இணைய வெளியினிலே...

மரக் கிளைகளால் விரிசல் விடுகிறது, ஆற்றங்கரை நிலா.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


மரக் கிளைகளால் விரிசல் விடுகிறது, ஆற்றங்கரை நிலா.

ஆரூர் தமிழ்நாடன்


இல்லாமை உன்னில் எதுவாகவும் இருக்கலாம்...
தன்னம்பிக்கை இல்லாமல் மட்டும்...
இருந்து விடாதே.

ஆனந்த் சந்தோஷ்


நீலப்பெருங்கடலோசையில் 
நீந்த மறப்பதில்லை மீன்கள்...
தென்றல் தாலாட்டும்போது
தலையசைக்க மறப்பதில்லை மரங்கள்...
பார்க்கும்போதெல்லாம்
புன்னகைக்க மறப்பதில்லை பூக்கள்...
மழையை ஏந்திக் கொண்ட  மண்...
குளிர மறப்பதில்லை.
நேரில் பார்த்தும்
பார்க்காமல் செல்பவர்கள்,
நினைவொன்றைத் தர மறப்பதில்லை.

இளமதி  

தங்களை நிலம் விரித்திருக்கும்
மரத்தின் பெயர் என்ன என்று
யோசிப்பதில்லை
அதன் நிழலும்,
அவசரமாய் அதில் ஒதுங்கும்
வழிப்போக்கனும்.
டிகே கலாப்ரியா


சுட்டுரையிலிருந்து...

ரோஜாவிற்கு  வாழ்க்கை
முள்ளில்தான் என்றாலும், 
அழகாகப் பூத்துச் சிரிக்கின்றது, 
என்னைப்போல்.

அமுதவள்ளி 

ஆம். யார் உங்களைத் தேடித் தவிப்பார்கள்
என்று நம்புகின்றீர்களோ...
அவர்களுக்கு 
நீங்கள் இத்தனை நாட்கள்
தொலைந்து போயிருந்ததே தெரியாது. 

வித்யா 


வாழ்க்கையில் பெருசா 
என்ன சாதிச்சேனு கேட்டா... 
கெத்தா சொல்லுவேன்:
நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும்
நான் யாரையும் 
ஏமாற்றியது இல்லை  என்று.

உன்னை அறிந்தால் 


வாழ்க்கையில் பெருசா 
என்ன சாதிச்சேனு கேட்டா... 
கெத்தா சொல்லுவேன்:
நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும்
நான் யாரையும் 
ஏமாற்றியது இல்லை  என்று.
உன்னை அறிந்தால் 

வலைதளத்திலிருந்து...


காந்தியடிகள் தன் வாழ்க்கைவரலாற்றை "சத்திய சோதனை' என்னும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். அதில் அவர் தன் குழந்தைப் பருவத்தைப் பற்றி ஒரு சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். ஒருமுறை அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அரிச்சந்திரனின் வாய்மை தவறாத பண்பு அவரைக் கவர்ந்தது. சத்தியத்தின் மீது அரிச்சந்திரன் கொண்டிருக்கும் பற்று, எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வழங்கிவிடுவதைப் பார்த்து அவர் வியப்படைந்தார். தன் வாழ்நாளில் "சத்தியமே தனக்குரிய வழி' என அக்கணத்தில் காந்தியடிகள் முடிவெடுத்தார்.
ஒரு மனிதனுக்குள் உருவாகும் மாற்றத்துக்கு ஓர் எளிய கதை தூண்டுகோலாக அமையும் என்பதைப் புரிந்து கொள்ள இந்தச் சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு. 
அந்தக் காலத்தில் கணக்குப் பாடத்தில் கூட கதை கலந்திருந்தது. ஒரு பசு ஒரு மரத்தில் பத்து மீட்டர் நீளமுள்ள கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது. கயிற்றின் கடைசி விளிம்பு வரைக்கும் சென்ற பசு அந்தப் புள்ளியிலிருந்து புல்லை மேய்ந்தபடி வட்டப்பாதையில் நடந்து சென்று மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே வந்து சேர்கிறது. பசு நடந்த தூரத்தின் அளவு என்ன?
ஒரு காட்சி. ஒரு கதை. அதை மனத்துக்குள் விரிவாக்கிப் பார்க்கும் ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ விடையை மிக எளிதாகத் தொட்டுவிடுவார்கள். பத்து மீட்டர் ஆரமுள்ள வட்டத்தின் சுற்றளவு என்ன என்கிற இன்றைய கேள்வியின் நேற்றைய வடிவம் இது.
ஒரு கணக்கைப் புரிய வைப்பதற்குக் கூட ஒரு கதை தூண்டுகோலாக அமைவது சாத்தியம். ஒரு கோணத்தில் கதை வழியாகவே சிக்கலான சமூக உண்மைகளையும் தத்துவங்களையும் கூட புரிய வைத்துவிட முடியும். அந்த அளவுக்கு கதை, ஆற்றல் வாய்ந்த ஊடகமாகும்.

‌h‌t‌t‌p://‌w‌r‌i‌t‌e‌r‌paa‌va‌n‌na‌n.b‌l‌o‌g‌s‌p‌o‌t.c‌o‌m/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com