வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 310

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 310


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னரைப் பார்க்க, அந்தப்புரத்தில் இருந்து லலிதாங்கி கோபமாக வருகிறாள். லலிதாங்கியைச் சமாதானப்படுத்தும் 
நோக்கில் மன்னர் அவளிடம் அளவளாவிக் கொண்டிருக்கையில் சட்ட அமைச்சர்  அங்கு அழுதபடி வருகிறார். அவர் தன்னை சில அமைச்சர்கள் ஒரு சைபர் கிரைமில் மாட்ட வைத்து அவதூறு செய்வதாகப் புலம்புகிறார். அந்த காணொளியைக் கண்டதும் மன்னர் what a shame என்கிறார். அதை ஒட்டி ஒரு சந்தேகத்தை கணேஷ் ஜூலியிடம் கேட்கிறான்.
கணேஷ்: ஜூலி,  what  a shame  என்றால் மன்னர் ரொம்ப அசிங்கமாக உணர்கிறார் எனப் பொருளா?
ஜூலி: இல்லை, இது embarrassing, ashamed எனும் பொருளைத் தராது. மாறாக  unfortunate, துரதிஷ்டவசமானது எனவே அர்த்தம் வரும். 
கணேஷ்: Shame என்பதற்கு அவமானகரமானது எனும் அர்த்தமில்லையா?
ஜூலி: What a shame எனும் தொடரில் அப்பொருள் இல்லை.
கணேஷ்: புரியலியே
ஜூலி: இப்போ நீ ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலிக்கிறாய். ஒருநாள் நிறையச் சிரமப்பட்டு பணம் சேர்த்து, அதைக் கொண்டு அவளை ஒரு ரெஸ்டெரெண்டுக்கு அழைத்துச் செல்கிறாய். அப்போ ஒரு எதிர்பாராத திருப்பம்.

கணேஷ்: என்ன, அங்கே என் பர்ஸ் தொலைந்து விடுகிறதா?
ஜூலி: அதான் இல்லை. அவள் அங்கே அழகிய இளைஞனுடன் வருகிறாள். இவன் என் bestie என அறிமுகப்படுத்துகிறாள். 
இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து பேசுகிறார்கள். They speak sweet nothings into each other’s ears. 

கணேஷ்: ஸ்வீட் நத்திங்க்ஸா? அதென்ன புதுசா இருக்கு...
ஜூலி: கேட்க எந்த முக்கியத்துவமும் இல்லாத காதல் மொழி. அதாவது words of affection exchanged by lovers. அவன் சொல்கிறான், நேத்து நீ போன் பண்ணினப்போ நான் அதிர்ச்சி ஆகிட்டேன்.ஹி... ஹி... வொய் டா? நீ தூங்கிட்டேன்னு நினைச்சு வேறெதாவது பொண்ணுகிட்ட சாட் பண்ணலாமுன்னு ஹாய், ஹலோன்னு மெúஸஜ் அனுப்பிட்டு இருக்கிறேன், அப்போ திடீர்னு நீ வந்து டேய்ங்கிற... ஆமா, அப்போ நான் நினைச்சது சரி தானா? இப்படி அவங்களுக்குள்ளே பேசிப் பேசி சிரிக்கிறாங்க. அது தான் sweet nothings. 

கணேஷ்: கேட்கவே எரிச்சலா இருக்கே. சரி, சொல்லி முடி.
ஜூலி: இப்படியெல்லாம் நடந்து முடிஞ்சு சாப்பிட்டு நீ பில்லு கட்டுற வரைக்கும் அவ உன்னைக் கண்டுக்கவே இல்ல. அப்போ நான் அந்த பக்கமா வாக்கிங் வரேன். நீ பரிதாபமா அவளையும் அவளோட பெஸ்டியையும் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்து சொல்கிறேன், What a shame! இதையே What a pity! என்றும் சொல்லலாம். இதன் அர்த்தம் நான் உன்னைப் பார்த்து அசிங்கமா, அவமானமா, பரிதாபமா இருக்கிறதுன்னு சொல்றேன்னு இல்ல. மாறாக, ஐயோ உன் கதி இப்படியாகிடுச்சே கணேசா, இது ரொம்ப துரதிஷ்டமப்பா, உனக்கு இப்படி 
ஆகியிருக்கக் கூடாது என உனக்கு ஆதரவா மென்மையா வருத்தத்தை தெரிவிக்கிறது ஆகும்.
கணேஷ்: எல்லாம் சரி, அதென்ன bloody shame, dog-gone shame, crying shame?

ஜூலி: Bloody என்றால் அது ஒரு curse word. இங்கே ரொம்ப எனும் பொருள். ரொம்ப துரதிர்ஷ்டமானது என அர்த்தம். Doggone என்பது எரிச்சலை, ஆச்சரியத்தை, சில நேரங்களில் மகிழ்ச்சியை தெரிவிக்கப் பயன்படும் ஒரு ஹக்த்ங்ஸ்ரீற்ண்ஸ்ங். உதாரணமா, it is good to be back at campus GuTûR it is dog gone good to be back at campus என்று சொல்லலாம். அப்போது கடைசியாக கல்லூரி வளாகத்துக்குத் திரும்பியது செமையான மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பொருள். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் You doggone fool என்று திட்டலாம். நீ ஒரு தப்பு பண்ணி மாட்டிக்கிடும் போது இப்போ என் கதி அதோகதி தான் எனும் பொருள், I will be doggoned now  எனச் சொல்லலாம். 

கணேஷ்: Crying என்றால் அழுகையை வரவழைக்கும்படியானது என அர்த்தமா?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com