வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 320

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 320

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும்  அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. மன்னர் வீரபரகேசரி மனிதவளத்துறைஅமைச்சரின் மகனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறார். 
வீரபரகேசரி: சரி... சொல்லு. உங்க கூட்டத்தின் மேல் அவர்கள் pelted stones, அதாவது கல்லெறிந்தார்கள். அப்படித்தானே? 
அமைச்சரின் மகன்: ஆமாம் மன்னா. 
வீரபரகேசரி: நிச்சயமாகவா? 
அமைச்சரின் மகன்: ஆமா மன்னா. As true as steel.
கணேஷ்: இவர் ஏன் இப்போ எஃகு பற்றி பேசுகிறார்? மன்னர் கேட்பதற்கும் இவர் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லியே. 
ஜூலி: அதுவா? As true as steel என்றால் நிச்சயமாக, சந்தேகமே இல்லாதபடியாக என்று பொருள். Steel என்றால் எஃகு என்று மட்டுமல்ல, உறுதிப்பாடு, மனம் தளராத தன்மை என வேறு அர்த்தங்களும் உண்டு.  
கணேஷ்: அப்படியா? 
ஜூலி: சில நேரம் சில வேலைகளைப் பண்ணவே நமக்கு விருப்பமோ மன உறுதியோ இருக்காது. அப்போது பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என துணிந்து இறங்குவதை steeling oneself to do something என்று சொல்வார்கள். அதாவது to force yourself to get 
ready to do something unpleasant or difficult. 

கணேஷ்: எந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அந்த சொற்றொடரைப் பயன்படுத்துவோம்?
ஜூலி: எங்களை மாதிரி நாய்களுக்கு வெளியே நல்ல மழை பெய்து  when the scents in the streets are washed away  வெளியே உச்சா போறதுன்னாலே கடுப்பா இருக்கும்.
கணேஷ்: ஏன்? 
ஜூலி: நாங்களும் எங்களுடைய சகாக்களும் 
ஏற்கெனவே ஒண்ணுப் போய் we would have marked our boundaries, அந்த வாசனைக் குறிப்புகள் எல்லாம் அழிஞ்சு போய் சுத்தமாக எந்த ஸ்மெல்லும் இல்லாம இருக்குமே. ஒரே கசகசன்னு. At that time, we may have to steel ourselves to identify a spot and urinate there.

கணேஷ்: அடச்சே... எதாவது உருப்படியா ஒரு உதாரணம் சொல்லுமய்யா. 
ஜூலி: ம்ம்ம்... நீ விமானத்தில் பறந்துகிட்டே இருக்கே. அப்போ பார்த்து திடீரென்று விமானம் பழுதடைந்து விடுகிறது. பயணிகளை பாரசூட்டை கட்டிக் கொண்டு கீழே குதிக்க சொல்லுகிறார்கள். நீயும் அந்த விமானத்தில் இருக்கிறே. என்ன பண்ணுவே?
கணேஷ்: ஐயோ... வாய்ப்பே இல்ல.
ஜூலி: அப்படி சொன்னா விமானம் வெடிக்கும் போது நீயும் சேர்ந்து சாக வேண்டியது தான். அதுக்கு பேசாம குதிச்சிரலாமுல்ல? 
கணேஷ்: ஆமா, ஆமா. 
ஜூலி: அப்போ நீ என்ன பண்ணுவே, என்ன ஆனாலும் பரவாயில்லேன்னு நினைச்சிட்டு குதிச்சிருவே. வேற வழியில் போகும்போது நாம காட்டுற துணிச்சலைத் தான் steel oneself to do something என்று சொல்லுகிறார்கள். 
கணேஷ்: சரி, அதென்ன wash away? சுத்தமா கழுவினாப்ல மாதிரி ஆகுறதா? 
ஜூலி: ஆமா. அதுக்கு இன்னொரு பொருளும் இருக்கு தெரியுமா? 
கணேஷ்: என்ன? 
ஜூலி: கடுமையாக மழை பெய்து வெள்ளம் வந்து அப்படியே அடிச்சிட்டு போறதை wash away என்று சொல்லுவோம். உதாரணமா, In the recent flood the bridge was washed away. 

கணேஷ்: அப்போ wash out  என்று சொல்லக் கூடாதா? 
ஜூலி: அதுவா? அதற்கும் இதற்கும் ஒரு சின்ன முக்கியமான வித்தியாசம் உண்டு. சொல்றேன். வெயிட்டிங்ஸ்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com