மேற்படிப்பு... தடுப்பூசி போட்டாச்சா?

இந்த நாளில் தங்கள் எதிர்காலம் மேம்பட வேண்டுமென்று பல இளைஞர்கள் வேற்று மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் சென்று உயர்கல்வி கற்க முனைகிறார்கள்.
மேற்படிப்பு... தடுப்பூசி போட்டாச்சா?

இந்த நாளில் தங்கள் எதிர்காலம் மேம்பட வேண்டுமென்று பல இளைஞர்கள் வேற்று மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் சென்று உயர்கல்வி கற்க முனைகிறார்கள். இப்போது பரவி வரும் கரோனா நோய்த் தொற்று இந்த வாய்ப்புக்கு கொஞ்சம் முட்டுக்கட்டையாக உள்ளது. அதாவது தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாமல் போக இயலாது. அதே சமயம் தடுப்பூசிகள் உரிய காலத்தில் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது.

இப்போது நிலவி வரும் சில விதிமுறைகள்

ஒரு சில மாநிலங்கள் வெளி மாநிலத்திலிருந்து வருகிற மாணவர்களுக்கு தனியாக தடுப்பூசி போடச் செய்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா, தெலங்கானா போன்றவை இவற்றில் அடங்கும்.

அயல்நாடு சென்று மேல் படிப்பைத் தொடர விரும்புகிறவர்கள், முழுமையான (அதாவது இரண்டு தடவை) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற தேசங்களில் இவை அவசியம்.

சிற்சில தருணங்களில் இரண்டாம் ஊசி போட்டுக் கொள்ள தாமதமாகிறது. ""என் பெண் பென்சில்வேனியாவிற்கு செல்ல வேண்டும். முதல் ஊசி மே 25- இல் போட்டாகிவிட்டது. இரண்டாம் டோஸ் போட மூன்று மாதம் காத்திருக்க வேண்டுமாம். ஆனால் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அங்கிருக்க வேண்டும். முன்னதாவே பயண டிக்கெட்டைப் பதிவு செய்து, தங்குமிடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்தகைய நிலைமையே இருக்கிறது'' என்று சொல்கிறார் இந்தூரை சேர்ந்த ஒரு தகப்பனார்.

அதே சமயம் அமெரிக்காவில் சில சர்வகலாசாலைகளில், அந்த கல்லூரி வளாகத்திலேயே ஊசி செலுத்தும் சேவை செய்யப்படுகிறது. ""கலிபோர்னியா யுனிவர்சிட்டி டபிள்யூஎச்ஓ ஒப்புதல் கூட தடுப்பூசியை கோருகிறது. அது கிடைக்க தாமதமானால் சிரமம்தான்'' என்கிறார் ஒரு தாயார். (அல்லது அமெரிக்க மருந்து மற்றும் உணவு அமைப்பின் (யுஎஸ்எஃப்ஐஏ) அங்கீகாரம்).

கனடா இது குறித்து விவரமான அறிக்கை விடவில்லை. ஆனாலும் பெற்றோர் தங்கள் பிள்ளை அல்லது பெண்ணுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த விரும்புகிறார்கள்.

ஏனெனில் எதாவது ஒரு புது விதி திடீரென்று வந்து கட்டாயப்படுத்தலாம். இங்கு சிற்சில நேரங்களில் மாணவிகளுக்கு முன்னுரிமை தந்து ஊசி செலுத்தப்படுகின்றன. உதாரணம்: பூனா மற்றும் புறநகர் மும்பை. 

ஊசி போட்டுக் கொள்ள என்னென்ன தேவை?

அ. ஆதார்அல்லது வேறெதாவது அடையாள அட்டை
ஆ.பல்கலைக்கழகத்திலிருந்து அனுமதிக் கடிதம்
இ. ஐ -20 படிவம்

ஆனால் எங்கே செல்ல வேண்டுமானாலும் ஆர்டி, பிசிஆர் சோதனை நெகடிவ் அவசியம். (கொரோனா தொற்று பரவாது என்பதற்கான சோதனை)

கடைசியாக

இங்கு குறிப்பிட்டுள்ள விதிகள் எந்த மாநிலத்திலேயோ அல்லது வெளிநாட்டிலேயோ கூட மேலும் தளர்த்தப்படலாம் அல்லது இறுக்கப்படவும் வாய்ப்புண்டு.

ஆகவே மாணவர்கள் நல்லபடியாக விதிகளை முறையாகத் தெரிந்துகொண்டு, மேலே படிப்பைத் தொடர முனைவதுதான் நல்லது.

கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்புதான். உண்மை. ஆனால் இடத்துக்கு இடம் இந்த காலகட்டத்தில் விதிமுறைகள் மாறுபடுகின்றன என்பது யதார்த்தம்.

எனவே, சூழ்நிலைகளைத் திறமையாக எதிர்கொண்டு, கல்வி கற்று மாணவ, மாணவிகள் வெற்றி மாலை சூடுக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com