனை தங்கள் நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் மக்கள் நலன் கருதி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அவற்றை ஆவணப்படுத்தி உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள்: இத்தருணத்தில், உலகில் 90% கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு உள்ளன. தலைமைப் பண்புள்ள சிறந்த திட்டமிடும் திறன்களையுடைய கல்வியாளர்கள் (Academic Leadership)இல்லை என்பதை உலகிற்கு இக்கொடிய நோய் எடுத்துக் காட்டியுள்ளது. உதாரணமாக இத்தருணத்தில் இத்துறை சார்ந்த மாணவர்களை மற்றும் பேராசிரியர்களை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தி இது போன்ற ஒரு சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுத் தர உலகிலுள்ள பெரும்பான்மையான கல்விக்கூடங்கள் மறுத்துவிட்டன.

உதாரணமாக, மாணவர்கள் நேரடியாகச் சென்று இந்த நோய் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது; மருத்துவப் பணியாளர்கள் என்னென்ன சவால்களை மேற்கொள்கிறார்கள்; நடப்பில் உள்ள சூழ்நிலையில், செயல்களில், நடைமுறைகளில் எவ்வாறு மாறுதல்களை உருவாக்கி அவர்களுக்கு உதவலாம் என்று கற்கக் கூடிய சூழ்நிலையை இன்றைய கல்விக்கூடங்கள் உருவாக்கவில்லை என்பது மிக மிக வேதனையைத் தருகிறது. இன்றைக்கும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்நோயின் அறிகுறி, நோய்க்கான மருந்து, உபகரணங்கள் மற்றும் பல்வேறு கேள்விகளுக்கு விடை காண தங்கள் தேடுதல் வேட்டைகளை விடாமல் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சூழலில் மாணவர்களுக்கு நாம் என்ன கல்வி அளிக்கலாம், என்னென்ன கண்டுபிடிப்புகளை மாணவர்களின் துணையுடன் உருவாக்கலாம் என்பதற்கான முயற்சிகளை அகாடமிக் லீடர்ஷிப் என்று சொல்லக்கூடிய, பல்கலைக்கழகத்தின் அல்லது கல்வி நிறுவனத்தில் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை. கல்வியின் வாயிலாக நாம் இந்தக் கொடிய நோயை எவ்வாறு எதிர் கொள்ளலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்பதற்கான சிறந்த பாடங்களை இந்த தலைமுறைக்கு அவர்கள் அளிக்கத் தவறிவிட்டனர். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட, இந்த முயற்சிகள் பின்னாளில் இதைவிட ஒரு மோசமான சூழல் ஏற்படும்பொழுது அந்தச் சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான அறிவை மாணவர்களுக்குத் தந்திருக்கும். சூழலை எதிர்கொண்ட அனுபவங்களையும் தந்திருக்கும்.

எனவே உயர்கல்வியில் கட்டாயமாக இதுபோன்ற சூழலில் பணியாற்ற விருப்ப படக்கூடிய மாணவர்களை மற்றும் பேராசிரியர்களை ஒன்றிணைத்து இது போன்ற ஆராய்ச்சி அனுபவங்களை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பொது சுகாதாரம் படித்த மாணவர்கள் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோன்று சைக்காலஜி படித்த மாணவர்கள் தங்களைச் சார்ந்துள்ள மக்கள் இந்த நோயின் காரணமாக எதிர்காலம் பற்றிய கவலையுடன் மனரீதியான பாதிப்புடன் இருந்தார்கள் என்றால், அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் தர வேண்டும்.

சோஷியல் வொர்க் படிக்கக் கூடிய மாணவர்கள் இதுபோன்ற காலகட்டங்களில் எவ்வாறு சமூகப் பணியாற்ற வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள முடியும். சமுதாயத்தில் பொருளாதாரத்தில் மிக நல்ல சூழலில் உள்ளவர்கள், சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு உதவக் கூடிய ஒரு சூழலை சோசியல் வொர்க் பயிலும் மாணவர்களின் வாயிலாக உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதேபோல் பொறியியல் படிக்க கூடிய மாணவர்கள் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் தற்போது தேவைப்படுகின்றன; அவற்றை எவ்வாறு உருவாக்கலாம் என்ற நோக்கத்துடன் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான அரிய வாய்ப்புகளை இக்கொடிய கரோனா நோய், தந்திருக்கிறது. இது போன்று பல்வேறு துறைகளின் மாணவர்கள் அவர்களுடைய துறையின் முக்கியமான பங்கினை உணர்ந்து கற்கக் கூடிய அரிய வாய்ப்புகளை நாம் இழந்து வருகிறோம்.

இணையத்தின் வாயிலாக கல்விநிறுவனங்களும், பேராசிரியர்களும் ஆங்காங்கே வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, அவர்களுக்கு இக்காலகட்டத்துக்குத் தேவையான ஆராய்ச்சிகள் மற்றும் பணிகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கக் கூடிய கல்வியைக் கற்க வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் ஸ்ரீர்ய்ற்ங்ஷ்ற் க்ஷஹள்ங்க் ப்ங்ஹழ்ய்ண்ய்ஞ் (இஆக) - என்பதற்கான சூழலை ஏற்படுத்தி அச்சூழல் வாயிலாக எவ்வாறு சமுதாய மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டியது கல்விக் கூடங்களின் மிக இன்றியமையாத பணிகளாகும்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர் சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com