வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் சம்பந்தப் பட்ட பிரிவில் பி.எஸ்சி., பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்.டபிள்யு முடித்தவர்கள் சம்பந்தப் பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வேலை... வேலை... வேலை...

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 125
பணி: ட்ரெய்னி இன்ஜினியர் ஐ
துறை: 
எலக்ட்ரானிக்ஸ் -15
மெக்கானிக்கல் -18
நிதி -02
பணி: ட்ரெய்னி இன்ஜினியர் ஐஐ - 60 
வயதுவரம்பு: 01.11.2020 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 28000 - ரூ.34000
பணி: புராஜெக்ட் இன்ஜினியர் I

துறை:  எலக்ட்ரானிக்ஸ் -25
சிவில் -02
எலக்ட்ரிகல்-02
மனிதவளப் பிரிவு-01 
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப் பட்ட பிரிவில் பி.எஸ்சி., பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்.டபிள்யு முடித்தவர்கள் சம்பந்தப் பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.11.2020 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 35000 - ரூ.50,000
தேர்வு செய்யப்படும் முறை: தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்துப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.applyexam.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://bel-india.in/Documentviews.aspx?fileName=Detailed-Web-Advt-03-11-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.11.2020

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில்  வேலை

பணி: இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 26
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முழுநேர/ பகுதி நேரப் படிப்பு முறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ. 1,12,400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.ncs.gov.in, www.dindigul.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும்  முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), 154, மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிப்பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், திண்டுக்கல் - 624005.
மேலும் விவரங்கள் அறிய: https://cdn.s3waas.gov.in/3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2020/11/2020110612.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.11.2020.

வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 06
பணியிடம்: கோயம்புத்தூர் 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  ஸ்டெனோகிராபர் - 01
சம்பளம்: மாதம் ரூ.25,200 - ரூ.81,100
பணி: ஃபாரெஸ்ட் கார்ட்  - 02
வயதுவரம்பு: 18 வயது முதல் 27  வயதுக்குள் இருக்க வேண்டும். 
பணி: டெக்னீசியன் - 03
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வலையில் DIRECTOR, IFGTB என்ற பெயருக்கு டிடி - ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:   http://ifgtb.icfre.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.   
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Institute of Forest Genetics and Breeding, Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Post Box No.1061, Coimbatore, Tamilnadu, PIN - 641002 

மேலும் விவரங்கள் அறிய: http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்ற  லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.11.2020

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அலுவலக உதவியாளர் வேலை


பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 23
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  https://tnrd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://tnrd.gov.in/pdf/OAs%20Notification%20and%20Instruction.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய  கடைசித் தேதி: 30.11.2020
- இரா.வெங்கடேசன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com