புத்தாண்டு வாழ்த்துகள்... வாட்ஸ்அப் சாதனை!

புத்தாண்டு என்றாலே ஒன்று சேர்ந்து வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு அந்தநிலை மாறி தனிமை, சமூக இடைவெளி கொண்டாட்டங்களாகிவிட்டன.
புத்தாண்டு வாழ்த்துகள்... வாட்ஸ்அப் சாதனை!


புத்தாண்டு என்றாலே ஒன்று சேர்ந்து வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு அந்தநிலை மாறி தனிமை, சமூக இடைவெளி கொண்டாட்டங்களாகிவிட்டன. இதற்கு முழுக்க கரோனா பரவல் அச்சம் தான் காரணம்.

குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் செயலி மூலம் அண்மைக் காலங்களில் புத்தாண்டு வாழ்த்துகள் அதிக அளவில் பரிமாறப்பட்டு வந்தன. 

இதை நிகழாண்டு வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் விடியோ அழைப்புகள் முறியடித்துவிட்டன. 

ஆம், நிகழாண்டு புத்தாண்டு தினத்தன்று வாட்ஸ்அப் மூலம் 104 கோடி விடியோ, தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை  படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது 50 சதவீதம் அதிகம். 

முகநூல் நிறுவனத்தின் பிற சேவைகளான இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் ஆகியவற்றிலும் புத்தாண்டு தினத்தன்று அதிக அளவில் வாழ்த்துகள் பகிரப்பட்டுள்ளன. 

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அச்சத்தால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பொது வெளியில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களுக்கு விடியோ அழைப்புகள் மூலம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் குழு விடியோ அழைப்புகள் புத்தாண்டு இரவில் இரண்டு மடங்கு அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

முகநூல், இன்ஸ்டாகிராமில் நாடு முழுவதும் சுமார் 5.5 கோடி பேர் நேரடி ஒளிபரப்பு செய்து புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.  

நிகழாண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய சேவைகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. கணினி மூலம் பயன்படுத்தப்படும் "வாட்ஸ்அப் வெப்'பில் இருந்தும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், செல்லிடபேசி மற்றும் கணினி தவிர பிற சாதனங்களிலும் ஒரே வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தவும், விடியோ அழைப்புகளை மியூட் செய்யும் வசதியும், தகவல்களைப் பின்னர் படித்து கொள்ளும் வசதியும், மருத்துவ காப்பீட்டை பெறும் வசதியும் வாட்ஸ்அப்பில் விரைவில் சேர்க்கப்பட உள்ளன. 

மக்கள் ஒன்று கூடுவதில் கரோனா நீண்ட இடைவெளியை உருவாக்கியிருந்தாலும், வாட்ஸ்அப் போன்ற மெசேஞ்சர் செயலிகள் அந்த இடைவெளியைக்  குறைக்க உதவுவது வரவேற்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com