உங்களுக்கு என்று  ஓர் இணையதளம்!

உலகமயமாக்கலுக்குப் பிறகு உலகமே மாறிவிட்டது. அரசு கட்டுப்பாட்டில் இருந்து தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதுமைகள் தோன்றத் தொடங்கிவிட்டன.
உங்களுக்கு என்று  ஓர் இணையதளம்!

உலகமயமாக்கலுக்குப் பிறகு உலகமே மாறிவிட்டது. அரசு கட்டுப்பாட்டில் இருந்து தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதுமைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. இது வேலைச்சந்தையின் போக்கையே புரட்டிப் போட்டுள்ளது. வேலை கேட்டு நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை அளித்துவிட்டு மாதக்கணக்கில் காத்திருந்த காலம் இருந்தது. அதன்பிறகு, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கல்லூரிகளுக்கே வந்து திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வேலைக்கு சேர்த்துக்கொண்டார்கள். இப்போது வேலைச்சந்தையின் பரப்பு உலக அளவில் விரிந்துள்ளது. 

திறமை... திறமை... திறமைக்கே முதலிடம். திறமையானவர்களைத் தேடி உலகம் முழுவதும் சல்லடை போட்டு தேடும் நிலைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் மாறியுள்ளன. அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவில் தனது நிறுவனத்திற்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. இதற்காகவே  ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ப்ண்ய்ந்ங்க்ண்ய்.ஸ்ரீர்ம் என்ற சமூகவலைதளம் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வேலைதேடுவோரும், வேலை அளிப்போரும் ஒன்றுகூடும் களமாக இத்தளம் மாறியுள்ளது. இத்தளத்தில் வேலைதேடுவோர் குறித்தவிவரங்களை பதிவுசெய்யும்போது, அவருடைய தனிப்பட்ட இணையதளத்தின் முகவரியையும் கேட்கிறது. 

 பொதுவாகவே, ஒருவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு தனிப்பட்ட இணையதள முகவரியை பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்திருக்கும் நிலையைக் காணமுடிகிறது. அந்த அளவுக்கு தனிப்பட்ட இணையதளத்தின் முக்கியத்துவம் பெருகிவிட்டது. நிறுவனங்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள தனியாக இணையதளம் இருப்பது போலவே, ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள், வேலை அனுபவம், தனித்திறமை, அதை வெளிப்படுத்துவதற்கான ஆதாரங்கள், ஆய்வுக்கட்டுரைகள், தனி இயல்பு, பொதுவாக விரும்பும் நிகழ்ச்சிகள், தனிப்பட்ட நாட்டம், சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்ட நிகழ்வுகள் போன்ற எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாக இணையதளம் இருக்க வேண்டியது அவசியமாகும். 

வேலை தேடி பொதுவாக அளிக்கப்பட்ட  பயோ-டேட்டா  தான் இன்றைக்கு தனிப்பட்ட இணையதளமாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஒலிகுறிப்புகள், காணொலிகள், நிகழ்வு தொகுப்புகள், வடிவமைத்த திட்டமாதிரிகள், இயங்குமுறைகள் உள்ளிட்ட பல விவரங்களை தன்குறிப்பில் சேர்க்க முடியாது. அதற்காகவே தனிப்பட்ட இணையதளத்திற்கு வேலைச்சந்தையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. 

அந்த இணையதளம் வடிவமைப்பில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் தேவையான தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இயல்புகள், திறமைகளைக் கூர்ந்து கவனித்துள்ள பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், பேராசிரியர்கள், நெறிஞர்களின் கருத்துகளை இணையதளத்தில் இணைப்பது மதிப்பை உயர்த்தும். 

இணையதள வகைகள்: இணையதளங்கள் நிலையான அல்லது மாறாத இணையதளம் மற்றும் இயங்கு அல்லது ஆற்றல்வாய்ந்த (டைனமிக் வெப்சைட்) இணையதளம் என இருவகைகளாக உள்ளன.   இயங்கு இணையதளம் அவ்வப்போது புதியனவற்றை சேர்த்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். 

புதிதாக படங்கள், காணொலிகள், ஒலிக்குறிப்புகள், செய்முறைவிளக்கங்கள், திட்டவிவரங்களை சேர்த்துக் கொள்ளலாம். இணையதளத்தைப் புதிய புதிய தகவல்களோடு புத்துணர்வாக வைத்துக் கொள்வதற்கு இயங்கு இணையதளம் சரியான தேர்வாக இருக்கும்.

இணையதளத்தை சொந்தமாகத் தயார் செய்வதற்கு பல்வேறு கற்றல் காணொலிகள், கருவிகள் இணையதளத்தில் குவிந்துள்ளன. அடிப்படையான வடிவமைப்பு கட்டுமானத்தோடு இணையதளத்தை அமைக்கத் தொடங்கலாம். வடிவமைப்பு, உள்ளடக்கம், கட்டமைப்பு ஆகியவற்றில் அடுத்தடுத்து மாற்றங்களை செய்துகொள்ளலாம். 

எதற்காக இணையதளம்?: கல்வித்தகுதி, தனித்திறனைகள், அனுபவங்கள், பயிற்சிகள், முக்கியமான சாதனைகள் இடம்பெற்றிருக்கும் இணையதளம் ஒருவரின் மதிப்பை உயர்த்தும். கடந்தகாலத்தில் வேலைசெய்த நிறுவனங்கள், அங்கு வகித்த பதவிகள், கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு இணையதளம் உதவியாக இருக்கும். திறமைகளை வளர்த்துக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகளும் ஒருவரின் ஆர்வத்தை வெளிப்படுத்தி, மதிப்பை உயர்த்தும்.

தனிப்பட்ட இணையதளம் இருப்பதால், உலகின்எந்தப் பகுதியில் இருந்தும் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள இயலும். ஒருவரின் இணையதளத்தை பல நிறுவனங்களும், தகுதியான பலரும் காண நேரிடும்போது, வேலை வாய்ப்புகளின் பரப்பும் விரிவடையும். கடுமையானபோட்டி இல்லாத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒரே திறமை கொண்டவர்களில் தனித்தன்மையுடன் விளங்குவதை உலகுக்கு எடுத்துச் சொல்ல இணையதளம் கைகொடுக்கும். 

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தகுதியான வீரர்களை தேர்வு செய்து ஒரே வரிசையில் ஒரே நேர்கோட்டில் நிற்க வைத்திருந்தாலும், மணி ஒலித்தவுடன் வேகமாக ஓடி எல்லைக்கோட்டை தொடுபவரே வெற்றியாளராக போற்றப்படுகிறார். அப்படித்தான், போட்டிகள் நிறைந்த காலவெளியில் திறமையானவர்கள் குவிந்திருக்கும்போது அதில் தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன. அதை முழுமையாக வெளிப்படுத்தும் வேலையைத் தான் இணையதளம் செய்கின்றது. 

ஒருவரைப் பற்றிய விவரக் குறிப்புகளுடன் கூடிய விரிவான, விளக்கமான இணையதளம், வாய்ப்புகளை வாரிவழங்காவிட்டாலும், அழிக்க முடியாத தடயத்தைவிட்டு செல்லும் என்பது மட்டும் உறுதி. இது இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் கைகொடுக்கும்.

இணையவெளி காலம்: மெய்நிகர்(வர்சுவல்) அல்லது இணையவெளி(இன்டர்நெட்) உலகத்தில் வாழும் சூழலில் தொழில் நிறுவனங்கள் அல்லது வேலைக்கு ஆள்தேடுவோரின் பார்வையில் படும்படியான இணையதளங்கள், ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை ஏற்படுத்தி செல்லும். அது கைநிறைந்த, மனம்நிறைந்த வேலைவாய்ப்பாக மாறும். தொழில்ரீதியாக நிகழும் மாற்றங்களை அவ்வப்போது தனிப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவண்ணம் இருப்பது அவசியமாகும்.  

இணையதளத்தில் அளிக்கப்படும் தகவல்கள் துல்லியமானதாக இருப்பதும் முக்கியம். அப்போதுதான் இணையதளம் அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். 

வேலை தேடும்போது தன்குறிப்பை தயார்செய்வதற்கு பதிலாக, தன் இணையதளத்தை (பர்சனல் வெப்சைட்) தயார் செய்ய புறப்படுவது காலத்தின் தேவையாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com