வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 259

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 259

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அவர்கள் ஆங்கிலம் குறித்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மயில்களுடன் ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, அவரது அமைச்சரோ தவறாக "பதினாறு வயதினிலே' மயிலை அழைத்து வந்து விடுகிறார். பின்னாடியே சப்பாணியும் நொண்டிக் கொண்டு வருகிறான்.

மயிலு: நீங்க டாக்டரா?
வீரபரகேசரி: ஆமா, நான் டாக்டரே தான். படிக்காட்டியும் காசு கொடுத்து போன வாரம்தான் நானே நிறுவின பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர்னு பட்டம் கொடுத்தாங்கம்மா.
மயிலு: டாக்டர்னா ஓகே.
சப்பாணி: என்ன ஓகே, வகுந்துருவேன் ரெண்டு பேரையும்.
வீரபரகேசரி: ஏம்மா மயிலு?
மயிலு: என்னா பண்ணையாரே?
வீரபரகேசரி: நான் பண்ணையாரில்லம்மா, நான் மாமன்னர், மகாசக்கரவர்த்தி வீரபரகேசரி. மூவுலகையும் வென்றவன்.
மயிலு: ஒண்ணுமே புரியல. இந்த இவ்வளவோ பெரிய வீட்டைப் பார்த்ததும் ... இதை எப்பிடிச் சொல்றது?
கணேஷ்: Palace
ஜூலி: Palatial

மயிலு: ஆமா, அதைப் பார்த்ததும் நீ பஞ்சாயத்து தலைவர்னு நினைச்சிட்டேன். எங்க ஊர்ல மாமன்னர் எல்லாம் இல்லியே.
வீரபரகேசரி: அது இதை விடக் கேவலம்.
கணேஷ் (ஜூலியிடம்): Palace என்றால் அரண்மனை. Palatial என்றால்?
ஜூலி: அரண்மனை மாதிரி என ஒரு பொருள் வருகிறது. ஆனால் சமகாலத்தில் இது ரொம்ப பிரம்மாண்டமான, நன்கு அலங்கரிக்கப்பட்ட வீடுகள், பங்களாக்களைக் குறிக்க பயன்படுகின்றன. ஒரு பெரிய, அட்டகாசமான அப்பார்ட்மெண்ட் வீட்டை a palatial apartment என சொல்லலாம். A palatial building, a palatial hotel, a palatial office இப்படி பல கட்டிடங்களைச் சொல்லலாம்.
மயிலு: ஆமா அதேதான். என்னமா இந்த நாய் இங்கிலீசு பேசுது.
ஜூலி: நான் நாயில்ல.
மயிலு: பின்னே?
ஜூலி: நான் ஜூலி
மயிலு: அப்போ நானும் பெண்ணில்ல.
வீரபரகேசரி (அதிர்ச்சியில்): என்னது பெண்ணில்லையா?
மயிலு: நான் பெண்ணில்ல, நான் மயிலு.
வீரபரகேசரி: Almost had my heart in the mouth.

மயிலு: ஆங்?
வீரபரகேசரி: இல்ல நீ பெண்ணில்லனதும் பயந்திட்டேன். நீ
நிஜமாவா பெண்ணில்ல?
மயிலு: ஏன்? நான் பொண்ணுதானே? எனக்கு மீசையா
இருக்குது?
சப்பாணி மயிலின் காதருகே: இவன் தூங்கும்போது தலையில கல்லைப் போட்டுரலாமா?
கணேஷ் (தனக்குள்): கொடூரமான கூட்டமா இருக்கும்போல? (ஜூலியிடம்) நான் நிஜமாவே இவர் வாயில இதயம் வந்து
ஸ்டிரக் ஆயிருச்சோன்னு பயந்திட்டேன்
ஜூலி: அது ஒரு idiomatic expression. Heart in the mouth என்றால் ரொம்ப பதற்றமாகி விட்டது என அர்த்தம். நாம டென்ஷனாகும் போது என்ன ஆகும்?
மயிலு: டென்ஷன் ஆகும்.
ஜூலி: அப்படி இல்லம்மா. டென்ஷன் ஆனா எப்படி பீல் பண்ணுவோம்? பதற்றமா. அப்போது இதயம் வேகமா துடிக்கும். அது நம்ம தொண்டையில் வந்து இடிக்கிற மாதிரி உணர்வோம். அதைத்தான் உருவகமா heart in the mouth என சொல்லுவார்கள். அதே மாதிரி தான் heart missed a beat எனச் சொல்வது.
கணேஷ்: இதயம் ஒரு நொடி துடிக்கவில்லை எனப் பொருளா?
ஜூலி: கரெக்ட். when you are startled, highly anxious, very nervous your heart misses a beat.

மயிலு: சட்டுன்னு நெஞ்சில ஊசியை வச்சு குத்துற மாதிரி
இருக்குமே அதானே ...
ஜூலி: யெஸ்
வீரபரகேசரி: எங்கம்மா குத்துது?
மயிலு: சும்மா இருய்யா. நீ டாக்டரா?
வீரபரகேசரி: நான் டாக்டர் மாமன்னர் வீரபரகேசரி
வீரபரகேசரி (தனக்குள்): ஒரு மன்னர் என்றும் பார்க்காமல்... சரி போகட்டும். கேட்ட உடனே மயில் இறகு போட்டா என்ன மதிப்பு அதுக்கு!
ஜூலி: His heart is in the right place ம்மா.
மயிலு: அப்படீன்னா?
கணேஷ்: ஒரு விசயத்துக்கு சரியான நோக்கமும் மோசமான விளைவுகளும் ஏற்படுமானால் அதை முன்வைக்கிறவருக்கு heart is in the right place
அப்போது அமைச்சர் மயில்கள், ஆடுகள் மற்றும் அவற்றை மேய்க்கிறவர்களுடன் அங்கே வருகிறார்.
வீரபரகேசரி (அமைச்சரிடம் கோபமாக): வாய்யா வா.
எண்ணெய்ச் சட்டியில் தூக்கிப் போடுறேன்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com