வாட்ஸ்ஆப்...  தாமாக அழியும் தகவல்கள்!

தகவல் பரிமாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் தற்போது பணப் பரிமாற்றம் வரை விரிவடைந்துள்ளது.
வாட்ஸ்ஆப்...  தாமாக அழியும் தகவல்கள்!


தகவல் பரிமாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் தற்போது பணப் பரிமாற்றம் வரை விரிவடைந்துள்ளது.
வாட்ஸ்ஆப்பில் பிறருக்கு நாம் அனுப்பும் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தாலும், சில நேரங்களில் பிறர் பகிரும் தகவல்களை யோசிக்காமல் பிறருக்கு நாமும் பகிர்ந்துவிடுகிறோம். அது தேவையில்லாத சண்டைகளையும்,  சச்சரவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.  
ஒருவருக்கு அனுப்பிய தகவலை அவர் பார்ப்பதற்கு 98 நிமிஷம் 16 நொடிகளுக்குள் நாம்  அழித்து விட முடியும்.
இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல்கள் 7 நாள்களுக்குப் பிறகு தானாக அழியும் சேவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு,  ஒரு முறை மட்டும் பார்த்ததும் அழிந்துவிடும் சேவையும் நடைமுறைக்கு வந்தது.
ஆனால் இவை அனைத்தையும் வாட்ஸ்ஆப்பில் உள்ள ஒவ்வொரு நபருக்கானதாக நாம் செட் செய்ய வேண்டும்.
ஆனால் இப்போது, நீங்கள்  உங்கள்  வாட்ஸ்ஆப் கணக்கில் உள்ள அனைவருக்கு அனுப்பிய,  பகிர்ந்த தகவல்களை ஒட்டுமொத்தமாக  ஒரே முறையில் தானாக மறையச் செய்யும் சேவையை வாட்ஸ்ஆப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
24 மணி நேரம் அல்லது 90 நாள்கள் என இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்துவிட்டால் போதும், உங்கள் வாட்ஸ்ஆப்பில் உள்ளவர்கள் அனுப்பும் அனைத்து தகவல்களும் தாமாகவே அழிந்துவிடும். அனுப்பியவருக்கு மட்டுமல்ல, அனுப்பப்பட்டவருக்கும் அந்தத் தகவல் தானாக அழிந்துவிடும். 
எனினும், பகிரப்பட்ட ஒரு தகவலை மற்றொருவர் இந்த புதிய சேவையைப் பயன்படுத்தாமல் பிறருக்குப் பகிர்ந்தால் அந்தத் தகவல் தானாக அழியாது. அதேபோல், அந்தத் தகவலுக்கு அளித்த பதிலும் அழியாமல் இருக்கும்.
ஆனால் ஏற்கெனவே உள்ள வாட்ஸ்ஆப் குழுக்களில் இந்த புதிய சேவையைப் பயன்படுத்த முடியாது. இதற்காக புதிதாக வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கும்போதே தானாக அழியும் இந்தச் சேவையைத் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த புதிய சேவையைத் தேர்வு செய்துவிட்டாலும், தேர்வு செய்வதற்கு   முன்பு உள்ள தகவல்கள் அழியாது.
இதைச் செயல்படுத்த வாட்ஸ்ஆப்பில் உள்ள ஒரு நபரின் பெயரைத் தேர்வு செய்து, டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் என்பதை கிளிக் செய்து 24 மணி நேரம் 
அல்லது 7 நாள்கள் அல்லது 90 நாள்களைத் தேர்வு செய்ய வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com