இணைய வெளியினிலே...

அண்ணாந்து பார்த்து மழையை ரசிக்கிறது...காற்றில் திரும்பிய குடை.
இணைய வெளியினிலே...

முகநூலிலிருந்து...

அண்ணாந்து பார்த்து மழையை ரசிக்கிறது...
காற்றில் திரும்பிய குடை.

நா.வே.அருள்


நம்மைப் புரிந்து கொள்ளாதவர்களை விட,
நம்மைப் புரிந்து கொண்டவர்களைப் போல
நடிக்கும் மனிதர்கள்... மிகவும் ஆபத்தானவர்கள்.

வழிப்போக்கன்

ஒரு மனிதன் எப்போது அழகாகிறான்?
பிறர் மீது அன்பு செலுத்தும் போது!
கடற்கரய் மத்தவிலாச அங்கதம்


சிரிப்பு எனும் சாவியைத்
தொலைத்து விட்டால்...
சந்தோஷம் எனும் வீடு
பூட்டியே இருக்கும்.

மயிலம் இளமுருகு

கடைசி மரமும்...வெட்டுறும்.
கடைசித்துளி நீரும்...நஞ்சாகும்.
கடைசி மீனும் பிடிபட்ட பிறகே மனிதன் உணர்வான்...
பணத்தைத் தின்ன முடியாதென்று.

முத்துகிருஷ்ணன்

சுட்டுரையிலிருந்து...

பிரச்னைகள் என்பவை பேசாதவரை மட்டுமே.
பேச ஆரம்பித்தால்...
நீங்கள் காணும் அனைத்துமே
அதற்கான வழிமுறைகளாகத்தான் இருக்கும்!
பரிதி நிலவன்


குழந்தையில் அனைவரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இவள் நிலா

வெற்றி என்பது வளர்ந்த மரம் போல்...
விதையைத் தூவிய மறுகணமே...
மரத்தை எதிர்பார்க்காதே.

ரோஸ் டாலியா


பார்ப்பதற்கு எதுவுமில்லை, சிரிப்பதற்கும் எதுவுமில்லை,
பேசுவதற்கும் யாருமில்லை அதனாலென்ன?
இதையும் கடந்து விடுவேன்.

யாத்ரீகன்

வலைதளத்திலிருந்து...

நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் வீட்டிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் போது, கால் தொங்கும் நிலையில் இருப்பதால் ஈர்ப்பு விசை காரணமாக கால்களுக்கெல்லாம் இரத்தம் பாயும். இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் இருக்காது.
ஆனால், தரையில் சம்மணமிட்டு அமரும்போது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் இருக்கும்.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்போது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதுமாம். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேலேதான் உள்ளன.
எனவே காலை தொங்கப் போடாமல் சம்மணமிட்டு அமர்வது, இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அதிகமாக சக்தி கிடைக்க உதவி, உடல் நலமுடன் இருக்க உதவும். காலைத் தொங்கவைத்து அமர்வதைத் தவிர்த்து குறிப்பாக சாப்பிடும் போதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
சம்மணமிட்டு தரையில் உட்கார முடியவில்லை என்றால் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடும்போது காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிடலாம். இதுபோன்று வெளியிடங்களில் செய்ய முடியாது என்றாலும் வீட்டில் சாப்பிடும்போதாவது இந்த முறையைப் பின்பற்றலாம்.


https://puthur-vns.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com