வேலை... வேலை... வேலை...

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வேலை... வேலை... வேலை...


வங்கி பணியாளர் தேர்வு கல்விநிறுவனத்தில் வேலை

நிறுவனம்: வங்கிப் பணியாளர் தேர்வு கல்விநிறுவனம் (இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங்  பெர்சனெல்  செலக்ஷன்)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:     அசிஸ்டன்ட் புரொபஸர்   - 01
சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - ரூ.1,66,541 
வயது வரம்பு: 32  வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பணி:  ஃபேகல்ட்டி  ரிசர்ச் அசோசியேட்  - 01
சம்பளம்: மாதம் ரூ.57,700 - ரூ.98,651 
வயது வரம்பு: 27 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி:  ரிசர்ச் அசோசியேட்   - 01
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ. 74,203 
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பணி:  ஹிந்தி ஆபீசர்   - 01
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - ரூ. 74,203
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி:  ஐடி என்ஜினியர்  (டேடா சென்டர்)   - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.59,478
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: ஐடி டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.59,478
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பணி: சாஃப்ட்வேர் டெவலப்பர் அண்ட் டெஸ்ட்டர் (பிரண்ட் என்ட், பேக்எண்ட்)  - 01

சம்பளம்: மாதம் ரூ.35,400 -  ரூ.59,478 

வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.  

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி(ஐடி), எம்.எஸ்சி, புள்ளியியல், ஆங்கிலத்துடன் ஹிந்தியில் முதுகலை, உளவியல், தொழில்துறை உளவியல், நிறுவன உளவியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் சம்பந்தப்பட்ட பணிப் பிரிவில் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

விண்ணப்பிக்கும் முறை: https://ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp-content/uploads/Advertisement_Various_Posts_OCT_2021.p என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.10.2021 

இந்து சமய அறநிலையத்துறை வேலை

நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை
பணியிடம்: திருவேற்காடு  அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் 

பணி: இளநிலை உதவியாளர் - 01
பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ.58,600

பணி: கடைநிலை ஊழியர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,900 - ரூ.50,400 

பணி: உதவி மின்பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.16,600 - ரூ.50,400

பணி: அம்மன் மடப்பள்ளி - 01
பணி: பரிசாரகர்  - 01
பணி: பெருமாள் கோயில் மடப்பள்ளி - 02
சம்பளம்: மாதம் ரூ.15,900 - ரூ.50,400 

பணி: ஒத்து - 01
பணி: தாளம்: 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ.58,600

பணி: டமாரம் - 01
பணி: திருச்சின்னம் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,500

பணி: முடிகொட்டகை மேஸ்திரி - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - ரூ.50,400

பணி: குழாய் பாராமரிப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,600 

பணி: தமிழ்ப்புலவர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600 
பணியிடம்: அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு

பணி: அர்ச்சகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800

பணி: ஓதுவார் - 01
சம்பளம்: மாதம் ரூ.12,600 - ரூ.39,900

பணி: பரிசாரகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800 
பணியிடம்: அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி கிராமம், திருவள்ளூர் மாவட்டம்.

பணி: அர்ச்சகர் - 01
பணி: இரவு காவலர் - 01

சம்பளம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800

தகுதி:  ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், ஒயர்மேன், எலக்ட்ரிக்கல், பிளம்பர் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், தமிழ்த்துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இந்து சமயப் பாடசாலையில் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள், தமிழில் நன்றாகப் படிக்க, எழுதத் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 01.09.2021 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
இணை ஆணையர், செயல் அலுவலர், அருமிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை - 600077 

மேலும் விவரங்கள் அறிய: www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 21.10.2021

அசாம் துணை ராணுவப் படையில் வேலை 

மொத்த காலியிடங்கள்: 1230  

பணி: குரூப் "பி' மற்றும் "சி' பணிகள் (டெக்னிகல் அண்ட் டிரேட்ஸ்மென்) 
காலியிடங்கள்: நாகாலந்த் - 105, உத்தரப்பிரதேசம் - 98, பிகார் - 91, மிசோரம் - 75, மணிப்பூர் - 74, ஆந்திரம் - 64, மஹாராஷ்டிரம் - 61, தமிழ்நாடு - 54, 
ஜார்க்கண்ட் -  51, மேற்குவங்கம் - 50, புதுச்சேரி - 03 உள்பட மொத்தம் 1230 இடங்கள் உள்ளன. 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் படித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: அறிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பணியிடங்களுக்கு 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும்,  மற்ற பணியிடங்களுக்கு 18 - 25, 20 - 25, 20 - 28 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதித் தேர்வு, எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : www.c.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள: www.assamrifles.gov.in/DOCS/NEWS/TECH%20TDN.pdf என்ற லிங்க்கைக் கிளிக்  செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2021 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com