வாங்க  இங்கிலீஷ் பேசலாம் - 321

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க  இங்கிலீஷ் பேசலாம் - 321

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  

அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும் அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. மன்னர் வீரபரகேசரி மனிதவளத்துறை அமைச்சரின் மகனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறார். 

அப்போது சில ஆங்கிலச் சொற்கள் குறித்த விளக்கங்களை அவர்கள் விவாதிக்கிறார்கள். அதை ஒட்டி wash out மற்றும் wash away எனும் வினைத் தொடர்கள் இடையிலான வித்தியாசத்தை கணேஷ் ஜூலியிடம் கேட்கிறான்.

ஜூலி: வாஷ் அவுட்டுக்கு சில மாறுபட்ட அர்த்தங்கள் உண்டு. உதாரணமா நீ ஒரு தண்ணீர்ப் புட்டியையோ, பாத்திரத்தையோ கழுவுகிறாய். அதை எப்படிச் சொல்வாய்?

கணேஷ்: I washed the water bottle. 
ஜூலி: ரைட்டு. ஆனா நீ அதன் உட்பகுதியை தேய்த்துக் கழுவியதாக குறிப்பாகச் சொல்லணும். அப்போ என்ன பண்ணுவே? 
கணேஷ்:  I washed the inside of the water bottle.

ஜூலி: இல்லை. அதை விட எளிதாக I washed out the water bottle என்று சொல்லலாம். ஒரு ர்ன்ற்  கூடுதலாகச் சேர்த்ததும் எப்படி நுட்பமாகப் பொருள் மாறி விடுகிறது என்று பார்த்தாயா? 
கணேஷ்: ஆமாம் 
ஜுலி: அது தான் ஆங்கிலத்தின் அழகு. சரி, இப்போ நீ  தலையில டை அடிச்சிக்கிற. 
கணேஷ்: நான் என்ன தாத்தாவா? நான் ஏன் டை அடிக்கணும்? 
ஜூலி: இன்னிக்கு இளைஞர்கள் ஸ்டைலுக்காக பல வண்ணங்களில் டையிங் பண்றாங்களே, அதைச் சொன்னேம்பா. 
கணேஷ்: ஓ... அதுவா? என் கெர்ல் பிரண்ட் அதைப் பண்ணுவா. அவள் கோபமா இருந்தா சிவப்பு வண்ணத்தை பூசிக்கிட்டு வந்து நிற்பா. கேவலமான மூடில் இருந்தா பழுப்பு வண்ணம். நார்மலா இருந்தால் சில்வர் வண்ணம். அவள் தலைமுடியைப் பார்த்ததுமே இவளை இன்னிக்கு இப்படித்தான் ஹேண்டில் பண்ணனுமுன்னு நான் முடிவு பண்ணிடுவேன். 
ஜூலி: ஆமா, அவள் பயன்படுத்துறது 
தற்காலிகமான வண்ணம். அதன் பெயர் 
என்னென்னு தெரியுமா? wash out hair colour. 
கணேஷ்: ஓ... அப்படி ஒண்ணு இருக்குதா?
ஜூலி: ஆமா, அதை தலையில் அடிச்சிக்கிட்டு வேண்டாமுன்னா ஷாம்பூ போட்டு கழுவினா போயிடும். The colour would wash out after just one shampoo. Wash out என்பதுக்கு இப்படியும் ஒரு பொருள் உண்டு. அதாவது தற்காலிகமான ஒரு வண்ணமோ அழுக்கோ கழுவி சுத்தமாக மறைவது தான் washing out. 

கணேஷ்: அது சரி,  just one shampoo என்று சொல்லணுமா just one shampoo wash என்று சொல்லணுமா? எது சரி? 
ஜூலி: நல்ல கேள்வி. ஷாம்பூ என்றால் கேசத்தை கழுவுவதற்கான திரவ வடிவ சோப்பு மட்டுமல்ல. தலையை ஷாம்பூவால் கழுவுகிற செயலையும் நாம் shampoo என்று சொல்ல முடியும். Shampoo can be an act of washing something,especially your hair,with shampoo. AúR úTôX I shampooed my hair after taking a dip in the pond என்றும் சொல்லலாம். குளத்தில் மூழ்கிக் குளித்து விட்டு தலையை ஷாம்பூ போட்டு அலசினேன். இந்த மாதிரி இரண்டு விதங்களில் ஷாம்பூ எனும் சொல்லை ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம். அதனால்  just one shampoo  என அந்த 
வாக்கியத்தில் பயன்படுத்தியது சரி தான்.  
கணேஷ்: ஒரு ஷாம்பூவுக்குள் இவ்வளவு விசயங்களா? ஆங்கிலத்தில் நிறைய பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாக சுலபத்தில் மாற்று
கிறார்கள் அல்லவா? 
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com