இணைய வெளியினிலே...

வானமும் ஒருபூந்தோட்டம்தான்...மஞ்சளும்சிவப்புமாய்காலையில்ஒரு செங்காந்தள்தவறாமல் மலர்கிறதே!
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


வானமும் ஒருபூந்தோட்டம்தான்...
மஞ்சளும்சிவப்புமாய்காலையில்ஒரு செங்காந்தள்தவறாமல் மலர்கிறதே!

சுந்தரபுத்தன்


பயமற்றவர்களிடம் பூக்களையும் பயந்தவர்களிடம் ஆயுதங்களையும் கொடுங்கள்...
அழகாகி விடுவார்கள்.

பொள்ளாச்சி முருகானந்தம்

நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது மரங்களாகிறேன்.
மலைச்சாலை பயணத்தில் மலையாகிறேன்.
நதிக்கரையோரம் நடக்கும்போது நதியாகிறேன்.
குழந்தைகளிடம் விளையாடும்போது பொம்மையாகிறேன்.
இந்த நான்களை விட, நன்றாக இல்லை... சொந்த நான்.

நேசமிகு ராஜகுமாரன்

சுட்டுரையிலிருந்து...


எங்கே விழுந்தோம் என்பதை விட,
எங்கே கவனத்தைச்சிதற விட்டோம் என்பதைக் கவனித்துப் பாருங்கள்...
விழவே மாட்டீர்கள்!

கவிதா ராணி


வாழ்க்கையைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நாம்மூன்று இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

1.மருத்துவமனை
2. சிறைச்சாலை
3. சுடுகாடு

ஆரோக்கியத்தை விட மற்ற எதுவுமே பெரிதில்லை என்பதை மருத்துவமனை புரிய வைக்கும்.

சுதந்திரத்தை விட விலை மதிப்பானது வேறு ஏதும் இல்லை என்பதைச் சிறைச்சாலை புரிய வைக்கும்.

உயிரோடு வாழ்வதை விட பெரியது எதுவுமில்லை என்பதைச் சுடுகாடு புரிய வைக்கும்.

ஜானகிராமன்

வலைதளத்திலிருந்து...

அந்தக் காலத்தில் மஹாபலிபுரத்திற்கு படகில் போய் வந்திருக்கிறார்கள். அந்த நினைவுகளைச் சொல்லும் இந்தக் கட்டுரையை இன்று வாசிக்கையில் வியப்பாகவுள்ளது.

"விவேக சிந்தாமணி' இதழில் ச.ம. நடேச சாஸ்திரி எழுதிய குறிப்பு 1894 - ஏப்ரலில் வெளியாகியுள்ளது.

சென்னையிலிருந்து தெற்கே செல்லுகிற தென்னிந்தியா இருப்புப்பாதை வழியாகச் செங்கற்பட்டு சென்றால் ஒன்பது மைல் தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் என்ற திவ்விய úக்ஷத்திரத்தை ஜட்கா வண்டிகள் மூலமாய்ச் சேரலாம். இந்தவிடத்திலிருந்து ஒன்பது மைல் மேற்படி ஜட்காவிலேயே ஏறிச் சென்றால், யாம் தலைப்பில் குறித்த மஹாபலிபுரம் ஸ்தலத்தையடையலாம்.

இதற்குச் சென்னையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழி யாகவும் படகுகளில் செல்லக்கூடும். ஆனால் கோடைக் காலத்தில் இக்கால்வாயில் தண்ணீர் குறைந்திருக்குமாதலால் படகுகள் தங்கு தடை யின்றிச் செல்வது முடியாது. 40 மைல் படகுகளிலேறிச் செல்ல வேண்டியிருப்பதால் படகுக்காரர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள்.

ரயில் மார்க்கமாகச் செல்வதே உத்தமம். திருக்கழுக்குன்றம்விட்டு எட்டு மைல் ஜட்கா மீதேறிக் கொண்டு சென்றால், சமுத்திரத் தண்ணீரில் முழுகி, சுமார் இரண்டு பர்லாங் தூரமுள்ள சேற்று நீரில் நடந்து செல்ல வேண்டும். பிறகு பக்கிங்ஹாம் கால்வாயைத் தாண்ட வேண்டும். இவைகளைக் கடந்து சுமார் அரை மைல் தூரம் நடந்து சென்றால் மஹாபலிபுரமென்கிற சிறிய ஊரின் வீடுகள் தென்படுகிறது.

மக்கள் சிறிய கூரை வீடுகளைக் கட்டிக்கொண்டும், எருமை, பன்றி முதலிய கால்நடைகளை வைத்துக் கொண்டும் ஊரில் ஒரு புறத்திலுள்ள சிறிது புஞ்சை பூமிகளில் விளையும் தானியங்களைக் கொண்டும் ஜீவிக்கிறார்கள். இந்த ஊரைச் சுற்றி மூன்று புறத்திலும்

கடல் ஆக்கிரமித்திருக்கிறபடியால் சாகுபடிக்குத் தகுந்த பூமி களில்லை. ஊரின் மத்தியில் அழிந்து கொண்டு வருகிற ஒரு பெரிய விஷ்ணுவாலயமிருக்கிறது.

https://www.sramakrishnan.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com