இளைஞர்களுக்கு தடுப்பூசி!: சில கேள்விகள்... சில பதில்கள்!

கோவிட்-19 தொற்று ஏற்படுத்திய விளைவுகள் மற்றும் பொது முடக்கம் காரணமாக இளைஞர்களின் வாழ்க்கை முறை பல வழிகளில் மாறியுள்ளது.
இளைஞர்களுக்கு தடுப்பூசி!: சில கேள்விகள்... சில பதில்கள்!

கோவிட்-19 தொற்று ஏற்படுத்திய விளைவுகள் மற்றும் பொது முடக்கம் காரணமாக இளைஞர்களின் வாழ்க்கை முறை பல வழிகளில் மாறியுள்ளது. உணவு விடுதிகள்கள் பகுதியாக மூடப்பட்டுள்ளது. பார்சல் மட்டுமே வழங்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் உணவு விடுதிகளில் உணவு சாப்பிட முடியாத நிலை உள்ளது. கோவிட் - 19 காரணமாக ஆன்லைன் மூலமாகவே பலவற்றை கற்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஆன்லைன் மூலம் கற்பதால் அவர்களுக்கு பிரச்னையாக உள்ளது. பலவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை.

கோவிட் - 19 காரணமாக சமுதாயத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடி பேசமுடியாத நிலை உள்ளது. சமுதாயத்தில் உள்ளவர்கள் அனைவருமே தங்களை மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். துரதிஷ்டவசமாக தற்கொலை எண்ணங்கள், தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

கரோனா தொற்றினால் உலக அளவில் ஏற்பட்டுள்ள இத்தகைய சோர்வு மனநிலையிலிருந்து இளைஞர்கள் மாற, நம்பிக்கையுடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகும்.

இளைஞர்கள் கோவிட் - 19 குறித்து கவலைப்பட வேண்டுமா ?

கோவிட்-19 வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்பது தவறான தகவலாகும். இளைஞர்களையும், குழந்தைகளையும் கடுமையாக பாதிக்கும். உடலின் பல்வேறு உறுப்புகளும் கோவிட்-19 காரணமாக கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.

கோவிட்-19 தொற்று பாதிப்புக்குள்ளாகும் இளைஞர்கள் தங்களுடைய எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியாமல் தனிமைபடுத்தப்படக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கோவிட் - 19 தடுப்பூசிகள் இளைஞர்களிடையே எவ்வாறு செயல்படுகிறது?

கோவிட் -19 தடுப்பூசி மிகவும் சிறப்பாகக் செயல்படுகிறது. பாதுகாப்பானதும் கூட. தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் சிறப்பாக செயல்படுகிறது. தற்போது நடந்த ஆய்வில் பைசர் தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு 100 சதவீதம் சிறப்பாக செயல்படுகிறது.

கோவிட்-19 தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதேனும் வருகிறதா?

கோவிட் - 19 தடுப்பூசியால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் புண் ஏற்படலாம். ஊசி போட்ட பிறகு ஓரிரு நாட்களுக்கு சோர்வு, தலைவலி இருக்கும். கோவிட்-19 தடுப்பூசிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வகையில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே கோவிட்-19 ஐ தடுப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

இளைஞர்கள் தங்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி தேவையில்லையென்று
நினைத்தால் ?

கோவிட் - 19 காரணமாக எந்த எந்தவகையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து இளைஞர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் விளக்கிக் கூற வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள குடும்ப உறுப்பினர்கள், குடும்பத்தில் தாத்தா, பாட்டி போன்ற மூத்த தலைமுறையினர், கோவிட்-19 தடுப்பூசி காரணமாக நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசியால் இளைஞர்களும், பெற்றோர்களும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பது குறித்து அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

வைரஸ்களில் மாற்றம் ஏதும் இருக்குமா?

பல்வேறு உருமாறிய வைரஸ்கள் பல்வேறு கால கட்டங்களில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. சில வைரஸ் தோன்றிய குறிப்பிட்ட சில காலத்திற்குள் அழிந்து விடும். சில உருமாறிய வைரஸ்கள் எளிதாக பரவக் கூடிய நிலையும் உள்ளது.

அமெரிக்காவில் புதிதாக உருவாகியுள்ள பல உருமாறிய வைரஸ்கள் எளிதாகவும், மிக வேகமாகவும் பரவி வருகின்றன. அதை தடுக்க முக்கிய வழி தடுப்பூசி போடுவது மட்டுமே ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com