வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 319

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 319


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரின் மகன்  போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. மன்னர் வீரபரகேசரி அமைச்சரின் மகனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறார். 
அமைச்சரின் மகன்: அப்படித்தான் மன்னா... நானும் நமது கட்சித் தொண்டர்களும் as we were proceeding as a procession, the opposition pelted stones at us. 

கணேஷ் (ஜூலியிடம்): Procession என்றால் ஊர்வலம் தானே? 
ஜூலி: ஆமா 
கணேஷ்: ஏன் அரசியல்வாதிகள் எப்போதுமே ஊர்வலமாப் போறாங்க? 
ஜூலி: பொதுவாக விழாக்களின் போது ஊர்வலம் நடக்கும். அப்படித் தானே?
கணேஷ்: ஆமா...
ஜூலி: விழா என்றால் மக்கள் கவனிப்பார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவம் ஏற்படும். அரசியல்வாதிகள் தமது சின்னச் சின்ன பயணங்களையும் ஊர்வலமாக மாற்ற முயல்கிறார்கள். It is an attention-grabbing trick from our politicians. 

கணேஷ்: அதாவது மக்களின் கவனத்தைக் கவர்ந்திழுப்பதற்கான ஒரு மலிவான தந்திரம். சரியா? 
ஜூலி: ஆமா, ஆனால் அது மட்டுமல்ல. பாரம்பரியமாக public space என்பது பொதுமக்களுக்கானதாகவும் அரசுக்கானதாகவும் இருக்கிறது. அங்கே பொதுமக்கள் அதிகமாகப் புழங்குகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கே இருக்கலாமா கூடாதா, எப்படி இருக்கலாம், எப்படி இருக்கக் கூடாது என்பதையே அரசே தீர்மானிக்கிறது. 
கணேஷ்: பப்ளிக் ஸ்பேஸ் என்றால்? 
ஜூலி: It is a place that is generally open and accessible to people. பொதுமக்கள் புழங்குவதற்கு அதிகாரம் கொண்ட திறந்த வெளி. 
கணேஷ்: அதாவது சாலை, விளையாட்டுத் திடல்கள், பூங்கா, கடற்கரை போன்ற இடங்கள்.
ஜூலி: ஆமா. ஆனா அது மட்டுமில்ல... ஒரு mall கூட public space தான். 
கணேஷ்: ஆனால் மால் தனியாருக்கு உரியது அல்லவா? 
ஜுலி: ஆமா, தனியாருக்கு உரிமை உள்ள பகுதி என்றாலும் அது பொதுமக்கள் புழங்கும் நோக்கிலே கட்டப்பட்டது. யாரும் யாரையும் அங்கு தடுக்க முடியாது. இதுவே அரசு நூலகங்களுக்கு, அரசாங்க அலுவலகங்களுக்கும் பொருந்தும். பேருந்து, ரயில் நிலையங்களுக்கும் தான். அவை அரசுக்குச் சொந்தமானவை. ஆனால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உரியவை. ஒரு ரயில் நிலையத்தில் நுழைய பயணச்சீட்டோ நுழைவுச்சீட்டோ வேண்டும், ஆனால் யார் வேண்டுமெனிலும் அவ்வாறு நுழையலாம். ஆக, இவற்றை partial ஆ- public spaces என்று சொல்லலாம்.  
வீரபரகேசி (கணேஷை நோக்கி): ஆமா நீ shared space பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? எங்கள் ஆட்சியில் அதை எங்கள் நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் போகிறோம். 
கணேஷ்: Shared space?
ஜூலி: ஹா... ஹா... அது ஒரு வினோதமான சமூக வெளி கருத்தாக்கம். இப்போது நாம் பயன்படுத்தும் சாலைகளில் நடைபாதைகள் உண்டல்லவா? 
கணேஷ்: ஆமா, அங்கே கடைகளை அமைத்திருப்பார்கள். அங்கே சில பேர் பைக்கை கூட ஓட்டுவார்கள். இந்த இரு தரப்பினரையும் சமாளித்து நம் பாதசாரிகள் பயந்தபடி நடந்து போவார்கள். 
ஜூலி: ஆமாம், இப்போது இந்த kerbs ஐ அகற்றினால் என்னவாகும் யோசி. 
கணேஷ்: Kerbs என்றால்? 
ஜூலி: சாலைக்கும் நடைபாதைக்கும் இடையே ஒரு raised edge இருக்குமே அது தான். 
கணேஷ்: ஓ... புரிகிறது. அப்படி செய்தால், நடைபாதைக்கும் சாலைக்கும் வித்தியாசம் இல்லாமல் போனால் மக்கள் கண்டபடி நடப்பார்கள், வாகனங்களை மக்களிடையே ஓட்ட நேரிடும். 
ஜூலி: ஆமா, கூடவே போக்குவரத்து சிக்னல், போலீஸ் யாரும் அங்கே இருக்கவில்லை என்றால்? இது தான் shared space. இதையே ஹேன்ஸ் மோண்டர்மேன் எனும் டச்சுக்
காரர் சிறந்த பொதுவெளி வடிவமாக முன்வைத்தார். ஏனென்றால் இங்கே கார்களுக்கு அனுமதி இல்லை. அங்கே பயணிக்கும் பைக்கும் சைக்கிளும் ஓட்டுகிறவர்கள் பாதசாரிகளைக் கவனித்தபடி வேகத்தை குறைத்து ஓட்டுவதால் விபத்துகள் நடக்க வாய்ப்பு மிகவும் குறையும் என்று அவர் கருதினார். 
கணேஷ்: மன்னர் மன்னா இதை ஏன் நீங்க புதுசா அறிமுகப்படுத்தனும்? நமது நகரங்களின் பல தெருக்கள் ஏற்கனவே shared spaces தானே?

(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com