இணைய வெளியினிலே...

வேண்டும் தனிப்பாதை...காலடிகள் ஏதுமற்று.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


நேராக நடக்க விரும்பி
தொடங்கிடும் பயணத்தை... 
வளைந்து, நெளிந்து, ஏறி, இறங்க
பணித்துவிடுகிறது ஒரு பாதை...
புதிய பாதை.

கவி வளநாடன்


இருளைப்  பின்னால்
தனக்கு வைத்துக்கொண்டு
ஒளியைத் தரும் சுடர். 
ஆதலால்,சுடர்வோம்.

இயற்கை

வேண்டும் தனிப்பாதை...
காலடிகள் ஏதுமற்று.

நா. விச்வநாதன்


ஒரே பறவை.
ஒரே மழை.
நீங்கள்
மழையில் நனைந்த
பறவை என்கிறீர்கள்.
நான் மழை சுமக்கும்
பறவை என்கிறேன்.

நேசமிகு ராஜகுமாரன்

சுட்டுரையிலிருந்து...


மனப்பாடம் செய்ததை 
ஒப்பிக்கும் போது
மறந்து போன வரிக்கு 
முந்தைய வரியே  உதவுகிறது...
மீண்டும் ஒப்புவிக்க. 

செங்காந்தள்

கோடிக்கணக்கான கற்பனைகள்
லட்சக்கணக்கான முயற்சிகள்
ஆயிரக்கணக்கான தோல்விகள்
இருந்தாலும்
ஒரு சில நிஜங்களுடன் 
நாம் வாழ்கின்ற நிகழ்வுக்குப் பெயர்தான்
வாழ்க்கை.

பனித்துளி


"பசி' என்று
உள்ளே சென்றேன்...
பயத்தில் வெளியே
வந்து விட்டேன்,
எழுதியிருந்த
விலைப்பட்டியலை
படித்ததும். 

தனிமை

நீங்களாக கற்றுக்  கொள்ள  விரும்பாத போது, 
யாரும் உங்களுக்கு   கற்றுத் தர முடியாது.
காலத்தை தவிர...

பாரதிமணி

வலைதளத்திலிருந்து...

நாங்கள், 1940-1980 - க்கு இடையில் பிறந்தவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 

எங்கள் வாழ்க்கை ஒரு நேரடி ஆதாரம்...

சைக்கிள்களில் விளையாடும்போதும், சவாரி செய்யும் போதும் நாங்கள் ஹெல்மெட் அணிந்ததில்லை.
பள்ளி முடிந்ததும், அந்தி வரை விளையாடினோம். நாங்கள் தொலைக்காட்சி பார்த்ததில்லை.
நாங்கள் உண்மையான நண்பர்களுடன் விளையாடினோம், இணைய நண்பர்களுடன் அல்ல.
எப்போதாவது தாகமாக உணர்ந்தால், நாங்கள் குழாய் நீரைக் குடித்தோம்; பாட்டில் தண்ணீர் அல்ல.
ஒரே மாதிரியான ஜூஸை நான்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாலும் நாங்கள் ஒருபோதும் நோய்வாய்ப்படவில்லை.
நாங்கள் தினமும் நிறைய அரிசி சாப்பாடு சாப்பிட்டாலும் எடை கூடவில்லை.
நாங்கள் வெறுங்காலுடன் சுற்றினாலும் எங்கள் கால்களுக்கு எதுவும் ஆகவில்லை.
எங்கள் தாயும் தந்தையும் எங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க.. எந்த  ஓர்  ஊட்டச்சத்தையும் பயன்படுத்தவில்லை.
நாங்கள் எங்கள் விளையாட்டுக்கேற்ற சொந்த பொம்மைகளை உருவாக்கி 
அதனுடன் விளையாடுவோம்.
எங்கள் பெற்றோர் எங்களுக்குத் தந்தது, பணக்காரத்தனத்தை அல்ல. 
அவர்கள் எங்களுக்கு அன்பைத் தந்தார்கள், பொருட்களை அல்ல.
எங்களிடம் செல்போன்கள், டிவிடிக்கள், ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம்ஸ், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் அரட்டை இல்லை.  ஆனால் எங்களுக்கு உண்மையான நண்பர்கள் இருந்தனர்.
நாங்கள் அழைப்பு இல்லாமல் எங்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் உணவு உண்டு மகிழ்ந்தோம்.
உங்கள் உலகத்தைப் போலல்லாமல், எங்களுடைய உறவினர்கள் இருந்தனர், அவர்கள் குடும்பத்துடன் நெருக்கமாக வாழ்ந்தனர் மற்றும் உறவுகள் ஒன்றாக அனுபவித்தனர். 

ஏனென்றால், நாங்கள், பெரும்பாலும் எங்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்ட கடைசி தலைமுறை. நீங்கள் சிறந்த வாழ்க்கை வாழ்ந்த எங்களிடம் கற்று அனுபவியுங்கள். எங்கள் வாழ்க்கை ஒரு பொக்கிஷம்.எங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளுங்கள். 

https://eluthu.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com