உணர்ச்சிக் குறியீடுகளுக்கான வலைதளங்கள்!

முகநூல் , சுட்டுரை , வாட்ஸ்ஆப் , இன்ஸ்டாகிராம் போன்ற அதிகப் பயன்பாடுகளைக் கொண்டுள்ள சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சலை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குரூப்
உணர்ச்சிக் குறியீடுகளுக்கான வலைதளங்கள்!


முகநூல் , சுட்டுரை , வாட்ஸ்ஆப் , இன்ஸ்டாகிராம் போன்ற அதிகப் பயன்பாடுகளைக் கொண்டுள்ள சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சலை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குரூப் மெயில் போன்ற மேலும் சில இணையப் பயன்பாடுகளிலும் தங்களது கருத்துகளை உணர்வுப்பூர்வமாகவும், சுருக்கமாகவும் தெரிவிக்கச் சிலர் உணர்ச்சிக் குறியீடுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலான சிறிய அளவிலான ஸ்மைலிகளை உள்ளீடு செய்து அதற்கான பயன்பாட்டை அதிகரித்தனர். தற்போது சில சமூக வலைதளங்களில் எழுத்து வழியிலான அரட்டையில் மட்டும் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் பலவிதமான ஒட்டுப் படங்கள் (ஸ்டிக்கர் பிக்சர்ஸ்) கூட உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கணினியிலும், இணையத்திலும் அதிகமான தொடர்புடையவர்கள் கூட நன்கு அறிந்த ஒரு சில உணர்ச்சிக் குறியீடுகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். சில குறியீடுகளுக்கு நகைமுகம் தோன்றுவதால் அது குறித்து ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது. இது போன்று அனைத்து உணர்ச்சிக் குறியீடுகளுக்கும் பொருள்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை.

மேலும் இந்த உணர்ச்சிக் குறியீடுகளும் மேற்கத்திய குறியீடுகள், கிழக்கத்திய குறியீடுகள் என்று சில வகைப்பாடுகளில் வேறுபாடுகளையும் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நமக்கு யாராவது அனுப்பியுள்ள உணர்ச்சிக் குறியீடுகளுக்கு என்னபொருள் என்பது கூடத் தெரிவதில்லை. பொருள் தெரியாத உணர்ச்சிக் குறியீடுகளுக்கான பொருளைத் தெரிந்து கொள்ளவும், நாம் பிறருக்கு அனுப்புவதற்குத் தேவையான புதிய உணர்ச்சிக் குறியீடுகளைப் பெறுவதற்கும் உதவும் தளமாக எமோஜிபீடியா (https://emojipedia.org) எனும் தளம் அமைந்திருக்கிறது.

இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் நமக்குத் தேவையான உணர்ச்சிக் குறியீட்டின் பெயரினை உள்ளீடு செய்து, அதற்கான தேடலில் தேவையான பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகளைக் கண்டறிவதற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், விரைவாக நமக்குத் தேவையான உணர்ச்சிக் குறியீடுகளைக் கண்டறிந்து கொள்ள முடிகிறது.

இத்தளத்தில் வகைப்பாடுகள் எனும் தலைப்பில் ஸ்மைலீஸ் & பீப்பிள், அனிமல்ஸ் & நேச்சர், ஃபுட் & ட்ரிங், ஆக்டிவிட்டி, ட்ராவல் & பிளேசஸ், ஆப்ஜெக்ட்ஸ், சிம்பல்ஸ், ஃபிளாக்ஸ் ஆகிய தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன். இத்தலைப்புகள் ஒவ்வொன்றிலும் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகள் தரப்பட்டிருக்கின்றன.

மோஸ்ட் பாப்புலர் எனும் தலைப்பின் ரெட் ஹார்ட், ஸ்பார்க்கில்ஸ், ஃபயர், ஸ்மைலிங் ஃபேஸ் வித் ஸ்மைலிங் அய்ஸ், ஃபேஸ் வித் டியர்ஸ் ஆப் ஜாய், செக் மார்க், பிளீடிங் ஃபேஸ், ஸ்மைலிங் ஃபேஸ் வித் ஹார்ட்ஸ், ஹார்ட் ஆன் ஃபயர் போன்ற தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தலைப்புகள் ஒவ்வொன்றிலும் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகள் தரப்பட்டிருக்கின்றன.

ஈவென்ட்ஸ் எனும் தலைப்பில் பிறந்த நாள், காதலர் நாள், சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், தீபாவளி, பட்டப்படிப்பு, தந்தையர் தினம், ஹாலோவீன், ஹோலி, சுதந்திர தினம், மகளிர் தினம், அன்னையர் தினம், உலகக் கோப்பை என்பது போன்ற 49 தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தலைப்புகள் ஒவ்வொன்றிலும் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகள் தரப்பட்டிருக்கின்றன.

இதே போன்று ஆப்பிள், சாம்சங், எல்ஜி, மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள், முகநூல், சுட்டுரை, வாட்ஸ்ஆப், ஸ்கைபீ, டெலிகிராம், மெசஞ்சர் போன்ற சமூக வலைதளங்கள் என்று மொத்தம் 43 தலைப்புகளில் பயன்படுத்தப்பட்டு வரும் உணர்ச்சிக் குறியீடுகளை அறிந்து கொள்வதற்கான வசதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இத்தலைப்புகள் ஒவ்வொன்றிலும் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகள் தரப்பட்டிருக்கின்றன.

இத்தளத்தில் எமோஜி வெர்சன்ஸ் எனும் தலைப்பின் கீழ் 11 பதிப்புகளும், ஒருங்குறிப் பதிப்புகள் (யுனிகோட் வெர்சன்ஸ்) எனும் தலைப்பின் கீழ் 19 பதிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இத்தலைப்புகள் ஒவ்வொன்றிலும் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகள் தரப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு உள் தலைப்புகளின் கீழும் பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகள், அதற்கான முழுத் தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.

அந்த உணர்ச்சிக் குறியீடு ஒவ்வொரு நிறுவனப் பதிப்பிலும் எப்படியிருக்கும்? என்கிற படங்களும் தரப்பட்டிருக்கின்றன. மேலும் இத்தளத்தில் புள்ளிவிவரங்கள், குடும்பங்கள், உதவிகள், ஆலோசனைகள் என்று உணர்ச்சிக் குறியீடுகள் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளும், அதற்கான விளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன.

முகநூல், சுட்டுரை, வாட்ஸ்ஆப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும், இணையப் பயன்பாட்டுத் தொடர்புகளிலும் உங்களுக்குப் பிடித்தமான உணர்ச்சிக் குறியீடுகளையும், நகைமுகங்களையும் அதிகமாகப் பயன்படுத்தி அசத்திட விரும்புபவர்கள் https://emojipedia.org/ எனும் இணைய முகவரிக்குப் பயணிக்கலாம்.

இதே போன்று, தங்களுக்குத் தேவையான உணர்ச்சிக் குறியீடுகளை ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி அறிந்து பயன்படுத்த விரும்புபவர்கள் http://www.emoticonr.com/ எனும் இணையதளத்தைப் பயன்படுத்தலாம். இங்கு உணர்ச்சிக் குறியீட்டிற்கு என்னென்ன எழுத்துகளைப் பயன்படுத்தினால், எந்த உணர்ச்சிக் குறியீடு கிடைக்கும்? அது எந்த நிறுவனப் பயன்பாட்டில் இருக்கிறது? என்பது போன்ற தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com