இணையம்... நாடுங்கள்... நல்லதையே!

இளைஞர்களையும் இணையதளத்தையும் பிரிக்க முடியாது என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது. இணையத்தை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இணையம்... நாடுங்கள்... நல்லதையே!


இளைஞர்களையும் இணையதளத்தையும் பிரிக்க முடியாது என்ற சூழல் தற்போதுஉருவாகியுள்ளது. இணையத்தை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

முன்பெல்லாம் புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்காக பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு இளைஞர்கள் செல்வர். படிப்பு சார்ந்த குறிப்புகளை எடுப்பதற்காக நூலகங்களுக்குச் செல்வர்.

ஆனால், இப்போது எந்தத் தேவைக்காகவும் இளைஞர்கள் வெளியே செல்ல வேண்டியஅவசியமில்லை. படிப்பு முதல் புதிய பயிற்சி வகுப்புகள் வரை அனைத்துமே தற்போதுஇணையவழியில் கிடைக்கின்றன. உலகமே ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டது.

ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், ஸ்மார்ட் போன் இளைஞர்களுக்குப் பல்வேறு பயன்களைவழங்குகிறது. எந்தத்தகவலையும் இளைஞர்கள் தற்போது தேடி அலைய வேண்டியதில்லை. இணையத் தொடர்பின் மூலமாக அனைத்து முக்கிய தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமே அவர்களால் பெற்றுக் கொள்ள முடிகிறது.

எனினும், இளைஞர்களுக்குத் தற்போது உள்ள முக்கிய பிரச்னை, பொழுதுபோக்கிலும் தற்போது ஸ்மார்ட் போன் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்மார்ட் போன், டிவி உள்ளிட்டவற்றில் இளைஞர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அவர்களது வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அந்நிகழ்ச்சிகளை அவர்கள் பார்ப்பதோடு நிறுத்துவதில்லை. அந்நிகழ்ச்சிகள் தொடர்பாக நண்பர்களிடம் உரையாடுகிறார்கள். நிகழ்ச்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்களை விமர்சிக்கின்றனர்.

தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவே அரசியல், சுற்றுச்சூழல், பாலியல்உள்ளிட்ட அனைத்துவிதமான செய்திகளையும் அவர்கள் அறிந்து கொள்கின்றனர்.

அந்நிகழ்ச்சிகள் சமூகத்தின் மீதான இளைஞர்களின் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில்முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பலர் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர். கருத்தை வெளியிடும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்றாலும், குறிப்பிட்ட வகையானகருத்துகள் சமூகத்துக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை நோக்கி பல இளைஞர்கள் ஈர்க்கப்படுவதால், சமூகத்தில் பல்வேறுபிரச்னைகள் ஏற்படுகின்றன.

சமூக வலைதளங்களில் காணப்படும் கருத்துகளைப் பகுத்தறிந்து ஆராய வேண்டும்.

தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களில் எவை உண்மையானவை, எவை வதந்திகள் என்பதைப் பகுத்தறியும் திறனை இளைஞர்கள் கட்டாயமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இணையத்தில் எங்கு நம்பகத்தன்மை மிகுந்த தகவல்கள் கிடைக்கின்றன என்பதை இளைஞர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், சமூகத்தின் மீதான அவர்களது கண்ணோட்டம் முற்றிலுமாக மாறிவிடும்.

சமூக வலைதளங்கள் நண்பர்களுடன்எளிதில் தொடர்பு கொள்வதற்கான சிறந்ததளமாக உள்ளன. ஆனால், அத்தகைய தளங்கள் தற்போது வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட நபர் வெளியிடும் படங்களும் கருத்துகளும் அவரது நடத்தையை முற்றிலும் வெளிப்படுத்தாது என்கிறஉண்மையை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே அனைவரும் சமூக வலைதளங்களில் வெளியிடு
கின்றனர். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அர்த்தமில்லை.

அவர்கள் வெளியிடும் படத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்களுடன் நமது வாழ்க்கைநிலையை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்வதில் எந்தப் பலனுமில்லை. தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் காட்டிக் கொள்ளும் அனைவருக்கும் பல்வேறு விதமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.

சமூக வலைதளங்கள் வாயிலாக மற்றவர்களின் வாழ்க்கையை உற்றுநோக்குவதாலும், அவர்கள் பதிவிடும் படங்களை "லைக்' செய்வதாலும் பொழுது விரைவாக நகருமே தவிர, அதன் மூலமாக எந்தவிதப் பலனும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.

சமூக வலைதளங்கள் குறித்த சரியானபுரிதல் ஏற்பட்டுவிட்டால், நாளின் பெரும்பாலான பகுதியை சமூக வலைதளங்களில் நாம் செலவிட மாட்டோம். அனைத்து விஷயங்களிலும் நல்லவையும் உள்ளன. தீயவையும் உள்ளன. எனவே நல்லதை மட்டுமேகண்டறிந்து ஸ்மார்ட் போன், இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com