வேலை... வேலை... வேலை...
By இரா.வெங்கடேசன் | Published On : 17th August 2021 06:00 AM | Last Updated : 17th August 2021 06:00 AM | அ+அ அ- |

ஐடிபிஐ வங்கியில் வேலை
பணி: எக்ஸிகியூட்டிவ்
காலியிடங்கள்: 920
தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.29,000, இரண்டாம் வருடம் மாதம் ரூ.31,000, மூன்றாவது வருடம் மாதம் ரூ.34,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.idbibank.in/pdf/careers/Executive03082021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.08.2021
தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 81
பணி: புராஜெக்ட் சயின்டிஸ்ட் - ஐ - 29
பணி: புராஜெக்ட் சயின்டிஸ்ட் - ஐஐ - 35
பணி: புராஜெக்ட் சயின்டிஸ்ட் - ஐஐஐ - 01
பணி: சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ - 04
பணி: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் - 01
பணி: ஃபீல்டு அசிஸ்டன்ட்- 09
வயது வரம்பு: 32 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். பொறியியல்துறையில் பி.இ, பி.டெக் மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் துறையில் பட்டம் அல்லது பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.78,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.nccr.gov.in/NRect2021/nrect1.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: ØLY¬: National Centre for Coastal Research (NCCR) NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai - 600100.
மேலும் விவரங்கள் அறிய: www.nccr.gov.in அல்லது https://www.nccr.gov.in/NRect2021/NccrFullFinal.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.08.2021
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 27.08.2021
தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை
பணி : அட்வைஸர் (டெக்னிகல்) - 01
தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 20 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,65,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 வரை.
விண்ணப்பிக்கும் முறை : https://nhai.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://nhai.gov.in அல்லது https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/detailed%20advertisement%20forAdvisor%20Tech.pdf என்றஅதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 22.08.2021
வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் வேலை
பணி: அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர்
காலியிடங்கள்: 44
வயது வரம்பு: 23.08.2021 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: பைனான்ஸ் & அக்கவுண்ட் ஆபீசர்
காலியிடங்கள்: 21
தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - ரூ.39,100
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.asrb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வயதுவரம்பு சலுகை, முழுமையான கல்வித்தகுதி குறித்த விவரங்கள் அறிய: http://www.asrb.org.in/images/Notification-AO-and-F-AO-Examination-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.08.2021
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை
பணி: ஸ்டாப் நர்ஸ் - 03
தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி நர்சிங் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டன்ட் செக்யூரிட்டி ஆபிசர் - 03
குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்
பெண்களுடன் பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட பிரிவில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் சூப்பிரின்டென்ட் - 10
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட பிரிவில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் என்ஜினியர் - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் அசிஸ்டன்ட் - 30
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் டெக்னீசியன் - 34
பணி: ஜூனியர் டெக்னீசியன்
(மெயின்டன்ஸ்) - 06
பணி: ஜூனியர் டெக்னீசியன்
(டெலிபோன்ஸ்) - 01
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ, பட்டம், ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள அறிவியல் பாடங்களில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் - 04
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று எல்எல்ஐஎஸ் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://recruit.iitm.ac.in/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.08.2021