வேலை... வேலை... வேலை...

ஃபிட்டர், வெல்டர்,  எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட்,  வயர்மேன், கார்பெண்டர்,  பெயிண்டர்,  ரெஃப்ஜிரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங் ஆகிய பிரிவுகளில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வேலை... வேலை... வேலை...


இந்திய ரயில்வேயில் வேலை

மொத்த காலியிடங்கள்: 3366

பணி: ஃபிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், வயர்மேன், கார்பெண்டர், பெயிண்டர், ரெஃப்ஜிரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங் ஆகிய பிரிவுகளில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள்: ஹவுரா, சீல்தா, அசன்சால், மால்தா, கஞ்ச்ரபாரா, லிலுவா, ஜமால்பூர்.

வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்காக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrcer.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தவிர, மற்ற பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.11.2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 435
பணி: பருவகால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள்: 72
கல்வித் தகுதி: இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணி: பருவகால உதவுபவர்
காலியிடங்கள்:67
கல்வித் தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: பருவகால காவலர்
காலியிடங்கள்: 296
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
லயது வரம்பு: மூன்றுவகையான பணிகளுக்கும் குறைந்தது 32 வயதில் இருந்து 34 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சி(ஏ) பிரிவினர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: திருவாரூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட தகுதியுடையவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றுகளின் நகல்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மன்னார்குடி சாலை, விளமல், திருவாரூர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 05.11.2021.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை


பணி: புராஜெக்ட் அசிஸ்டன்ட்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: இயற்பியல்துறை முதுநிலைப் பட்டம் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபீஸ், உயர்மட்ட அளவிலான கம்ப்யூட்டர் புரோகிராம் லாங்வேஜ் தொடர்பான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.14,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்போடு இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை senthilvelan.m@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

முகவரி:

Dr. M. SENTHILVELAN
PROFESSOR AND HEAD
DEPARTMENT OF NONLINEAR DYNAMICS
BHARATHIDASAN UNIVERSITY
TIRUCHIRAPPALLI – 620 024

மேலும் விவரங்களுக்கு: https://www.bdu.ac.in/docs/employment/pa-physics.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.11.2021

தமிழக அரசில் வேலை


பணியிடம்: நேஷனல் கேடட் கார்ப்ஸ் டிபார்ட்மென்ட் (என்சிசி டிபார்ட்மென்ட்)

பணி: டிரைவர்

காலியிடங்கள்: 2

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு, கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்,

முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.

சம்பளம்: ரூ.19,500 - ரூ.62,000

பணி: ஆபீஸ் அசிஸ்டன்ட்

காலியிடம்: 1

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்,

முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
சம்பளம்: ரூ.15,700 - ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை: என்சிசி டிபார்ட்மென்ட் வெளியிட்டுள்ள அறிவிப்போடு இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

NCC Group Headquarters, No.4, 1st Floor, Subramanian Building, Promenade Road, Cantonment, Tiruchirappalli-620 001, Tele: 0431-2461363

மேலும் விவரங்களுக்கு:

https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_driver_0.pdf மற்றும் https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_office_assistant_0.pdf ஆகிய லிங்குகளை கிளிக் செய்து பாருங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 05.11.2021


தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மருத்துவ அலுவலர் - 02

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.75,000

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: செவிலியர் - 02

சம்பளம்: மாதம் ரூ.14,000

தகுதி: நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 02

சம்பளம்: மாதம் ரூ.6,000 வழங்கப்படும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொண்டோô அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் கோவை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தோ பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து நகல் சான்றிதழ்களிலும் அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம்- 641046

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.11.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com