இணைய வெளியினிலே...

ஒரு மரம் அது தரும் பழங்களை வைத்தே மதிக்கப்படுகிறது...அதைத் தாங்கும் வேர்களைவைத்தல்ல.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


ஒரு மரம் அது தரும் பழங்களை வைத்தே மதிக்கப்படுகிறது...
அதைத் தாங்கும் வேர்களைவைத்தல்ல.

உங்கள் ரசிகன் ரவி ப்ரகாஷ்

நிழல்கள் பொல்லாதவை.
நிற்கும் இடத்துக்கு ஏற்ப மாறும் எத்துப் பேர் வழிகள்.
காலையில் கைகட்டிவாய் புதைத்து நின்றஅதே நிழல்...
மாலையில் நமக்கு முன்னால் செல்லும்.
அதட்டி வைத்தாலும் அடங்கி வராது.
எல்லாம் ஒரு நாள் போய்விடும்.
நாம் நிழல்களை மட்டுமேகையில் பிடித்துக் கொண்டு நிற்போம்.

இந்திரன் ராஜேந்திரன்

விண்ணைத்தாண்டி மழை வரும்போது...
மண்ணைத் தாண்டிவிதை எழும்போது...
உன்னை தாண்டிநம்பிக்கை எழும் போது வெற்றி நிச்சயம்...
வேத சத்தியம்.

ரேகா நாயர்

சுட்டுரையிலிருந்து...


நகரத்திலே இருக்கிற எனக்குலேசாக தூறல் விழுந்தாலேபயங்கர மழை...
தோட்டத்தில் இருக்கும் என்அப்பாவிற்கோஅடிச்சு ஊற்றினால் கூட, ""அர அளவு மழை கூட இல்ல''

கோழியின் கிறுக்கல்

தோல்வி கொடுக்கும் நிம்மதியையும்,
அமைதியையும் வெற்றி கொடுப்பதில்லை என்பதை...
மனைவியுடனான வாக்குவாதம் முடிந்த பின் அறிந்து கொள்ள முடிகிறது.

ஜோக்கர்

இந்தஅடுப்படியில் தான் சுத்தம்,சுகாதாரம்,ஒற்றுமை,பண்பாடு எனஎல்லாமே ஒன்று சேர்ந்திருந்தது,முன்னொரு காலத்தில்.

வழிப்போக்கன்

வலைதளத்திலிருந்து...

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?

சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.

வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது. வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது. உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது. தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது. அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது. தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.

சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது. விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது. அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது. குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது. கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியைச் செலுத்தாத பொறுப்பு இருக்கிறது. நேற்றை விட இன்று எவ்வளவு வளர்ந்தோம் எனஅளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.

அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.

http://puthiyavidiyal.in/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com