வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 297

ஊரடங்கு பிரகடனம்  செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 297

ஊரடங்கு பிரகடனம்  செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது on the fiddle எனும் சொற்றொடருக்கு மக்களை ஏமாற்றுவது எனப் பொருள் சொல்லும் புரொபஸர் எப்படி ஆங்கிலத்தில் தோன்றியது, அதன் பின்னுள்ள கதை என்ன என விளக்குகிறார். நீரோ மன்னர் ரோம் நகரம் எரிந்த போது பிடில் எனும் நரம்பிசைக் கருவியை வாசித்து தன்னை மறந்து லயிப்பில் இருந்ததைக் குறிப்பிடுகிறார் அவர். 
அத்தோடு வேறொரு தோற்றக்கதையும் உண்டு எனச் சொல்கிறார். அது என்னவெனக் கேட்போமா?

புரொபஸர்: பழைய காலத்தில் கப்பலில் வேலை பார்த்த மாலுமிகள், பணியாளர்களுக்கு மரத்தால் செய்யப்பட்ட சதுரப் பலகைத் தட்டில் உணவு தருவார்கள். அப்படி தட்டு நிறைய உணவு வழங்கப்பட்டால் அதை square meal  என்பார்கள்.
கணேஷ்: இந்த square meal என்பதை நான் கேள்விப்பட்டிருக்கேனே சார்....
புரொபஸர்: square meal என்றால் திருப்தியளிக்கக் கூடிய நிறைவான சாப்பாடு. Three square meals a days என்று கேள்விப்பட்டிருப்பாய். அது இந்த வரலாற்றில் இருந்து தோன்றியது தான் - ஒரு காலத்தில் மூன்று வேளை ஆரோக்கியமான நிறைவான உணவு கிடைப்பது என்பதே அரிதாக இருந்தது. பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே அது சாத்தியப்பட்டது. பெரும்பாலான சாமானியர்கள் ஒன்று அல்லது இரண்டு வேளைகளே உணவு உண்டார்கள். தேநீர், ஸ்நேக்ஸ் எல்லாம் அப்போது கிடையாது. அதனாலே மூன்று வேளை நிறைவான சாப்பாடு என்பது சாத்தியமான British Navy போன்ற கப்பற்படையில் சதுர வடிவிலான தட்டில் சாப்பாடு வழங்கப்பட்டதால், அதைக் குறிக்கும் விதமாக three square meals எனும் பயன்பாடு தோன்றியது என சொல் வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

கணேஷ்: ஓ... சார், இதுக்கும் fiddleக்கும் ஏமாற்றுக்கும் என்ன சம்பந்தம்?
புரொபஸர்: அதுக்கு வரேன். இந்த சதுர வடிவிலான மரத்தட்டு இருக்கிறதல்லவா இதன் விளிம்பை fiddle எனச் சொல்வார்கள். ஒருவர் இந்த மரத்தட்டில் சாப்பாட்டை வாங்கும் போது விளிம்புக்கும் மேலே நிரம்பி வழியும் அளவுக்கு குவித்து வைத்துக் கொண்டால் அதை taking food on the fiddle எனக் கூறப்பட்டது. அது வரையறுக்கப்பட்டதுக்கு அதிகமாக சாப்பாட்டை எடுத்துக் கொள்ளும் செயல் என்பதால் அடுத்தவர்களை ஏமாற்றுவது என மக்கள் கண்டார்கள். வரிசையில் நின்று சாப்பாடு வாங்கும் பிற படை வீரர்கள் அதனால் கொதிப்படைந்து ர்ய் ற்ட்ங் ச்ண்க்க்ப்ங்  என்பதற்கு ஆட்டையப் போடுவது என பொருள் பட பயன்படுத்தி இருக்கலாம். புரியுதா?
கணேஷ்: ஆமா சார், இது சுவாரஸ்யமா இருக்கே. இப்படியொரு வரலாறு உள்ளதா நான் யோசிச்சதே இல்லை.
புரொபஸர்: ஒவ்வொரு சொல்லும் ஒரு வரலாற்றுக் 
களஞ்சியம். அதைத் தெரிஞ்சுக்கிட்டா நம்முடைய சொல் 
வளமும் அதிகமாகும், வரலாற்று அறிவும் செறிவாகும்.
கணேஷ்: சார் இன்னொரு சந்தேகம்: feathering the nest என நமது மாமன்னர் தன் அமைச்சர்களை நோக்கிச் சொன்னாரே அது ஏன்? அதைக் கேட்டு அவர்கள் சிரித்துக் கொண்டு இருந்தார்களே... ஏன்? 
வீரபரகேசரி: ஏன் சிரித்தார்கள் என்றால் those fellows are as daft as a brush. வேறொண்ணும் இல்லை. 
பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்துறை அமைச்சரிடம்: 
மன்னர் பிரஷ் கேட்கிறார். ஓடிப் போய் எடுத்துக் கொண்டு வா.
உள்துறை அமைச்சர்: பல் தேய்க்கிற பிரஷ் தானே? 
வீரபரகேசரி சிரித்தபடி: நான் சொன்னேன் இல்லியா? 
கணேஷ்: அப்படி என்றால் என்ன தான் சார் அர்த்தம்?
 புரொபஸர்: ஊழல் செய்கிறார்கள், தமது பதவி, அதிகாரத்தை பயன்படுத்தி அனுகூலங்கள் அனுபவிக்கிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள், வாழ்க்கையை வசதி பண்ணிக் கொள்கிறார்கள் என feathering the nestக்கு அர்த்தம். புரியுதா? 
கணேஷ்: புரியுது சார். ஆனால் அதற்கும் பறவைக் கூட்டுக்கு இறகுக்கும் என்ன சம்பந்தம்? இது புரியாத அமைச்சர்களை ஏன் மாமன்னர் பல் தேய்க்கிற பிரஷ் என்கிறார்? 
புரொபஸர்: சரி சொல்றேன்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com