வியாழனை விட பெரிய புறக்கோள்!

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் எக்úஸாபிளானட் (புறக்கோள்) என அழைக்கப்படுகின்றன. முதல் புறக்கோள் 1990-களில் கண்டறியப்பட்டது.
வியாழனை விட பெரிய புறக்கோள்!

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் எக்úஸாபிளானட் (புறக்கோள்) என அழைக்கப்படுகின்றன. முதல் புறக்கோள் 1990-களில் கண்டறியப்பட்டது. அதுமுதல் பல்வேறு கண்டுபிடிப்பு வழிமுறைகள் வாயிலாக ஆயிரக்கணக்கான புறக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் விண்வெளி தொலைநோக்கிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

அந்த வகையில், ஆமதாபாத்தை தளமாகக் கொண்ட இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (பிஆர்எல்) சேர்ந்த புறக்கோள்கள் ஆராய்ச்சிக் குழுவினர் புதிய புறக்கோள் ஒன்றை அண்மையில் கண்டறிந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

1.2 மீட்டர் தொலைநோக்கியில் ஆப்டிகல் ஃபைபர் ஸ்பெக்டோகிராப் (பரஸ்) என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி இந்தப் புறக்கோளைக் கண்டறிந்துள்ளனர்.

சூரியனை விட 1.5 மடங்கு அதிக நிறை கொண்ட நட்சத்திரத்தை நெருக்கமாகச் சுற்றி வருகிறது. பூமியிலிருந்து 725 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

புறக்கோளின் நிறையை "பரஸ்' உபகரணத்தின் உதவியுடன் அளவீடு செய்ததில், அந்தப் புறக்கோள் வியாழன் கிரகத்தின் நிறையில் 70 சதவீதமும், வியாழனைவிட 1.4 மடங்கு பெரியதாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தப் புறக்கோளைக் கண்டறிந்த குழுவில் பேராசிரியர் அபிஜித் சக்கரவர்த்தி தலைமையிலான மாணவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 3.2 நாள்களில் சுற்றி வருகிறது. மேலும் மிக நெருக்கமான இடைவெளியிலும் சுற்றி வருகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாக, அதன் தரைப்பரப்பு அதிக வெப்பத்துடன் இருக்கிறது. இத்தகைய குறைந்த தொலைவில் நட்சத்திரத்தை சுற்றிவரும் புறக்கோள்கள் "ஹாட்-ஜூபிடர்கள்' என அழைக்கப்படுகின்றன.

விண்வெளித் துறையின் தன்னாட்சிப் பிரிவான பிஆர்எல் விஞ்ஞானிகள் "பரஸ்' உபகரணத்தைப் பயன்படுத்திகண்டறிந்துள்ள இரண்டாவது புறக்கோள் இதுவாகும். முதல் புறக்கோள் 2018-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com