தண்ணீரைத்  தூய்மையாக்கும் கருவி!

இயற்கை நமக்கு வழங்கிய அருஞ்செல்வம் தண்ணீர். நமது உடலில் தண்ணீர் இருக்கிறது. புவியின் 70 சதவீதம் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.
தண்ணீரைத்  தூய்மையாக்கும் கருவி!

இயற்கை நமக்கு வழங்கிய அருஞ்செல்வம் தண்ணீர். நமது உடலில் தண்ணீர் இருக்கிறது. புவியின் 70 சதவீதம் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.

மழையாகப் பெய்கிற தண்ணீரை நாம் பயன்படுத்தி அழுக்காக்கி, சாக்கடை மூலமாக இறுதியில் கடலில் கலக்கச் செய்கிறோம். இந்த அழுக்கான தண்ணீரை இலவசமாகத் தூய்மைப்படுத்தித் தருகிறது சூரியன்.

சூரிய ஒளிக்கதிர்கள் தண்ணீரில் படும்போது அந்த தண்ணீர் சூடாகி, ஆவியாகி, மேகமாகி மீண்டும் மழையாகப் பெய்கிறது. இந்த செயலின் அடிப்படையில் தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கருவியை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரோஜெஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

தண்ணீரை உறிஞ்சக் கூடிய அலுமினிய தகடைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்தக் கருவியை, நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் சிறிது மூழ்கியிருக்குமாறு செய்கிறார்கள். நீரில் மூழ்கியுள்ள இந்தக் கருவியின் பகுதியிலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு, கருவியின் மேற்பகுதியில் உள்ள அலுமினிய தகட்டுக்கு வருகிறது. இந்த அலுமினியத் தகட்டில் சிறு சிறு பள்ளங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளங்களுக்கு வரும் அழுக்கடைந்த தண்ணீர் சூரிய ஒளி ஆற்றலின் மூலமாக ஆவியாக்கப்படுகிறது. தண்ணீரில் உள்ள அழுக்குகள், உப்புகள் தங்கிவிடுகின்றன. நீராவி சேமிக்கப்பட்டு, குளிராக்கப்படுகிறது. தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது.

இயற்கையாக சூரிய ஒளி நீரின் மேற்பரப்பில் படும்போது பெரிய பரப்பளவில் உள்ள தண்ணீரின் மீது படுகிறது. இதனால் தண்ணீர் சூடாவதும் ஆவியாவதும் தாமதமாகிறது.

இந்தக் கருவியின் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தண்ணீர், குவிக்கப்பட்ட சூரிய ஒளியின் மூலம் வெப்பப்படுத்தப்படுவதால், மிக விரைவில் அதிக அளவிலான தண்ணீரைத் தூய்மையாக்க முடியும் என்கிறார்கள் ரோஜெஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com