24 மணி நேரமும் பறக்கும் டிரோன்!

21-ஆம் நூற்றாண்டில் மக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு துறைகளில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
24 மணி நேரமும் பறக்கும் டிரோன்!

21-ஆம் நூற்றாண்டில் மக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு துறைகளில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறிய அளவிலான இந்த டிரோன்கள்அவசர நேரங்களில் மருந்து மற்றும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரோன்கள் சிறிது தூரம் மட்டுமே பறக்கும் திறன் படைத்தவையாக தற்போதைக்கு உள்ளன. இருவர் மட்டும் அமர்ந்து செல்லும் வகையில் டிரோன் ஆம்புலன்ஸ் உருவாக்கமும் சோதனையில் உள்ளது.

 இந்நிலையில், தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கிய ராணுவ விமானங்களின் கண்காட்சியில் இடம் பெற்ற பல்வேறு வகையிலான டிரோன்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின. அதிலும், ராணுவத் தளவாடங்களுடன் தொடர்ந்து 24 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட பிரம்மாண்டமான சிஎச்-6 டிரோன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடிய இந்த டிரோனில் 7.8 டன் எடை  கொண்ட ராணுவத் தளவாடங்கள், ரேடார்கள், குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு செல்லலாம். 

நிலத்தில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களை தவிர்க்கும் அளவுக்கு இதில் நவீன பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, நீர்மூழ்கி கப்பல்களைக் கண்டுபிடிப்பதிலும், கடல்சார் பாதுகாப்பில் ரோந்து மேற்கொள்ளவும், பேரிடர்களை எச்சரிக்கும் பணிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம் என்று இந்த டிரோனை உருவாக்கிய சிஎச் ஆளில்லா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான சிஎச்-817  டிரோனும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. வெறும் 800 கிராம் எடையிலான இந்த டிரோனை வேறு ஆளில்லா விமானத்தில் இருந்து செலுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி டிரோன் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் நிலையில், ஆஸ்திரேலியாவில் உணவு பொருள் விநியோகம் செய்ய சென்ற டிரோனை காக்கை ஒன்று தாக்கும் சம்பவமும் பதிவாகி உள்ளது.

அந்நாட்டின் புறநகர் பகுதியான ஹாரிசான் மாகாணத்தில் காப்பியை விநியோகம் செய்ய சென்ற டிரோனை காகம் தாக்கும் விடியோ இணையத்தில் வைரலானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com