மொழிகள்... எழுத்து அமைப்புகள்... ஓர் இணையதளம்!

எழுத்து அமைப்புகள் மற்றும் மொழிகளுக்கான இணையக் கலைக்களஞ்சியமாக ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 
மொழிகள்... எழுத்து அமைப்புகள்... ஓர் இணையதளம்!


எழுத்து அமைப்புகள் மற்றும் மொழிகளுக்கான இணையக் கலைக்களஞ்சியமாக ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இத்தளத்தின் முகப்புப் பக்கத்தில்   ரைட்டிங் சிஸ்டம்ஸ்,  கன்ஸ்ட்ரக்டடு ஸ்கிரிப்ட்ஸ்,  லாங்குவேஜஸ்,  மல்ட்டிலிங்குவல் பேஜஸ்,  வாட் இஸ் நியூ எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 

ரைட்டிங் சிஸ்டம்ஸ் எனும் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில், உலகப் பயன்பாட்டிலிருக்கும் பல்வேறு மொழிகளின் எழுத்துகள் ஆங்கில அகரமுதலி வரிசையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இங்கு இடம் பெற்றிருக்கும் குறிப்பிட்ட மொழியின் பெயரில் சொடுக்கினால், அந்த மொழிக்கான தனிப்பக்கம் திறக்கிறது. அங்கு அந்த மொழி குறித்த சிறு வரலாறு, குறிப்பிடத்தக்க நிலைகள், உயிரெழுத்துகள் மற்றும் எழுத்தில் அழுத்தம், வேறுபாடு காட்டும் குறியீடுகள், எழுதும் முறை, மெய்யெழுத்துகள், உயிர்மெய்யெழுத்துகள், எண்கள், மொழியில் கலந்திருக்கும் பிற மொழிக்குறியீடுகள்,  குறிப்புகள், எழுத்துப் பெயர்ப்புகள், மொழிபெயர்ப்பு, மொழியின் குரல் பதிவு, மொழியின் நிகழ்படப்பதிவு, மொழி தொடர்பாக இணையத்தில் இடம் பெற்றிருக்கும் சில வலைப்பக்கங்கள், மொழிப் பாடங்கள், அகரமுதலிகள், மொழிக்கான அமைப்புகள், மொழிப்பாடல்கள், மொழியினர் பயன்படுத்தும் பெயர்கள் போன்றவற்றுக்கான இணைப்புகள், மொழிக் குடும்பத்திலுள்ள பிற மொழிகள், மொழிக்கான எழுத்து அமைப்புகளைப் பயன்படுத்தும் பிற மொழிகள் என்று பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. 
கன்ஸ்ட்ரக்டடு ஸ்கிரிப்ட்ஸ் எனும் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில், இத்தளத்தைப் பயன்படுத்துபவர்கள் உருவாக்கிய பல்வேறு புதிய வரிவடிவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. சில மொழிகளுக்கான தனித்த எழுத்துருக்கள், ஒலிப்பு வரிவடிவங்கள், உலகளாவிய வரிவடிவங்கள், பல வண்ணங்களிலான வரிவடிவங்கள், முந்தைய எழுத்துகளின் தழுவல்கள், கற்பனை எழுத்துகள், மந்திர எழுத்துகள் என்று பல்வேறு வகையான வரிவடிவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் இங்கு புதிய வரிவடிவங்கள், எழுத்துகளைக் கண்டுபிடித்தால் அதனைச் சமர்ப்பிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. 
லாங்குவேஜஸ் எனும் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில், உலகில் பயன்பாட்டிலிருந்து வரும் பல்வேறு மொழிகளின் பட்டியல் ஆங்கில அகரவரிசைப்படி இடம் பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட மொழியின் பெயரில் சொடுக்கினால், அந்த மொழி குறித்த  பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.
மல்ட்டிலிங்குவல் பேஜஸ்  எனும் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில், பல மொழிகளில் பயன்படுத்தப்படும் பயனுள்ள சொற்
றொடர்கள், 400 - க்கும் மேற்பட்ட மொழிகளில் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் பிரிவு, பல்வேறு வரிவடிவங்களில் எண்கள், பல்வேறு மொழிகளில் எண்கள், திசைகாட்டி, திசைகள், வண்ணச் சொற்கள், பாடல்கள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன. பொதுவாகப் பயன்படுத்தும் சொற்கள், வாழ்த்துகள், சொற்றொடர்கள், சிக்கலான வேளைகளில் பயன்படுத்தும் சொற்றொடர்கள், மொழி தெரியாத இடங்களில் பயன்படுத்தத் தேவையான சொற்றொடர்கள் போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன. 
வாட் இஸ் நியூ?  எனும் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில், இத்தளத்தில் புதிதாக இணைக்கப்பட்ட மொழி தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. 
உலகப் பயன்பாட்டிலிருக்கும் பல்வேறு மொழிகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களும், மொழியியல் பயின்று வரும் மாணவர்களும் https://omniglot.com/ எனும் இணைய முகவரிக்குச் சென்று பயனடையலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com