புதிய செயலி: வருகைப் பதிவுக்கு முக அடையாளம்!

சிறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணி செய்பவர்களின் வருகையைப் பதிவு செய்வது என்பது நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கம் ஆகும்.
புதிய செயலி: வருகைப் பதிவுக்கு முக அடையாளம்!

சிறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணி செய்பவர்களின் வருகையைப் பதிவு செய்வது என்பது நீண்டகாலமாக இருந்து வரும்பழக்கம் ஆகும். வருகைப் பதிவு செய்வதற்குப் பயன்படும் முறைகள் காலங்காலமாக மாறி வந்திருக்கின்றன. அட்டென்டன்ஸ் கார்டைக் காட்டி விரல் ரேகையைப் பதிவு செய்வது உள்ளிட்ட பல வருகைப் பதிவு முறைகள் நடைமுறையிலிருக்கின்றன.

விரல் ரேகையைப் பதிவு செய்யும் வருகைப்பதிவு முறை, கரோனா தொற்று காலத்தில் எல்லாருடைய முகத்திலும் அச்சத்தின் இருளைப் படரச் செய்தது.

பணியாளர் ஒருவர் தன் முகத்தை ஒரு கருவியின் முன் காட்டினால் போதும், அவர் வருகை பதிவு செய்யப்பட்டுவிடும் ஒரு முறையை - ஒரு செயலியை உருவாக்கியிருக்கிறார் 22 வயதேயான இளைஞர் ஒருவர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் மெக்கானிகல் இன்ஜினியரிங் பயிலும் மாணவரான கார்த்திகேய பரத்வாஜ் தான் அவர்.

""கரோனா தொற்றின் காரணமாக பல நிறுவனங்களில் பணியாளர்களின் வருகையைப் பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. என் அப்பா வேலை செய்யும் நிறுவனத்தில் அப்படி ஒரு பிரச்னை எழவே அவர், வருகைப் பதிவுக்கு ஏதாவது மாற்று வழி கண்டுபிடிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் நான் இந்தக் கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்கினேன்'' என்கிறார் கார்த்திகேய பரத்வாஜ்.

தொழில்நிறுவனங்களில் மட்டுமல்ல, கல்விக்கூடங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் என பணியாளர்கள் வேலை செய்யும் எல்லா இடங்களிலும் வருகையைப் பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது. அட்டென்டன்ஸ் கார்டைக் காட்டி விரல் ரேகையைப் பதிவு செய்யும் முறையில், பணியாளர் ஒருவர் தனது விரலைக் கருவியில் வைக்க வேண்டும். அவருக்குக் கரோனா தீநுண்மி தொற்று இருந்தால், அதற்குப் பின்பு அந்தக் கருவியில் விரலை வைக்கும் எல்லாருடைய விரல்களிலும் கரோனா தீ நுண்மி தொற்றிக் கொள்ளும். இதனால் பல நிறுவனங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்யும் முறையைக் கைவிட்டன. அட்டென்டஸ் கார்டை மட்டும் காட்டி வருகையைப் பதிவு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தின.

ஆனால், இந்த முறையினால் வேறு ஒரு பிரச்னை ஏற்பட்டது. ஒருவர் பலரின் அட்டென்டன்ஸ் கார்டுகளை அந்தக் கருவியின் முன் காட்டி, வேலைக்கு வராதவர்களை வேலைக்கு வந்ததாக வருகைப் பதிவு செய்ய முடியும். நிறுவனங்களுக்கு இதனால் ஏகப்பட்ட பண இழப்பு ஏற்படும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கார்த்திகேய பரத்வாஜ், முக அடையாள வருகைப் பதிவு செயலியை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டார். ஃபேஸியல் ரெகக்னிஷன் முறையில் ஒருவருடைய முகம் அவருடைய டிஜிட்டல் புகைப்படத்தின் உருவத்துடன் பொருந்திப் போகிறதா என்று சரி பார்க்கப்படுகிறது. ஒருவரின் முகத்தின் நுண்மையான பல பகுதிகள் கண்டறியப்பட்டு சோதிக்கப்படுகின்றன. ஒருவருடைய மூக்கின் நீளம், கண்களின் அருகே உள்ள பள்ளத்தின் ஆழம் ஆகியவையும் கூட கணக்கிடப்படுகிறது.

""நான் பயிலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிக்கிற ஒவ்வொரு பாடத்தையும், நடைமுறையுடன் சேர்த்துப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறார்கள். மக்களுக்குப் பயன்படக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க ஊக்கமளிக்கிறார்கள். இதற்காகவே "சென்டர் ஃபார் என்ட்டர்பிரீனியர்ஷிப் அண்ட் இனோவேஷன்' என்ற அமைப்பை ஏற்படுத்தி ஊக்கமளிக்கிறார்கள். நான் எனது படிப்பின் செயல்முறைப் பயிற்சிக்காக லார்சன் அண்ட் டூப்ரோ இன்ஃபோடெக் நிறுவனத்திற்குச் சென்றேன். அங்கே ஃபேஸியல் ரெகக்னிஷன் முறையைக் கற்றுக் கொண்டேன். அது எனது கண்டுபிடிப்புக்கு மிகவும் உதவியாக இருந்தது'' என்கிறார் கார்த்திகேய பரத்வாஜ்.

அவர் தனது செயலிக்கு "சாக்ஸý பேஸ் அட்டென்டன்ஸ் ஆப்' எனப் பெயரிட்டிருக்கிறார். இந்தச் செயலியில் பணியாளரின் புகைப்படங்கள், பணியாளரின் அடையாள எண், ஷிப்ட் நேரங்கள், வேலை செய்யும் பிரிவு பற்றிய தகவல்கள் உட்பட பல தரவுகள் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தச் செயலியை செல்லிடப் பேசி, டேப்லெட் உட்பட ஏதேனும் ஓர் ஆன்ட்ராய்ட் கருவியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும். பணியாளர் அந்தக் கருவியின் முன் இரண்டு, மூன்று நொடிகள் நின்றால் போதும், அது பணியாளரின் முக அடையாளத்தைப் பதிவு செய்து கொண்டு அவருடைய வருகையைப் பதிவு செய்யும். பணியாளர் எதையும் தொட வேண்டிய தேவை இல்லை.

சாக்ஸý ஃபேஸ் அட்டென்டன்ஸ் ஆப் - ஐ கடந்த செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி அவர் உருவாக்கியவுடனேயே அதை அவருடைய அப்பா வேலை செய்யும் நிறுவனத்தில் காட்டியிருக்கிறார். அது அங்கு பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், தான் பயிலும் மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து இருக்கிறார். அவர்கள் உடனே அதை பல்கலைக் கழகத்துக்குச் செய்து தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

""நான் இந்தச் செயலியைத் தரும்போதே அதனுடன் கூடவே டேப்லெட்டையும் தந்துவிடுகிறேன். செயலியை வாங்கிய ஒருவர் டேப்லெட்டை வாங்க கடைகளுக்குச் செல்ல வேண்டிய தேவையை இது இல்லாமல் செய்து விடுகிறது.

ஒரு நிறுவனத்தின் பணியாளர்களின் வருகைப் பதிவு பற்றிய தகவல்கள் இந்தச் செயலியின் மூலமாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அப்படி ஒழுங்குபடுத்தப்பட்டவை, எக்ùஸல் ஷீட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அவருடைய இ மெயிலுக்கு தினம்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தச் செயலியை ஒரு நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் வருகைப் பதிவுக்கு மட்டும் அல்ல, அந்நிறுவனத்தின் அக்கவுண்ட்ஸ் துறைக்கும் பயன்படுத்த முடியும். இந்த வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் பணியாளரின் சம்பளத்தைக் கணக்கிட்டுத் தர இந்தச் செயலி உதவியாக இருக்கும்.

வருங்காலத்தில் ஃபேஸியல் ரெகக்னிஷன் என்ற முறைக்கு நம்நாட்டில் பெரிய சந்தை ஏற்பட வாய்ப்புள்ளது'' என்கிறார் மகிழ்ச்சியுடன் கார்த்திகேய பரத்வாஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com