இணைய வெளியினிலே...

"என்னைப் புரிந்து கொள்' என்று எவரிடமும் கெஞ்சாதீர்கள்...புதிராய் இருக்கும் வரை கெளரவிக்கப்படுவீர்கள்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

இன்னும் கொஞ்சம் பேச வேண்டும்...
இன்னும் சற்றே பெரிய குவளைத் தேநீரோடு
இன்னும் அதிர்சிரிப்புகளோடு
இன்னும் சில தோள்தட்டல்களோடு
மிச்சம் உள்ள ஒவ்வொரு புள்ளிக்காகவும்
ஒரு பூவில் அமரும் 
வண்ணத்துப்பூச்சிபோல
மிச்சம் உள்ள ஒவ்வொரு நாளுக்காகவும்.

உமா மோகன்


நானே எழுதிக் கொள்ளும் எனது வாழ்வை...
பிழையிருந்தால், நானே திருத்திக் கொள்கிறேன்.
அவசர சித்தர்களாகி, உபதேசங்களின் வழியே
பேப்பர் திருத்தும் பணியை நீங்கள் பார்க்காமலிருங்கள்.

வழிப்போக்கன்

இருந்து  என்ன பண்ணப் போறோம்?
செத்துப் போய்டலாம். 
செத்து என்ன பண்ணப் போறோம்?
இருந்திட்டுப் போய்டலாம்.

பொன். குமார்

இருவரிடையே நீண்ட நேரம் உரையாடல் நடக்கிறதென்றால்...
அதில் ஒருவர் முட்டாளாக இருப்பார்.

பத்மகுமார் தண்டபாணி

சுட்டுரையிலிருந்து...

நாடு ஒருவனை நல்லவன்னு சொன்னா...
அவன் அடிமையாக 
வேலை பார்த்திருக்கான்னு அர்த்தம்.
கெட்டவன்னு சொன்னா...
அவன் எதிர்த்துக் கேள்வி 
கேட்டிருக்கான்னு அர்த்தம்

சேட்டைக்காரன்

"என்னைப் புரிந்து கொள்' என்று எவரிடமும் கெஞ்சாதீர்கள்...
புதிராய் இருக்கும் வரை கெளரவிக்கப்படுவீர்கள்.

இலக்கியா

சாப்பிடறவன் வாயைக் கூட பார்த்துக்கிட்டு இருந்திடலாம்... 
சம்பாதிக்கிறவன் கையை மட்டும் பார்த்துகிட்டு இருக்கக் கூடாது !

ரயில் கணேசன்

காலம் சட்டையைக் கிழித்து நடுரோட்டில் திரிய விட்டாலும்...
அடுத்தவரை நேசிப்பதை நிறுத்திவிடாதீர்கள்

சால்ட்&பெப்பர் தளபதி

வலைதளத்திலிருந்து...


இந்த உலகத்துல இருக்குற எல்லா விஷயத்தையும் நம்ம ரெண்டு வகையா பண்ணலாம். ஒன்னு ரிசல்ட் ஓரியண்டடு வே.  
அதாவது, முடிவை மட்டுமே மனசுல வச்சிட்டு ஒரு செயலைச் செய்யுறது. தலைவலி போகணும், ட்ரெஸ் வாங்கணும் அவ்ளோ தான். 
இன்னொன்னு, எக்ஸ்பீரியன்ஸ் ஓரியண்டடு வே. அதாவது, முடிவும் முக்கியம் தான். இருந்தாலும் ஒரு செயல் செய்றப்போ அதுல கெடைக்குற சந்தோசம், அனுபவத்துக்காக அந்தச் செயலைச் செய்யுறது. 
ஆனா இங்க பிரச்னை என்னன்னா, முடிவை நோக்கி மட்டுமே ஒரு விஷயத்தை செய்றப்போ, அந்த முடிவுக்கு மத்தவங்ககிட்ட இருந்து பாராட்டோ... இல்ல... அங்கீகாரமோ ரொம்ப சுலபமா கெடச்சிருது. அது மட்டுமில்லாம, ரிசல்ட்  ஓரியண்டடா    இருக்குறவங்க, ரிசல்ட் கொடுக்கக் கூடிய அந்தச் சந்தோஷப் போதைக்காக, எவ்ளோ வேகமா முடியுமோ, அவ்ளோ வேகமா அந்தச் செயலை செஞ்சு முடிச்சிருவாங்க. கம்மியான நேரத்துல அவங்களுக்கான சந்தோஷமும் கெடச்சிடுச்சு. மத்தவங்ககிட்ட இதைப் பத்தி சொல்றதுக்கு நேரம்-ங்கிற ஒரு அளவீடும் கெடச்சிடுச்சு. அஞ்சு நிமிஷத்துல நான் குளிச்சிருவேன். அரை மணி நேரத்துல நான் சமைச்சு முடிச்சிருவேன். ஒரு நாள்ல ஒரு புக்க நான் படிச்சு முடிச்சிருவேன். இப்டி. 
ஆனா எக்ஸ்பீரியன்ஸ் ஓரியண்டடு பீப்பிள்   அப்டி இல்ல. அவங்களுக்கு நேரம் ஒரு பொருட்டு கெடையாது. ரசிச்சு பண்றது, அனுபவிச்சு பண்றது, அதுலயே மூழ்கிப் போறதுன்னு அவங்களோட சந்தோஷத்த மத்தவங்ககிட்ட சொல்றதுக்கு நேரம்-ங்கிற அளவீடு இங்க இல்லாம போய்டுச்சு. அழகான வார்த்தையால வேணா விவரிக்கலாம். ஆனா அது எத்தன பேருக்கு, எந்தெந்த சூழ்நிலைல கைகூடும்னு யாராலயும் உறுதியாச் சொல்ல முடியாது.

https://gramathuponnu.wordpress.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com