வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 317

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 317

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னரைப் பார்க்க மனிதவளத்துறை அமைச்சர்   தன் சகாக்களுடன் வந்திருக்கிறார். அவரும் அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு. அது குறித்து நாடெங்கும் விவாதங்கள் நடக்க, கண்டனங்கள் கிளம்ப, தன்னைப் பாதுகாக்குமாறு கோரி அவர் வீரபரகேசரியிடம் வந்திருக்கிறார். மன்னர் வீரபரகேசரி மனிதவளத்துறை அமைச்சரின்    மகனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறார். 

அப்போது அவர் அன்று நடந்த சம்பவங்களை விளக்கும் போது “we arrived at Delhi in 10 am.'' என்று, அதில் preposition பயன்பாடு தவறானது என ஒரு விவாதம் தொடங்குகிறது. Arrived in க்கும், arrived at க்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு என்று ஜூலி சொல்லுகிறது. அது என்னவென்று பார்ப்போமா? 

ஜூலி: At மற்றும் in ஆகிய முன்னிடைச் சொற்கள் எனப்படும் prepositionகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் இது தான்: நீ ஒரு பெரிய இடத்தில் இருப்பதை சொல்ல in ஐ பயன்படுத்தணும், சிறிய இடமென்றால் at. இப்போ நீ எங்கே இருக்கே? 

கணேஷ்: I am in the palace.  
ஜூலி: சரி, ஆனால் இந்த அரண்மனை சென்னையில் இருக்கிறது என்றால்? 
கணேஷ்: அப்பவும் அதே தான். 
ஜூலி: இல்ல தப்பு. அப்போ நீ  I am at a palace in Chennai என்று சொல்லணும். புரியுதா? 
கணேஷ்: ஓ... புரியுது. ஒரு சந்தேகம். நான் என் கேர்ள்பிரண்டிடம் போன மாதம் போனில் "எங்கே இருக்கே நீ' என்று கேட்ட போது அவள் I am at the theatre என்று சொன்னாள். அவள் யாருடன் போயிருக்கிறாள் என்கிற சந்தேகம் இருந்தாலும், நான் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. அதுக்குப் பதிலாக என் அறிவுத்தாகம் அப்போது வேறொரு சந்தேகத்தை கேட்டு தணிக்க விரும்பியது. 
ஜூலி: சரி... சுத்தி சுத்தி ஜிலேபி பிழியாம மேட்டருக்கு வா.
கணேஷ்: at the theatre சரியா in the theatre சரியா?  
ஜூலி: ம்ம்ம்... at the theatre தான் சரி. ஆனா இங்கே இன்னொரு விசயத்தைக் கவனிக்கணும். 
இரு தரப்புக்கும் தெரிந்த ஒரு பொதுவான இடத்தைக் குறிக்கும் ஒரு சொல்லுக்கு முன்பும் at- ஐ பயன்படுத்தலாம். நீ கல்லூரியில் இருக்கிறாய். அப்போது உன் பிரண்டு கூப்பிட்டு எங்கடா இருக்கேன்னு கேட்பான். அதுக்கு நீ என்ன சொல்லுவே? 
கணேஷ்: காலேஜில் இருக்கேன்டான்னு சொல்லுவேன்.  
ஜூலி: எந்த காலேஜிலேன்னு அவனுக்கு எப்படித் தெரியும்? 
கணேஷ்: ஏன் தெரியாது? ரெண்டு பேரும் ஒரே காலேஜில் தானே குப்பை கொட்டுறோம்.  
ஜூலி: கரெக்ட். அதையே தான் இங்கிலீஷ்ல எப்படிச் சொல்லுவே?
கணேஷ்: I am in the college. 
ஜூலி: இல்ல, I am at the college என்று சொல்லணும். அதுக்காகத் தான் மேலே வரும் விதிமுறையைச் சொன்னேன். உனக்கும் நண்பனுக்கும் பொதுவான கல்லூரி என்பதால் அது the college. அதனாலே preposition உம் ஹற் தான். இதுவே உன் வீட்டில் நீ 
இருக்கும் போது "எங்கே இருக்கே' என்று உன் நண்பன் கேட்டால் என்ன சொல்லுவாய்?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com