உடலின் வெப்பநிலை... கண்காணிக்கும் டிரோன்!

கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்றாலும், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை  கொண்ட நாடுகளில் அதைச்  செயல்படுத்துவது,  நீண்ட காலத் திட்டமாக உள்ளது.
உடலின் வெப்பநிலை... கண்காணிக்கும் டிரோன்!

கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்றாலும், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை  கொண்ட நாடுகளில் அதைச்  செயல்படுத்துவது,  நீண்ட காலத் திட்டமாக உள்ளது.

அவ்வப்போது எழும் கரோனா அலையை அடக்க பொது முடக்கம் ஒன்றுதான் தற்போதைக்கு தீர்வாக உள்ளது.

ஆனால், பொது முடக்கத்தில் தளர்வு வழங்கப்பட்டவுடன் மக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியே வருவதால் வெறிச்சோடிய சாலைகள் எல்லாம் போக்குவரத்து நெரிசலால் திணறுகின்ற சாலைகளாக மாறிவிடுகின்றன.

இது அடுத்த கரோனா அலைக்கு வழியைத் திறந்துவிட்டதுபோல் 
அமைந்துவிடுகிறது.

இப்படி மக்கள் கூட்டமாக திரளும் இடங்களில் கரோனா பரிசோதனை செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது.


இந்தச் சவாலை மலேசிய போலீஸார் சாதனையாக மாற்றியுள்ளனர். மக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனையை  டிரோன்கள் மூலம் செய்கின்றனர்.

தரையில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் பறக்கும் டிரோன்களில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவி இணைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ஒருவருக்கு அதிக வெப்பநிலை இருப்பதை இந்த டிரோன்கள் கண்டறிந்தவுடன் அதில் இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலமாக  அந்த குறிப்பிட்ட நபர் மீது சிவப்பு ஒளியை வீசி டிரோன் அடையாளம் காட்டி
விடுகிறது.  

உடனடியாக அந்த நபரை போலீஸார் பிடித்து கரோனா பரிசோதனைக்கு உள்படுத்த இந்த டிரோன்கள் உதவுகின்றன.

தற்போது கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் 
சூழலில்,  இதுபோன்ற டிரோன்கள் இந்தியாவின் தற்போதைய உடனடித் தேவையாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com