பிரிட்டிஷ் கவுன்சிலின் ஸ்காலர்ஷிப்!

இங்கிலாந்தின் 4 முக்கிய பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியுடன் "கிரியேட்டிவ் எக்கானமி ஸ்காலர்ஷிப்' என்ற ஊக்கத் தொகை திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சிலின் ஸ்காலர்ஷிப்!

இங்கிலாந்தின் 4 முக்கிய பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியுடன் "கிரியேட்டிவ் எக்கானமி ஸ்காலர்ஷிப்' என்ற ஊக்கத் தொகை திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் இந்திய மாணவர்களும், படைப்பாக்கம் சார்ந்த பொருளாதாரத்தில் ஆர்வமுடைய இளம் தொழில் வல்லுநர்களும் பயன் பெறுவார்கள். கலாசார கொள்கை மற்றும் கலாசார, பண்பாட்டு மேலாண்மை தொடர்பான முதுகலைப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

வேகமாக வளர்ந்து வரும் முக்கிய துறையாக இந்த கிரியேட்டிவ் எக்கானமி துறை தற்போது உள்ளது. டிஜிட்டல் துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள், வருவாயைப் பெருக்குவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றை இந்த கிரியேட்டிவ் எக்கானமி துறைமூலம் உருவாக்கலாம்.

படைப்பாற்றல் சார்ந்த கொள்கைகள், படைப்பாக்கத் தொழில் துறையில் தனியாரின் முதலீட்டை- பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க பயன்படுகின்றன. கூடவே படைப்பாக்கத் தொழில்துறையின் வடிவத்தையே மாற்றக் கூடியதாகவும் படைப்பாற்றல் சார்ந்த கொள்கைகள் உள்ளன. இந்த தொழில் துறையில் பொருளாதார முன்னேற்றம், வருவாயையும் உருவாக்குவதற்கு வழிவகுக்கின்றது.

படைப்பாக்கத் தொழில்துறையின் மூலம் தரமான இலக்கியங்களை வெளிக்கொணரலாம். புதிய வடிவமைப்பு, பேஷன் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். கலை, நாடக நிகழ்ச்சிகளை நடத்தலாம். திரைப்பட விழாக்களை நடத்தலாம். சிற்பக்கலை தொடர்பான கண்காட்சிகளை நடத்தலாம். மரபு சார்ந்த கலைகளை இன்றைய மக்களுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவையாக மாற்றலாம். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டு மக்களின் கலை, பண்பாடு தொடர்பான எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இந்த கலை மற்றும் படைப்பாக்கத் தொழில்துறை நமக்கு உதவுகிறது என்பதே உண்மை.

பிரிட்டிஷ் கவுன்சில், இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு மற்றும் ஆர்ட் எக்ஸ் கம்பெனி ஆகியவை இணைந்து கிரியேடிவ் எக்கானமி குறித்த ஆய்வு மேற்கொண்டன. அதில் கரோனாவின் தாக்கத்தால் படைப்பாக்கத் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

படைப்பாக்கத் தொழில்துறைக்கு நல்ல வாய்ப்புகளும், எதிர்காலமும் இருந்தபோதிலும், இந்தியாவைப் பொருத்த அளவில் அத்துறை சார்ந்த உயர்கல்வியையும், கலை மேலாண்மைக் கல்வியையும் பயில்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இப்போது கிரியேட்டிவ் வருகின்ற 2022-ஆம் ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டு வர உள்ளது. அந்த 2022-ஆம் ஆண்டில் கலாசார கொள்கை மற்றும் கலாசார, பண்பாட்டு மேலாண்மை தொடர்பான முதுகலைப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் தங்களுடைய படிப்பை முடிப்பார்கள். இதன் மூலம் பிரிட்டிஷ் கவுன்சிலின் முன்னாள் மாணவர்கள் திட்டத்தின் கீழ் கலாசார தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள். அதற்காக "இங்கிலாந்து - இந்தியா 2022' என்ற கல்வித் திட்டம் பிரிட்டிஷ் கவுன்சிலால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், கலைத்துறை தலைவர்களாகவும், மேலாளர்களாகவும், கொள்கையை உருவாக்குபவர்களாகவும் திகழ்வதற்கான திறமையை வளர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.

தகுதி :

இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் இந்தியாவில் இந்த கல்வித் திட்டத்தில் 2021 - 2022 கல்வி ஆண்டில் நேரடியாகப் பயில்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நிதியுதவி தேவைப்படுபவர்களாக இருக்க வேண்டும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரக் கூடிய தகுதியுடைய இளநிலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளில் படிக்க கூடிய அளவுக்கு ஆங்கிலத் திறமை இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் அவர்களுக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும்.

பட்டப்படிப்புகள், ஊக்கத் தொகை எண்ணிக்கை, பல்கலைக் கழகங்களின் விவரம் :

1. எம்.ஏ. ஆர்ட்ஸ் அண்ட் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் - 3 எண்ணிக்கை ஊக்கத் தொகை - பிர்மிங்காம் சிட்டி யுனிவர்சிட்டி- 11.07. 2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

2. எம்.ஏ. ஆர்ட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அண்ட் கல்ச்சுரல் பாலிசி, எம்.ஏ. கிரியேட்டிவ் அண்ட் கல்ச்சுரல் பாலிசி, எம்.ஏ. கிரியேட்டிவ் அண்ட் கல்ச்சுரல் என்ட்ரப்ரோனர்ஷிப், எம்.ஏ. கல்ச்சுரல் பாலிசி ரிலேஷன்ஸ் அண்ட் டிப்ளோமசி, எம்.ஏ. டூரிஸம் அண்ட் கல்ச்சுரல் பாலிசி- கோல்ட்ஸ்மித் யுனிவர்சிட்டி ஆப் லண்டன்-4 எண்ணிக்கை ஊக்கத் தொகை - 30.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

3. எம்.ஏ. ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் மேனேஜ்மென்ட் - 1 எண்ணிக்கை ஊக்கத் தொகை - கிங்ஸ் காலேஜ் லண்டன் - 15.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

4. எம்.ஏ. கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் கல்ச்சுரல் பாலிசி - 2 எண்ணிக்கை
ஊக்கத் தொகை - யுனிவர்சிட்டி ஆப் கிளாஸ்கவ் - 30.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com