வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 298

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. 
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 298


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. 
அப்போது feather the nest எனும் சொற்றொடர் ஊழல் செய்து, பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து பணம் சம்பாதிப்பதைக் குறிப்பிடுவது என்று சொல்கிறார். ஆனால் இறகுக்கும், பறவையின் கூட்டுக்கும், ஊழலுக்கும் என்ன சம்பந்தம்?  என்ற கணேஷின் இக்கேள்விக்கு புரொபஸர் என்ன சொல்கிறார் என்று கேட்போமா?
புரொபஸர்: பறவைகள் முட்டையிடத் தயாராகும் பருவத்தில் தமது கூடுகளை அமைப்பதற்கான பணியையும் தொடங்கிவிடும். கவனித்திருக்கிறாயா? 
கணேஷ்: ஓ... தாராளமா! குச்சிகளை, பஞ்சை என பல விசயங்களை சேகரித்துக் கொண்டு வைத்து அவை கூடுகளைக் கட்டும். சில பறவைகளுக்கு 
வண்ணமயமாக கூடுகளை வைத்துக் கொள்ளப் பிடிக்கும். தூக்கணாங்குருவியின் கூடு ஒரு கட்டிடவியல் அற்புதம் போல இருக்கும். 
புரொபஸர்: வெரி குட். இதில் கவனிக்க வேண்டியது பறவைகள் ஒரு மீனையோ விலங்கையோ போல இயற்கையில் கிடைக்கிற மறைவான இடங்
களில் தமது வாரிசுகளைப் பிறப்பித்து விடுவதில்லை. அதற்கு மாறாக பாதுகாப்பான ஓர் இடத்தை, வீட்டை  அதற்காக  அவை அமைத்துக் கொள்கின்றன. சில பூச்சிகளுக்கும் இப்பழக்கம் உண்டு. எறும்பு புற்றைக் கட்டும். ஏன் கரப்பான்பூச்சி கூட தனக்கான கூட்டை நமது வீட்டுக்குள் உருவாக்கும். ஆனால் பறவைகள் தாம் ஸ்பெஷல் - இவை பல இடங்களில் இருந்து எடுத்து சிறுகச் சிறுக எடுத்து கூட்டை உருவாக்கும் விதம் நம் கவனத்தைக் கவர்கிறது. கிட்டத்தட்ட திருடுவதைப் போல இது இருக்கிறது. ஏன் என்றால் மனிதர்களிடம் இருந்து பொருட்களை எடுத்து கூட்டில் கொண்டு வைக்கும் பறவைகள் உண்டு. 
இதனாலே தன் சொந்த வீட்டை குடிசை, மண், செங்கல் என உழைப்பால், காசால் வாங்கி அமைத்த மனிதனுக்கு பறவையின் கூடு ஒரு திருட்டு வீடாகப்பட்டிருக்க வேண்டும். வேறு பறவைகளின் வண்ண இறகுகளைக் கொண்டு தன் கூட்டை அலங்கரிக்கும் பறவையை,   ஊழல் செய்து தன் சொத்தைப் பெருக்குகிற அரசாங்க பணியாளர்களுடன் அடையாளப்படுத்த மனிதன் தொடங்கினான்.  
கணேஷ்: ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது சார். நம் மன்னர் தன் அமைச்சர்களை as daft as a brush என்றாரே ஏன்? பிரஷுக்கும் முட்டாள்தனத்துக்கும் என்ன சம்பந்தம்? 
புரொபஸர்: இது பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே ஆங்கிலத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பயன்பாடு. ஈஹச்ற் என்றால் படுமுட்டாளாக, தத்தியாக இருப்பது.  இரண்டு வரலாற்றுக் கதைகளை இந்த பிரஷ்ஷை ஏன் முட்டாள்தனத்துக்கு ஒப்பீடாக்குகிறார்கள் என்பதற்கு பதிலாகச் சொல்கிறார்கள். ஒன்று பிரஷ்ஷின் மென்மை. Soft in the head என ஆங்கிலத்தில் ஒரு ண்க்ண்ர்ம், மரபுத்தொடர், உண்டு. 
அதாவது பித்துக்குளித்தனமாக, மூளைவளர்ச்சி குறைவென்பது போல, சிந்தனை ஆற்றலே இல்லாது போவது. ஒருவர் நல்லவராகவும் அதே சமயம் சிறுபிள்ளைத்தனமாக, அசட்டுத்தனமாக இருந்தால் he is a nice person but a bit soft in the head என சொல்வார்கள். இது பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் உள்ள ஒரு கொச்சையான மரபுத்தொடர். இப்போது பிரஷ்ஷை எடுத்துக் கொள். 
இதுவும் தொட்டால் அமுங்குகிற மாதிரி மென்மையாக உள்ளது. மென்மையென்றால் மூடத்தனம், மூளைக்குறைபாடு எனும் நினைக்கிற பொதுப்புத்தியில் க்ஹச்ற் ஹள் ஹ க்ஷழ்ன்ள்ட் போன்ற மரபுத்தொடர்கள் தோன்றியதில் ஆச்சரியமில்லை தானே?
ஜூலி: அதோடு பிறந்த குழந்தைக்கு சுய அறிவு வரத் தொடங்கும் போது அதன் தலைஓடு உறுதியாகி விடும். தலைஓடு மென்மையாக, உறுதிப்படாமல் இருக்கும் போது குழந்தை தன் பெற்றோரை முழுமையாக நம்பி இருக்கும். இதிலிருந்தும் தலையின் மென்மையை சிந்தனைக் குறைப்பாட்டுடன் ஒப்பிடும்போக்கு வந்திருக்கலாம்.
புரொபஸர்: இருக்கலாம். இன்னொரு துயரமான வரலாற்றுக் கதையும் இந்த மரபுத் தொடரின் பின்னால் உண்டு.கணேஷ்: அதென்ன சார்?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com