வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 289

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 289


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது corny எனும் சொல்  adjective ஆக வந்திருக்க முடியும், அதற்கும் சோளத்துக்கும் என்ன சம்பந்தம் என கணேஷ் கேட்கிறான். அதற்கு புரொபஸர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போமா?

புரொபஸர்: Corny என்றால் நீண்ட காலமாகவே full of corn எனும் பொருளே இருந்தது. அதாவது சோளம் நிறைந்த ஒன்று. ஆனால் 1930-களில் இது மாறத் தொடங்கியது. அப்போது நிறைய விவசாய நிலங்களில் சோளம் பயிரிடப்பட்டது. விவசாயிகள் அதிகமும் சோள உணவுகளையே சாப்பிட்டனர். 
அவர்கள் கல்வி அறிவு குறைந்தவர்களாக கிராமங்களில் வசித்தார்கள். ஆகையால் சோளம் தின்னுகிறவன் என்றாலே பண்பற்றவன், மக்கு, நுண்ணுணர்வு இல்லாதவன் எனும் பொருளில் corny எனும் சொல் புதிய பயன்பாட்டுக்கு வந்தது. 
கணேஷ்: ஓ... இப்படி ஒரு கதை இருக்குதா? சுவாரஸ்யம். Very interesting. இனி யாராவது corny ஜோக் சொன்னால் அது ஏழை எளிய மக்களை பகடி செய்ய பயன்படுத்தப்பட்ட ஒரு பெயரடைன்னு புரிஞ்சுப்பேன். 
தேர்தல் ஆணைய அமைச்சர்: என்னது அடையா? இலை அடையா? எங்க ஊர்ப் பகுதிகளில் ரொம்ப பேமஸ். (நிதியமைச்சரிடம்) நீ சாப்டிருக்கியா?
நிதியமைச்சர்: நான் வரியை அதிகப்படுத்தினதாலே வாழைப்பழம், வாழை இலை விலை அதிகமாப் போச்சுன்னு ஒரு கும்பல் இப்போ தான் என்னை திட்டிக்கிட்டு இருக்காங்க. அதனால நான் அடையே சாப்பிட வேணாமுன்னு முடிவு பண்ணிட்டேன். 
புரொபஸர்: தமிழும் சுத்தமா? பெயரடைன்னா adjective. 
தேர்தல் ஆணைய அமைச்சர்: ஓ... அதுவா? 
ஜூலி: எதுவா?
தேர்தல் ஆணைய அமைச்சர்: 
சாப்பிடுற மேட்டர். 
ஜூலி: If I listen to him a little longer I shall go ballistic. I will lose my head. அதனால பத்து ரவுண்டு குரைத்தபடி ஓடி விட்டு வருகிறேன். 
(ஜூலி அங்கிருந்து போகிறது. அது குரைத்துக் கொண்டு ஓடும் சத்தம் கேட்கிறது.)
வீரபரகேசரி: ஹா...  ஹா... The best man in my ministry. The lights are on but nobody is home. 

தேர்தல் ஆணைய அமைச்சர்: 
அப்படியா மன்னர் மன்னா! உடனே விளக்குகளைப் பார்க்கச் சொல்கிறேன்.
வீரபரகேசரி: ஹா... ஹா!... Love you man. I love you to the moon and back. 
தேர்தல் ஆணைய அமைச்சர்: நன்றி மன்னர் மன்னா (விழுந்து நமஸ்கரிக்கிறார்.)
வீரபரகேசரி: ஹா... ஹா... always behaving as if you fell off a cabbage truck. 
புரொபஸர்: ரொம்ப பாவம்யா. 
கணேஷ்: எனக்கு புரியல சார்.
புரொபஸர்: இந்த அமைச்சர் இருக்கிறாரே ரொம்ப naive ஆக, அப்பாவியாக தெரிகிறார். Some kind of a hick, a greenhorne. நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவருக்கு சின்னச் சின்ன வார்த்தைகளின் பொருள் தெரியவில்லை. தன்னை கலாய்க்கிறார்கள் எனப்ரியவில்லை. எல்லாவற்றுக்கும் சீரியஸாக மரியாதையுடன் பதிலளிக்கிறார். 
கணேஷ்: தெரியலேன்னா கேட்டு தெரிஞ்சுக்கலாம். படிச்சு கத்துக்கலாம். 
புரொபஸர்: சில பேர் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி நடிப்பாங்க. அது ஒரு முகமூடி போல இருந்து அவங்களைக் காப்பாற்றும். 
கணேஷ்: அப்பாவியா நடிக்கிறது. They play the innocent. கரெக்டா சார்?
புரொபஸர்: கரெக்ட். ஆனால் They play innocent என சொல்லணும். The  தேவையில்லை. 
கணேஷ்: ஓகே சார். ஒரு சந்தேகம்.
புரொபஸர்: கேளு.
கணேஷ்: அது ஏன் ஜூலி go ballistic  என ஏதோ மந்திரவாதி ஜீ பூம்பான்னு சொல்ற மாதிரி சொல்லி விட்டு ஓடியது. என்ன ஆச்சு? அப்புறம் அந்த 
க்ஷஹப்ப்ண்ள்ற்ண்ஸ்ரீ அதை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன். ஆயுதங்கள், ராணுவம் 
சம்பந்தமா.... 
புரொபஸர்: நீ சொல்றது சரி தான். முதலில் அர்த்தத்துக்கு வந்திடுறேன்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com