இணைய வெளியினிலே...

On the Internet ...
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....


மனிதர்களைப் புரட்டுகிறேன்...
ஒவ்வொரு பக்கத்திலும் ஆச்சரியங்கள்.

மதிகுமார் தாயுமானவன்

எல்லைக் கோடுகளை முன்பே தீர்மானித்தால்...
எந்தத் துன்பமும் இல்லை.

நேசமிகு ராஜகுமாரன்

தேடிப் போனால் தெருவிடையே
திறந்திருக்கும் வாயில்கள் பிறவும்
தென்படக் கூடும்.
எனினும் ,மூடியக் கதவின் முன்
முகம் கவிழ்ந்தொருவன்
பிடிவாதமாக அமர்ந்திருக்க ,
கண்ட கடவுள்
கண்ணாடி முன்னின்று
புன்னகைத்துக் கொள்கிறார்
நிறைவாக.

க. மோகனரங்கன்

உன் இலையில் புழுவானேன்.
உன் இலையை உண்டேன்.
உன் இலைகீழ் தொங்கியதென் கூடு.
உன்னிடமிருந்தே
உருமாறிப் பறந்தேன்.
உன் பூவில்தான் அமர்வேன்மீண்டும்.

வண்ணதாசன் சிவசங்கரன் எஸ்

சுட்டுரையிலிருந்து...


வயித்துக்கு சத்தான உணவு மட்டுமே போதுமானது.
மத்தபடி உணவுல, நாக்குக்கும் மூக்குக்கும்
நாம கொடுக்கற லஞ்சம் தான்,
சுவையும் வாசனையும்.

முட்டாள்

இந்த வருடம் சரியாகிவிடும்
அடுத்த வருடம் சரியாகிவிடுமென காத்திருந்து..
இப்போதெல்லாம் இது வேண்டாமெனும் மனநிலையை
காலம் தந்து விடுகிறது..!
ஆசைகளும் ஆயுளை இழந்துவிடுகின்றன.

நீர்ப்பறவை

உங்கள்
நியாயமே
அவர்களுக்கும்
நியாயமாக இருக்கும்
என்று
நினைக்காதீர்கள்
அது வேறாகவும் இருக்கலாம்.

சவேதி

எதையும் எடுத்துக் கொள்ளாதே...
எல்லாம் உனக்குதான்
என்கிறான் புத்தன்

கார்க்கிபவா

வலைதளத்திலிருந்து...

ஆடைகளை பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க, நொந்து நூலாகிப்போகிறது உடல்.
உணவினை நாவும் மனமும் தீர்மானிக்க வெந்துச் சாகிறது குடல்.
செயல்பாடுகளை உணர்வும் ஆசையும் தீர்மானிக்க, பாடய்ப்படுகிறது அறிவு.
தேவைகளை விளம்பரங்களும் கெளரவங்களும் தீர்மானிக்க, ஓடாய்த் தேய்கிறது செழுமை.
தொடர்புகளை பயனும் "பசையும்' தீர்மானிக்க, போலியாகிப் போகிறது நட்பு.
காதலை சந்தர்ப்பங்களும் காமமும் தீர்மானிக்க, கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு.
வெற்றியினைப் பணமும் ஜாதியும் தீர்மானிக்க, கேலிக் கூத்தாகிறது தேர்தல்.
நியாயத்தை பதவியும் செல்வாக்கும் தீர்மானிக்க, இறந்து கொண்டிருக்
கிறது தர்மம்.
மொத்தத்தில்,தீர்மானம் செய்ய வேண்டியவை எல்லாம் செயலிழந்து கிடக்க, கேடுகெட்டவை எல்லாம் அரியணையேறிச் சிரிக்க, நரகமாகிக் கொண்டிருக்கிறது...
சொர்க்கமாய் இருக்க வேண்டிய நம் சுக வாழ்வு.

http://yaathoramani.blogspot.com/
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com