நான்கு கணினியில் வாட்ஸ்ஆப்!

வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றம் நகரம், கிராமப் பகுதி என அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவி உள்ளது. அரசு சேவைகளையே வாட்ஸ்ஆப்களில் பெறும் வகையில் சென்றுவிட்டது.
நான்கு கணினியில் வாட்ஸ்ஆப்!


வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றம் நகரம், கிராமப் பகுதி என அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவி உள்ளது. அரசு சேவைகளையே வாட்ஸ்ஆப்களில் பெறும் வகையில் சென்றுவிட்டது. அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ்ஆப் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. 

தற்போது கைப்பேசியில் இணையவசதி இல்லாமலே வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் மல்டி டிவைஸ் பீட்டா என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கணினி மூலம் வாட்ஸ்ஆப் கணக்கை இணைத்து செயல்படுத்த வாட்ஸ்ஆப் வெப் உதவுகிறது. இதில் மல்டி டிவைஸ் பீட்டா சேவையின் மூலம் ஒரு முறை கியூஆர் கோட் இணைப்புடன் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை கணினியில் இணைத்துவிட்டால், பின்னர் உங்கள் கைப்பேசியில் இணைய வசதி இல்லாவிட்டாலும், கணினியில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம். இதுபோன்று அதிபட்சமாக நான்கு கணினிகளுடன் ஒருவர் தனது வாட்ஸ்ஆப் கணக்கை இணைக்கலாம்.

கைப்பேசியில் சார்ஜ் இல்லாமல் சுவிட்ஆப் ஆகிவிட்டாலோ, இணையவசதி இல்லாவிட்டாலோ இனி உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை கணினியில் பயன்படுத்தலாம். எனினும், 14 நாள்களாக தொடர்ந்து இயங்காமல் இருந்தால் கணினியில் இணைக்கப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்கு தானாக அழிந்துவிடும்.

இந்த சேவையை உங்கள் கைப்பேசியில் தொடங்க செய்ய வேண்டியவை:

வாட்ஸ்ஆப்பில் வலதுமேல்புறம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, லிங்கிடு டிவைசஸ்  மல்டி டிவைஸ் பீட்டா  கன்டினியூ ஆகியவற்றை கிளிக் செய்து அனுமதி அளித்துவிட்டு பின்னர் கணினியில் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை ஒரு முறை இணைத்து கைப்பேசி இல்லாமலேயே வாட்ஸ்ஆப்பை செயல்படுத்தலாம். முதல் முறை இணைக்க கைப்பேசியில் இணைய சேவை அவசியம்.

உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கில் மல்டி டிவைஸ் பீட்டா சேவை வரவில்லை என்றால் உங்கள் வாட்ஸ்ஆப்பை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். இதுபோன்று பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானவையாக இருக்கும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. எனினும், உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை பிறரின் கணினியில் இணைத்தால் அதை டெலிட் செய்துவிட்டு வெளியேறுவது பாதுகாப்பானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com