வாட்ஸ்ஆப்... புதிய சேவைகள்!

தகவல் பரிமாற்றம் செய்வதற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப்பில் காலத்துக்கு ஏற்ப நவீன  புதிய சேவைகள் இணைக்கப்பட்டு வருகின்றன.
வாட்ஸ்ஆப்... புதிய சேவைகள்!

தகவல் பரிமாற்றம் செய்வதற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப்பில் காலத்துக்கு ஏற்ப நவீன புதிய சேவைகள் இணைக்கப்பட்டு வருகின்றன. பயன்பாட்டாளர்களைக் கவர்வதற்காக இதுபோன்ற புதிய சேவைகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்துஅறிமுகம் செய்து வருகிறது.

கரோனா பொது முடக்க காலத்தில் வீட்டில்முடங்கிக் கிடந்த அனைவரையும் அருகில் வந்து நிற்க வைத்தது வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு.

வாட்ஸ்ஆப் அழைப்புகளை இணைக்கும் புதிய சேவை கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது வாட்ஸ்ஆப் குரூப் பகுதியில் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குரூப் சாட் பகுதியில் இருந்தவாறே குழுவின் விடியோ அழைப்பு சேவையிலும் பங்கேற்கலாம். முன்பு விடியோ அழைப்பு சேவைக்கு சென்றுதான் பங்கேற்க வேண்டியிருந்தது.

உங்கள் குழுவில் நடைபெற்று வரும் விடியோ அல்லது தொலைபேசி அழைப்புகளை சாட் பகுதியில் இருந்தே கண்டறிந்து பங்கேற்கலாம்.

அதுமட்டுமன்றி, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அந்தக் குழுவில் இணையலாம் அல்லது வெளியேறலாம். முன்பு அந்தக் குழுவினர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இணைய முடியும். வெளியேறி விட்டால் மீண்டும் இணைய முடியாதபடி இருந்தது.

நீங்கள் உறுப்பினராக உள்ள குழுவில் விடியோ சாட் நடைபெற்று வந்தால் அதில் இணையவதற்கான பொத்தான் அந்தக் குழுவின் பெயரிலேயே இருக்கும். தனிநபர் பெயரில் இருக்காது.

மேலும், வாட்ஸ்ஆப்பில் குரல் பதிவு தகவல்களை அனுப்புவதற்கு முன்பு நாம் என்ன பதிவு செய்துள்ளோம் என்பதைக் கேட்கும் புதிய சேவையும் அறிமுகமாகி உள்ளது. குரல் பதிவை பதிவு செய்யும் பொத்தானில் இருந்து விரலை எடுக்காமல் அப்படியே பிளே செய்ய வேண்டும்.

பின்னர் அதை அனுப்ப வேண்டுமென்றால் அனுப்பலாம் அல்லது அழித்து விடலாம். மேலும், வாட்ஸ்ஆப்பில் ஒருவரின் மன நிலையைக் காட்டும் ஸ்டேடஸ் அப்டேட்டை குறிப்பிட்ட நபர்கள் பார்ப்பதை தடை செய்யும் வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com