இணைய வெளியினிலே...

தேய்வதுமில்லை வளர்வதுமில்லை!தேய்வதாயும் வளர்வதாயும் சொல்லப்படுகிறது...நம்பப்படுகிறது.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


தேய்வதுமில்லை வளர்வதுமில்லை!
தேய்வதாயும் வளர்வதாயும் சொல்லப்படுகிறது...
நம்பப்படுகிறது.

மதியழகன் சுப்பையா

வெயிற்போதில் செருப்பு மறு.
மழைப்போதில் குடை மறு. 
குளிர்ப்போதில் போர்வை மறு.

நாணற்காடன் சாரா

சுதந்திரமென்பது கொடுக்கப்படுவதல்ல... இயல்பிலேயே இருப்பது.
அது கொடுக்கப்படுமெனில் அங்கு முன்பேயுள்ள கட்டுப்பாடுகளை சற்று தளர்த்துதல் மட்டுமே தான்.

நிறைமதி 

பயணங்களின் சுவாரஸ்யங்கள் முடிந்து விட்டன...
செல்பேசிக்கு முன்பே ! 
நேசமிகு ராஜகுமாரன்


சுட்டுரையிலிருந்து...


ஒரே பக்கத்தில் எழுத வேண்டிய உன் கவலைகளை ஒவ்வொருநாளும் நினைத்து நினைத்து உன் வாழ்க்கைப் புத்தகம் முழுவதையும்  நிரப்பி விடாதே. 

மிட்டாய்


அத்தனை இழப்பிலும் பிடித்தவரின்  நலனுக்காக புன்னகை பூத்து கடந்து செல்லும் அன்புக்குரியோரை...
எப்போதுமே இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்! இழந்தால் மீண்டும் கிடைக்க மாட்டார்கள்.

நீர்ப்பறவை


நாம் ஒருவரை விரும்பும்போது அவர்களின் நல்ல குணத்தையும், 
வெறுக்கும் போது கெட்ட குணத்தையும் பார்ப்பதுதான் இயல்பு.

வாட்


கடந்த காலத்தை அசைபோட்டு நிகழ்காலத்தைக் கரைப்பவனுக்கு
எதிர்காலம் என்று ஒன்று இருக்கவே  இருக்காது.

வெண்பா



தனக்கு வலித்தாலும் தனக்கானவர்களுக்கு வலிக்கக் கூடாது என்பதே அன்பின் உச்சம்..!

கெளசல்யா


வலைதளத்திலிருந்து...

கேட்பதன் தேவை இங்கு அதிகம். கேட்க மட்டும் பழகிக் கொள்ளுங்கள்.  

பல திசைகளிலிருந்து அழுத்தங்கள் தாக்கும் இந்த இறுக்கம் நிறைந்த நாட்களில், நானறிந்த சிலர், தனக்கே சுயமாகச் செய்யும் நல்ல காரியமாக, உடைந்து கொட்டுகிறார்கள். இதுதான் இதுவரை  கேட்டதிலேயே மிகக் கடினமானது என்று நினைத்திருப்பதை அடுத்த நாளே இன்னொருவர் உடைக்கிறார்.    

மன அழுத்தத்தில், அது கூட்டிய கனத்தில் சிந்திக்க மறந்து முடங்கியிருப்பவர்கள், ஒருகட்டத்தில் அழுத்தத்தைப் பகிரும்போதே, அவர்களுடைய மனதே சில பல தீர்வுகளை, ஆறுதல்களைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது. அதனால் பகிரும்போதே ஆசுவாசமும், பகிர்ந்ததும் நிம்மதியும், ஒருவித தெளிவும் கிட்டிவிடலாம். அதன்விதமாகவே ஒருமுறை முழுவதும் கொட்டி முடிக்கின்றவர்கள், மீண்டும் மீண்டும் அது குறித்து பெரும்பாலும் பேசுவதில்லை. அப்படிப் பேசாமல் இருக்க சுயமாகத் தெளிவடைவது ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கிய காரணம், தன் பிரச்னையைப் பேசி முடிக்கும்போதுதான், "அட இவ்ளோதானா!?' என்று அதுவரை பிரம்மாண்டமாக நினைத்திருந்த பிரச்னையின் உண்மை வடிவம் புலப்படுவது.

என்னைப் பொருத்தவரையில் எனக்கென்று ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதையும், மற்றவர்கள் சொல்வதையும் ஒரு போதும் இணைத்து குழப்பிக் கொள்வதில்லை. இது தனி, அது தனி. சில நேரங்களில் ஒப்பிட்டு அதிலிருந்து ஏதேனும் எடுத்துக் கொள்ள முடியுமா எனத் தேடுவதுண்டு. உண்மையில் கேட்கக் கேட்க வாழ்க்கை மீது ஒருவித தீவிரமும், பிடிமானமும் வருகின்றது. காரணம், கனத்தை இறக்கி ஒவ்வொருவரும், இத்தனையைக் கடந்து வந்திருக்கும்போது உனக்கென்ன எனும் கேள்வி எழுப்பும் தீவிரம் அது. 

உதவி செய்வது என்பது காசு பணமாக, உடல் உழைப்பாக மட்டுமே எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. கனத்தோடு வருகின்றவர்களுக்கும், அதை இறக்கி வைக்க செவி கொடுத்தலே மிகப் பெரிய உதவி. இதில் மிக முக்கியமானது, நம்பிப் பகிரலாம் எனும் இடத்தில் நாம் இருப்பது.

http://maaruthal.blogspot.com/ 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com