கரோனா காலம்... வீடு தேடி வரும் உணவுகள்!

கரோனா  தொற்று ஏற்படுவதற்கு முன்பே ஆன்லைனில் பொருள்களை வாங்கும் பழக்கம் மக்களிடம் வந்துவிட்டது.
கரோனா காலம்... வீடு தேடி வரும் உணவுகள்!

கரோனா  தொற்று ஏற்படுவதற்கு முன்பே ஆன்லைனில் பொருள்களை வாங்கும் பழக்கம் மக்களிடம் வந்துவிட்டது.  செல்லிடப் பேசியின் மூலமாக ஆர்டர் செய்தால்போதும் பொருள்கள் நம் வீட்டுக் கதவைத் தட்டும்நிலை உருவாகிவிட்டது. இந்த வசதியைப் பயன்
படுத்துவதை பெருமையாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். 
கரோனா தொற்றின் காரணமாக   பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு,  வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள் எல்லாம்  வீடு தேடி வரும் நிலை ஏற்பட்டுவிட்டது.  ஒவ்வோர் ஊரிலும் உள்ள கடைக்காரர்கள் அரசின் அனுமதி பெற்று மக்களுக்கு  நேரடியாகச் சென்று இவற்றைத் தருகிறார்கள்.
 கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொது முடக்கம் பல்வேறு காலகட்டங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது. சாலை
களில் இன்றியமையாத பணி செய்பவர்கள் செல்லும் வாகனங்களைத் தவிர, வேறு வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. 
ஆனால் உணவகங்களில் இருந்து உணவுப் பொருள்களை வாங்கி வீட்டில் உள்ள மக்களுக்கு அளிக்கும் ஸ்விக்கி, ùஸாமேட்டோ ஆகிய நிறுவனங்
களின் வாகனங்களை நீங்கள் எப்போதும் சாலைகளில் பார்க்கலாம்.  இந்த நிறுவனங்களின் வாயிலாக உணவுகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
  ஊபர் ஈட்ஸ், ஸ்விக்கி, ùஸாமேட்டோ, ஃபுட்பாண்டா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்தச் சேவைகளை முன்பு வழங்கி வந்தன.
ஆனால், ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை ùஸாமேட்டோ வாங்கியது. ஃபுட்பாண்டா நிறுவனம் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.  அதனால் தற்போது ஸ்விக்கி, ùஸாமேட்டோ நிறுவனங்கள் மட்டுமே உணவு விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஒட்டுமொத்த உணவு விநியோகச் சந்தையையும்  இந்த நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளன.  இதனால் அதிக லாபம் ஈட்டுகின்றன.  மேலும் அதிக லாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை அவை மேற்கொண்டு வருகின்றன. 
கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உணவு விநியோக நிறுவனங்கள் செயல்படுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்திக் கொண்டு  உணவகங்களிடமிருந்து அதிக சேவைக் கட்டணத்தைப் பெறுவதற்கு அந்நிறுவனங்கள் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. 
இது ஒருபுறம் உணவகம் நடத்துபவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும்,  இத்தகைய நிறுவனங்களின் மூலம் அவர்களுக்கு அதிக  உணவு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு
களும் கிடைக்கின்றன.  சில உணவக உரிமையாளர்கள்,   "உணவகங்களில் நேரடியாக ஆர்டர் செய்யுங்கள்' என்று சமூக ஊடகங்களில் மக்களைக் கேட்டுக் கொள்கின்றனர். 
இன்னொருபுறத்தில், வாடிக்கையாளர் சேவைக்கான கட்டணம், உணவகங்
களில் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணம், விளம்பரங்களுக்கான கட்டணம் ஆகியவையே உணவு விநியோக நிறுவனங்களின் முக்கிய வருவாயாக உள்ளது. இவற்றை வைத்தே அந்நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்குச் சம்பளம் தருவது உள்ளிட்ட  எல்லாச் செயல்களையும் செய்ய வேண்டியிருக்கிறது. 
இந்நிறுவனங்கள் விளம்பரக் கட்டணத்தை ஓரளவுக்கு மேல் உயர்த்த முடியாது.  வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தினால் 
அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இதனால் தங்களுடைய லாபத்தை அதிகரிக்க  உணவகங்களில் இருந்து பெறப்படும் சேவைக்கட்டணத்தை அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   
உணவகங்களின் வருவாயைக் கருத்தில் கொள்ளாமல், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சேவைக் கட்டணத்தை உணவு விநியோக நிறுவனங்கள் நிர்ணயித்து வருவதாகவும்,  அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் உணவு விநியோகத்துக்கு அதிக சேவைக் கட்டணம் விதிக்கப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்விக்கி, ùஸாமேட்டோ ஆகிய உணவு விநியோக நிறுவனங்கள் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,247 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
நேரடியாக உணவகங்களில் உணவு பரிமாறப்படும்போது தேவையான பணியாளர்களின் எண்ணிக்கை, தற்போது குறைவு என்பதால் அவர்களுக்குத் தர வேண்டிய சம்பளமும் அதிக  அளவில் குறைந்துவிடுகின்றது.    அவற்றின் ஒரு பகுதியைத்தான் சேவைக்கட்டணமாகக் கேட்பதாக உணவு விநியோக 
நிறுவனங்கள் தெரிவிக்கின்றது.  எனவே அதைச் செலுத்துவதற்கு உணவகங்கள் தயங்கக் கூடாது என்று உணவு விநியோக நிறுவனங்களின் தரப்பில் கூறப்படுகிறது. 
போட்டி நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில்  ஸ்விக்கி, ùஸாமேட்டோ நிறுவனங்களை மட்டுமே உணவகங்கள் தற்போது பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.  இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான், உணவு விநியோகத்திலும் விரைவில் களமிறங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் போட்டிக்கு வந்தால், ஸ்விக்கி, ùஸாமேட்டோ நிறுவனங்கள் தற்போதுள்ள தங்கள் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com