நிலவுப் பாறைகளின் ரகசியம்!

நிலவு என்றாலே குளுமைதான் நமது நினைவுக்கு வரும். ஆனால், நிலவில் ஒரு காலத்தில் எரிமலையின் சீற்றம் இருந்தது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.
நிலவுப் பாறைகளின் ரகசியம்!


நிலவு என்றாலே குளுமைதான் நமது நினைவுக்கு வரும். ஆனால், நிலவில் ஒரு காலத்தில் எரிமலையின் சீற்றம் இருந்தது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.

சீனா கடந்த ஆண்டு டிசம்பரில் நிலவிலிருந்து பூமிக்கு கொண்டுவந்த பாறைத் துண்டுகளை ஆராய்ச்சி செய்ததில்தான் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.

நிலவிலிருந்து 1970-களில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் பாறை மாதிரிகளைக் கொண்டு வந்தன. அதன் பிறகு மூன்றாவது நாடாக சீனா, கடந்த ஆண்டு "சாங்கே-5' என்ற விண்கலம் மூலம் நிலவிலிருந்து பாறை மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்தது.

அந்தப் பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில் நிலவின் வேதியியல் கலவை மற்றும் வெப்பம் நிலவில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதுகுறித்து லீ ஜியான்குவா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகையில், ""பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், நிலவில் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை எரிமலைச் செயல்பாடுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. முன்னர் இந்தச் செயல்பாடுகள் 200.8 கோடி ஆண்டிலிருந்து 300 கோடி ஆண்டுகளுக்குள் நின்றுவிட்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது. நிலவில் எரிமலைச் செயல்பாடுகள் மிக முக்கியமான விஷயம் ஆகும். அவை நிலவுக்குள் உள்ள ஆற்றல் மற்றும் பொருள்களின் மறுசுழற்சி ஆகியவற்றைக் காட்டுகின்றன என்றார்.

ஒரு சிறுகோளிலிருந்து பாறை மாதிரிகளையும், நிலவிலிருந்து மேலும்  பல மாதிரிகளையும் பூமிக்குக் கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது. மேலும், நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும், அங்கு ஓர் அறிவியல் தளத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகள் பெய்ஜிங்கில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அவற்றைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com