வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் ஃபயர், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், இயற்பியல், கணிதம் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு
வேலை... வேலை... வேலை...

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை  


மொத்த காலியிடங்கள்: 368 
பணி: மேனேஜர் ஃபயர் சர்வீஸஸ்)  - 11
பணி: மேனேஜர் (டெக்னிகல்) - 02
சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.1,80,000 
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ஏர் ட்ராபிக் கண்ட்ரோல்)  - 264
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ஏர்போர்ட் ஆப்ரேஷன்ஸ்) - 83
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (டெக்னிகல்)   - 08

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயது வரம்பு: 30.11.2020 தேதியின்படி மேனேஜர் பணியிடங்களுக்கு  32 வயதுக்குள்ளும்  ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு  27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் ஃபயர், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், இயற்பியல், கணிதம் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பணி அனுபவம் குறித்து அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.  

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை மற்றும் குரல் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.170 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழகுநர் (அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்) கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி   ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் அறிய: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005}2020.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.01.2021

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பணி: என்ஜினியரி அசிஸ்டண்ட் 
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.25,000 -1,05,000
வயது வரம்பு: 18 வயது முதல்  26 வயதிற்குள் இருக்க வேண்டும்.    
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடியோ கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமெண்டேசன் மற்றும் கண்ட்ரோல், கெமிக்கல் போன்ற பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி:  டெக்னிக்கல் அட்டென்டன்ட் -ஐ
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.23,000 - ரூ.78,000
வயது வரம்பு: 18 வயது முதல்  26 வயதிற்குள் இருக்க வேண்டும்.    
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் 2 வருட ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தொழிற்பிரிவிற்கு மட்டும் ஒரு வருட ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:  https://plis.indianoilpipelines.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://iocl.com/download/Recruitment_of_Non_executives_in_Pipelines_Division.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.01.2021 


சித்த மருத்துவ கவுன்சிலில்  வேலை

பணி: ரிசர்ச் ஆபிஸர் (சித்தா)  
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்த மருத்துவ பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சித்தா பார்மஸிஸ்ட் .
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல், கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து இரண்டு ஆண்டு சித்தா பார்மசி படிப்பை முடித்திருக்க வேண்டும். 
பணி:  தெரபிஸ்ட் (சித்தா)  
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்தா நர்சிங் தெரபி பாடத்தில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை சென்னையில் செலுத்தத்தக்க வகையில் Central Council for Research in Siddha, Chennai  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டியின் பின்புறம் பெயர், விளம்பர எண், விண்ணப்பிக்கும் பணியின் பெயர் குறிப்பிட வேண்டும்.  மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டாம். 
விண்ணப்பிக்கும் முறை:  www.siddhacouncil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director General, Central Council for Research in Siddha, Arumbakkam, Chennai } 600 106.

மேலும் விவரங்கள் அறிய: http://siddhacouncil.com/ccrs/wp}content/uploads/2020/11/Advt.}No.}22020}AWC}posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.01.2021

இந்திய கடலோரக் காவல்படையில் வேலை


பணி: நவிக் (ஜெனரல் டூட்டி) 
காலியிடங்கள்: 260
தகுதி: 10 + 2 படிப்பில் கணிதம், இயற்பியல் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: நவிக் (டொமஸ்டிக் பிராஞ்ச்)
காலியிடங்கள்: 50
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: யாந்திரிக் (மெக்கானிகல்)
காலியிடங்கள்: 31
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிகல் பிரிவில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணி: யாந்திரிக் (எலக்ட்ரிகல்)
காலியிடங்கள்: 7
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரிகல் பிரிவில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். 
பணி: யாந்திரிக் (எலக்ட்ரானிக்ஸ்)
காலியிடங்கள்: 10
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். 
வயது வரம்பு:  18 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  https://joinindiancoastguard.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://joinindiancoastguard.cdac.in/assets/img/downloads/advertisenment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.1.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com